தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்:
பேசுதல் =பொருள் கெடாமல் பேசுதல்
கூறுதல் =கூறு படுத்திச் சொல்லுதல்
பகர்தல் =அழகாகப் பேசுதல்
சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்
பொழிதல் =இனிமையாகப் பேசுதல்
இயம்புதல் =அழுத்தமாகப் பேசுதல்
அருளுதல் =தவத்தில் சிறந்தோர் பேசுதல்
அறைதல் =தொடர்பில்லாமல் பேசுதல்
செப்புதல் மொழிதல் பறைதல், பிறழ்தல்,உளர்தல் ஆகியவை கூட பேசுவதின் பிற தூய தமிழ் சொற்கள்
ஏசுதல் - கண்டிப்புடன் சொல்லல்
திட்டுதல்- அவதூறான சொற்களை பிறர் மனம் புண்படக்கூடியவகையில் சொல்லல்
கதைத்தல் - ஈழத்தமிழர்/இலங்கைத்தமிழர் வழக்கு
No comments:
Post a Comment