Monday, December 9, 2013

GOLD & DIAMOND தங்கம் : வைரம்: ஒரு சிறப்பு பார்வை.


தங்கம் என்பது ஒரு உலோகம் (Metal), உலோகங்களில் மிகப்பெரிய சுயநலவாதி என்று கூட சொல்லலாம், தகரமும் (Tin, Sn) ஒரு உலோகம் தான், இரும்பும் (Fe) ஒரு உலோகம் தான், இவர்கள் மூவருக்கும் ஒரே வித்தியாசம் ப்ரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் எண்ணிக்கையில் சிறு வித்தியாசம் தான், ஆனால் அவர்களுக்கு (இரும்பு, தகரம்) ஏன் மதிப்பில்லை என்றால் அவர்கள் பொதுநலவாதிகள், தங்கம், தகரம் இரண்டு அணுக்கள் முன்னாடி ஒரு 'ஆக்சிஜென்' அணு இரண்டு எலெக்ட்ரான்கள் வேண்டும் என்று வந்து நின்றால், 'தகரம்' தன் எலெக்ட்ரானை உடனடியாக குடுத்து விடுவான்,, அதற்கு பெயர் தான் வேதியலில் 'ஆக்சிடேஷன்' (Oxidation) என்பதாகும். இப்போது தங்கம், தகரம் இரண்டு நபர்களும் ஆளுக்கு இரண்டு 'எலக்ட்ரான்கள்' குறைபாடோடு இருக்கிறார்கள்,
அதாவது, தங்களிடம் எப்பவும் இருக்கும் எலெக்ட்ரான் எண்ணிக்கையை விட இப்போது இரண்டு குறைவாக உள்ளது (இப்போது அதன் பெயர் 'ஐயன்ஸ்' 'ions') இப்போது அவர்கள் முன்னே எங்கிருந்தோ இரண்டு எலக்ட்ரான்கள் வருகிறது என்றால், தங்கம் உடனடியாக பாய்ந்து சென்று,,, ஒவ்வொரு அணுவும் தனித்தனியாக இரண்டு எலக்ட்ரான்களை கவ்விக்கொண்டு முழுமை அடைந்து விடுவார்கள்,, இதற்கு பெயர் தான் பெயர் தான் 'ரெடக்ஷன்' (Reduction),, இப்போது எந்த இரண்டு அணுக்களை வைத்தாலும் ஏதோ ஒன்று தான் எலெக்ட்ரான்களை கவ்வி கொள்ளும், மற்றொன்று வேடிக்கை தான் பார்க்கும், இதில் எந்த அனுவுடன் வைத்தாலும் 'தங்க' அணு தான் முதலில் எலக்ட்ரான்களை கவ்வும்,, தங்கம் இல்லாமல் போனால்தான் அடுத்த நபருக்கு வாய்ப்பு அடுத்து யார் என்பதற்கு ஒரு லிஸ்ட் இருக்கிறது அதன் பெயர் தான் "EMF Series" (கெமிஸ்ட்ரி மக்களுக்கு நன்னா புரியும்),
இப்போ 'வைரம்' என்பதை விளக்க இவ்ளோ கஷ்டப்பட தேவையில்லை,, நேத்து எரிச்சுப்போட்ட விறகு கரித்துண்டு இல்லன்னா சிகிரட் ஆஷ், என எது எரிந்து போனாலும் மீதமுள்ளதை கொண்டு வந்து உங்களால் முடிந்தவரை நன்றாக அழுத்தி, நிலத்தில் சுமார் நூறு ஐம்பது முதல் நூறு கிலோமீட்டர் ஆழமுள்ள ஒரு குழியை தோண்டி புதைத்து வைத்து விடவும், அடுத்த நாளே தோண்டி எடுத்து பார்த்தால் அது வைரமாக மாறியிருக்கும், கரித்துண்டும் வைரமும் ஒன்று தான், இரண்டும் 'கார்பன்' அணுக்களால் ஆனா கூட்டமைப்பு தான், வெவ்வேறு வடிவத்தில் இருப்பதால்,, (இரண்டுக்கும் 'எலெக்ட்ரான்கள் ஷேரிங்' மட்டும் தான் வித்தியாசாம்), சிம்பிள் ரூல் என்னவென்றால், நீங்கள் "கரித்துன்டிற்கு உயர் அழுத்தம் குடுத்தால் அது வைரமாக மாறிவிடும்,,இரண்டும் 'கார்பன்' அணுக்களால் ஆனா கூட்டமைப்பு தான்".

No comments:

Post a Comment