Sunday, July 28, 2013

இந்து மதம் அவ்வளவு லேசில்லை!

லப்பர் வைத்து அழித்திடும் அளவிற்கு இந்து மதம் அவ்வளவு லேசில்லை! நானும் இந்து வெறியனில்லை!!


இது யார் மனதையும் புண்படுத்த அல்ல தான் பெரியவன் என்ற ஆணவத்திலும் கர்வத்திலும் எழுதப்பட்டதல்ல.. டாஸ்மாக் சரக்கில் கரப்பான்பூச்சி, கரண்ட் ஷாக் அடிச்சி பெண் பலியானதில் மக்கள் ஆச்சரியம்.. . மூன்றாவது உலகப்போரில் இந்தியா வெற்றி நாராயணசாமி தகவல்.. என்பது போல இதுவும் ஒரு தகவல் செய்தி அவ்வளவே.. . 

இன்னைக்கு காலையில ஒரு பேஸ்புக் கமெண்ட் இழையில் தோழர் ஒருவர் "இந்து மதம் அவ்வளவு பழையதா?? எங்கே ஆதாரம் காட்டுங்கள்" என்று வேறொருவரைக் கேட்க அதற்கான பதிலாக புரவுசரின் ஊடாகவே பல ஆயிரம் வருடங்களை அரைமணிநேரத்தில் கடந்துலாவி தேடிய பதில்கள் கீழே (சிற்றறிவு சிலாகித்தாலும் ஆதாரம் கேக்குதே அடுத்தவர் மூளை) :


இந்து மதம் இந்தியா முழுக்க பரந்துபட்டது எனினும் நாம நம்ம எல்லைகளான தமிழகத்திற்கு உள்ளே மட்டும் பார்த்தல் நமக்குத் தெரிஞ்சி (எனக்குத் தெரிந்து) சங்க இலக்கியங்கள் தாம் எழுதி வைக்கப்பட்ட டாக்குமெட் ஆதாரங்கள் அதன்படி பார்த்தல் அகத்தியர் என்று சொல்லக்கூடியவர் (இவர் ஒரு சிவ பக்தர்ன்னு கேள்வி) தலைமையிலான தமிழ் முதற்ச் சங்க பாடல்கள் அவை கிடைக்கவில்லை.. அடுத்த தொல்காப்பியரின் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தின் ஆவணங்களைப் பார்த்தல் தொல்காப்பியம் கிடைக்கிறது.. ! (இன்றும்கூட தொல்காப்பியம் PDF வடிவில் சுலோவா கிடைக்கிது) தொல்காப்பியத்தில்




"மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"



என்றொரு பாடல் வருகிறது இதில் ""மாயோன்" எனப்படுவதும் இந்து கடவுள் தான் ""சேயோன்" என்பதும் இந்து கடவுள் தான்!! இதில் சேயோன் என்பவன் முருகன் (சிவனையும் இப்படி அழைப்பதாக கேள்வி).. ஆக தமிழின் கிடைக்கப்பெற்ற ஆகப் பழமையான ஆவணத்தில் இந்துக் கடவுள்கள் உலாவுகிறார்கள்.. . !!


சரி அப்போ தொல்காப்பிய காலத்தை அறிய தொல்காப்பியரின் காலத்தை அறிய வேணும்..



செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய முப்பதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியக் கருத்தரங்கங்களில் தொல்காப்பியரின் காலத்தையும் நாளையும் வரையறை செய்துள்ளனர்.


கோவிலூர் திருமடத்தில் மூன்று நாள்கள் நிகழ்ந்த திருவள்ளுவர் ஆண்டு கருத்தரங்கில், அறிஞர் பலரால் ஆய்வு செய்யப்பட்டு, தொல்காப்பியர் நாளும், கால எல்லையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, சித்திரைத் திங்கள் முழுமதி நாள் "சித்திராப் பெÜர்ணமி' என்றும் அவரது கால எல்லை கி.மு. 711 (BCE 711)(ஆண்டு 2721) என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. - ஏப்ரல் 29, 2010, 9:17 [IST] (ஊடக செய்தி)



இதனடிப்படையில் பொதுப்புத்தியில் கிறிஸ்துவத்தின் வயது கிறிஸ்து பிறந்து அவர் வயசுக்கு வந்த பின்புதான் ஆரம்பித்திருக்க வேண்டும் இருந்தாலும்கூட காலக்கோட்டு - 0 - இருக்கே (கிமு-கிபி) அப்படிப்பார்த்தாலும் கிறிஸ்துவத்தின் வயது 2013தானே!? இருப்பினும் ஆதார அடிப்படையில் பார்த்தல் கிறிஸ்துவத்தின் பெயரால் கிடைத்த மிகப் பழைய சான்றுப்படி (http://www.livescience.com/18697-christianity-evidence-tomb-inscriptions.html ) கண்டுபிடிக்கப்பட்ட இந்த சான்று A.D.70 தைச் சார்ந்தது! அதாவது கிமு 70 தான்! (அந்த காலகட்டத்தில் நடந்த பதிவுகள் TIME LINE AD 30 - 70 : http://www.agapebiblestudy.com/charts/TIME%20LINE%2030-70%20AD.htm -agapebiblestudy )



அடுத்து புனித இஸ்லாம்! முகம்மது பிறந்தது 570 CE (கிமு-கிபி என்ற பதங்கள் மதச்சார்பற்ற முறையில் பொதுவான காலத்திற்கு முன் BCE - பொதுவான காலம் CE எனப்படுகின்றன) எப்படியும் அவரும் வளர்ந்து வயசுக்கு வந்து 600களில் தான் இஸ்லாமிய துவக்கம் உருவாகிறது! பொதுப்புத்தியில் ரொம்ப ஈசியா கணக்குப் போட்டா 600ல் துவங்கிய இஸ்லாமின் வயது 2013ன் படி 1413 வருடங்கள் தான்!! The current Islamic year is 1434 AH -Wiki (only!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ) சிலர் ஆபிரகாமின் மூலம் 6000 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள்! (அப்படிப்பார்த்தாலும் ஹிந்து மதத்தின் அதிகபட்ச தோராய வயது ca. 3000+ !/அதற்கும்மேலும் இருக்கலாம்/) முகம்மதுவின் பிறந்த நாள் நடந்த நாள் எல்லாமே இருக்கு ஸோ ஆதாரம் அவ்ளோ அவசியமில்ல எனினும் http://www.islamic-awareness.org/History/Islam/Inscriptions/earlyislam.html "List Of Dated Muslim Texts From 1-72 AH / 622-691 CE" என்று இஸ்லாம் 600ல் இருந்தான் புழங்கத் துவங்கியது இவைதான் ஆகப் பழைய ஆதாரங்கள்னு காட்றாங்க படிச்சிக்கோங்க!



ஏற்கனவே இந்து மதம் தான் ஆகப் பழையது என்னுடைய சிற்றறிவிற்கு எட்டிய சின்ன எல்லைக்கு உட்பட்டு தொல்காப்பியத்தை ஒப்பிட்டேன்!! அந்த உதாரணங்கள் BCE - 700க்கு முற்பட்டவை! (இதன்படி கூட கிறிஸ்துவம் BCE - 70 இஸ்லாம் CE - 600 தான் !!) இன்னும் ஆதாரம் வேணும்னா பரந்துபட்ட இந்தியா இருக்கு Indus Valley Civilisationன்னு விக்கிபிடியால அடிச்சுப் பாருங்க நம்மாளுங்களுக்கு புரியுற மாதிரின்னா ஹராப்பா மொஹஞ்சதாரோ நாகரிகம்!! (Some Indus valley seals show swastikas, which are found in other religions worldwide, especially in Indian religions such as Hinduism, Buddhism, and Jainism!) இதன் ஆய்வு முடிவுகளின்படி சொல்லப்படும் தோராய காலம் Indus Valley Civilisation and Vedic period "ca. 3000-1000 BCE" !!!! இவ்வளவும் கடந்த பின் விக்கிபீடியா சொல்லுது Hinduism is often called the "oldest living religion"[7] or the "oldest living major religion" in the world - Wiki மேலதிக தகவல்களுக்கு http://en.wikipedia.org/wiki/Hinduism !!




எல்லோரையும்விட பெரியவன் என்ற ஆதாரங்கள் இருப்பினும் சொல்லுபவன் என்னவோ யோக்கிய சீலன்போல "ச்சீப் போ ஜாதி வெறி பிடித்தவன் மூடநம்பிக்கை மிகுந்தவன்"னு காறி முகத்தில் உமிழ்த்தினும் புன்னகையுடன் ஏற்று அதற்கும் பாராட்டி தன்னளவில் தன்னை நொந்து கொண்டாயினும் புகுத்தப்பட்ட ஜாதி துவேஷங்களை வெறுத்து ஒதுக்கி சொருகப்பட்ட மூடநம்பிக்கைகளை புறங்கையினும் தீண்டாமல் சிவ சிவான்னு கடந்து செல்பவனே என்னளவில் சமகால இந்து!! என் மதம் சார்ந்த என்னுடைய சுயம் நிச்சையம் இதுவாகத் தான் இருக்கும்.



பென்சில் லப்பர் வைத்து அழித்திடும் அளவிற்கு இந்து மதம் அவ்வளவு லேசில்லை! நானும் இந்து வெறியனில்லை!! -‪#‎நன்றிகள்‬



____________________________________________________


Note 1 :

Anno Domini (AD or A.D.) and Before Christ (BC or B.C.) are designations used to label or number years used with the Julian and Gregorian calendars,

Common Era (also Current Era[1] or Christian Era[2]), abbreviated as CE, is an alternative naming of the traditional calendar era, Anno Domini (abbreviated AD).[3] BCE is the abbreviation forBefore the Common/Current/Christian Era (an alternative to Before Christ, abbreviated BC)


Note 2 : ! படத்தில் உலகப்புகழ்பெற்ற யூரோப்பியன் அணு ஆராய்ச்சி மையமான CERN ஆய்வகத்தின் தலைமையகத்தில் ஹிந்து கடவுளான நடராஜரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்குக்காரணம் வட்ட வடிவ சட்டத்தில் நடராஜர் நிற்கும் விதம் ஏதோ ஒரு பிரபஞ்ச சார்பியல் கொள்கையை விளக்குவதாக இவர்கள் நம்புகிறார்கள் (நடராஜர் சிலையை சுற்றிய சட்டம் யுனிவர்ஸ்!?). இந்த ஆராய்ச்சி மையத்தி தான் நாம் தர்ம தட்டு தட்டும் www கண்டுபிடிக்கப்பட்டதாம்!? மேலும் சமீபத்தில் உலகையே திரும்பச் செய்து (ஒளியை விட வேகமாக செல்லும் துகளை கண்டறிந்து) இறந்துபோன ஐன்ஸ்டீனை வேர்க்க வைத்ததும் இது நிரூபிக்கப்பட்டால் உலகை மாற்றப் போவதும் இந்த ஆய்வகம் தான்!!

1 comment: