சில( பேதைகள்) சொல்வதைப்போல, புரட்சிக் கவி பாரதி ”மெல்லத் தமிழினிச் சாகும்-” என சொல்லவில்லை. மாறாக அவ்வாறு சொல்பவர்களை பேதை என்றே அவர் சொன்னார். மேலும் படிக்க> புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை-அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
*****மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் *பேதை உரைத்தான்-ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ? ****
என்று முடிக்காமல், அதற்கான வழியையும் முன் வைத்தான் .நாம் அதனை பின்பற்றுகிறோமா!
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
எட்டு திக்கும் சென்றோம் இங்கே கொண்டு வந்து சேர்த்தோமா என்பதே கேள்வி ? அங்கேயே சென்று இருந்துவிட சொல்லவில்லை பாரதி .
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்; "
இதனை கூறிவிட்டு நாம் நிறுத்தி விடுவோம் . பாரதி வெறுமனே மொழியின் புகழ் பாடிவிட்டு நிறுத்திவிடவில்லை . அவன் புரட்சிக்கவி . சாதாரண கவிஞர்கள் போல் அல்லாததால தான் இன்னமும் உயிர் வாழ்கிறான் .
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
மொழியின் அழகை உணர்ந்தவர் அதன் தொடர்ச்சியை விரும்பியவர் .அதனோடு நிறுத்திவிடவில்லை .அதற்கு வழியும் சொல்லி இருக்கிறார் . மேலே உள்ள வரிகளை கவனிக்கும் பலர் அவர் காட்டிய வழியில் பயனிப்பதில்லை என்பது நிதர்சனம் .
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
நாம் வெளிநாட்டவரை ,வெளிநாட்டு மொழிகளை வணக்கம் செய்கிறோமே தவிர அவர்கள் எம் மொழியை எம்மை பின்பற்றவேண்டும் என்று நினைப்பதில்லை .
இப்படி செய்தால் யார் யார் எல்லாம் விழித்து கொள்வர் என்றும் கூறுகின்றார் .
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். -> பாரதியின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம் !

No comments:
Post a Comment