கோயம்புத்தூரை சேர்ந்த IFGTB வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகம் உயர் ரக பாரம்பரிய வகை நாற்றுக்களை அவற்றின் வம்சா வழியை தெரிவுசெய்து வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். விதை வங்கி எனும் புதிய முயற்சி பற்றி இந்நிறுவனத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறுவதாவது;
"மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகத்தை சார்ந்த வல்லுனர்கள் ...உயர் ரக தாய் மரங்களின் கிளைகள் மற்றும் விதைகளை தெரிவுசெய்து அப்படி பிரித்தெடுக்கப்பட்ட கிளைகளை மண் படுக்கைகளில் fertigation எனும் முறையில் (fertilizers mixed in water) வளர்க்கிறார்கள். பின்பு குறித்த கால இடைவெளியில் வளர்ந்த கிளைகளை வெட்டியெடுத்து இடம் பெயர்த்து நடுகின்றார்கள்.
இம்முறையை பயன்படுத்தி மரம் வளர்ப்பதன் மூலம் அதிக அளவில் கிளைகள் துளிர்த்து அதிக அளவில் உற்பத்தியை தருகின்றன ..தனித்தனியே நாற்றுக்களை சிறு பைகளில் வளர்ப்பதை விட இம்முறையில் மணல் படுக்கையில் வளர்க்கும்போது போதிய இடமும் இருக்கின்றது. நரசரியில் வைத்து பராமரிக்கும் கால நேரம் மற்றும் அதிக இடம் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இம்முறையில் இல்லை .
பீய்யமரம் (Ailanthus excelsa): ஒரு வகை மென்மரம் ..தீக்குச்சி பென்சில் ஆகியன தயாரிக்க பயன்படும் மரம். குமிழ் ,மலை வேம்பு ,தேக்கு ,மூங்கில், பூவரசு, கதம்பம் ஆகியவற்றின் பாரம்பரிய வகைகளை இந் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்கள் இம்முறையில் வளர்க்க தேர்வு செய்திருக்கிறார்கள்.
இட வசதிகேற்ப மூன்றே மாதங்களில் சுமார் ஐந்து லட்சம் நாற்றுக்களை விவசாய /தொழில் நிறுவனங்களின் தேவைக்கு மற்றும் கோரிக்கைக்கு உருவாக்க முடியும் என்கின்றார்கள் .
மலை வேம்பு மற்றும் தேக்கு ஆகிய மரக்கன்றுகள் வளர்ப்பு பற்றிய முன் அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால் இம்மரக்கன்றுகள் எளிதில் பூச்சி மற்றும் இயற்கை காரணிகளால் அழிகின்றன ஆனால் எவ்வித முன் அனுபவம் இல்லாதோரும் இவர்களிடம் நாற்றுகளை வாங்கி வளர்க்க உத்திரவாதம் அளிக்கப்படுகின்றது.
பிளை வுட் தயாரிப்பில் முக்கியமான மலை வேம்புக்கு அதிக தேவை இருப்பதனால் இம்மரங்கள் பற்றிய முன் அனுபவமில்லாத விவசாயிகள் எவ்வித தயக்கமுமின்றி இம்மரக்கன்றுகளை இவர்களிடமிருந்து வாங்கி பயன்பெறலாம் .
(மேலும் இந்த நிறுவனம் நாற்றுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் மேம்படுத்த இயற்கை { bio-pesticides, bio-boosters, bio-fertilizers, Fixers and Mobilizers.}உயிர் உரங்கள் /இயற்கை உயிர் பூச்சி கொல்லிகள் /நிலத்தை பண்படுத்தும்நுண் உயிரிகள் /நுண்ணுயிர் உரங்கள் ஆகியனவற்றையும் தயாரித்திருக்கிறார்கள்)
மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகத்தை சார்ந்த வல்லுனர்கள் தங்கள் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி நேரடியாக விவசாய மற்றும் தொழில் நிறுவனங்கள் சென்றடைய இந்த விதை வங்கி திட்டத்தை புதிய முயற்சியாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆர்வம் உள்ளோர் இந்த நம்பரை தொடர்புக் கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். 0422-2484100
Those interested in the seedlings can contact 0422-2484100 or write to: dir_ifgtb@icfre.org
No comments:
Post a Comment