தேவர்களும்(எங்களுக்குள் உள்ள நற்குணங்கள்), அசுரர்களும்(எங்களுக்குள் உள்ள தீயகுணங்கள்) பாற்கடலான நம்மைக்(மும்மலங்களையும்) கடையும் போது, இறை துணைகொண்டு கண்டத்திற்குக் கீழ் நஞ்சாக இருக்கும் சக்தியை, கண்டத்திற்கு மேல் கொண்டுச் செல்லும்போது அந்நஞ்சே அமுதமாக மாறும். அப்போது நம் இருள் தேகத்தை, அருள்/ஒளி தேகமாக மாற்றி மரணமிலாப் பெருவாழ்வடைந்து பிறவிப்பிணியை நீக்கி இறையுடன் இரண்டறக் கலந்து பேரறிவு/ பேரின்பத்தைப் பெறலாம்.
#உடம்பினுள் உத்தமனைக் காண் - ஒளவை
பிறவிப்பிணியைத் தரும் உடம்பே நஞ்சு. ஆனால், அந்த உடம்பினுள்ளே மிகப்பெரும் ஆக்கசக்தி(மெய்) உண்டு. பிறவிப்பிணியை வெல்ல குண்டலனி சக்தியை இறைதுணையோடு தட்டி எழுப்பி சுக்கிலத்தை முதுகுத்தண்டிலுள்ள 18 முடிச்சுக்களைத்(இதுவே மெஞ்ஞான 18படிகள்) தாண்டி, கண்டத்தின் மேலெழ அமிர்தமாக மாறி, 7 சக்கரங்கள் கடந்து 7 திரைகளையும் நீக்கி, உடற்கசடுகளை நீக்கி இறைதுணையுடன் இறையுடன் இரண்டறக் கலந்து, சதாகாலமும் இறையுடனேயே நீக்கமற நிலை பெறலாம். இவ்வாறு நீக்கமற நிலைபெற்றவர்களே சித்தபெருமக்கள். இவர்கள் ஐந்தொழில்களையும் செய்யும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.

No comments:
Post a Comment