Friday, July 5, 2013

தானியக் கீரை – எதிர்கால சத்துணவுப் பயிர்

தானியக் கீரை – எதிர்கால சத்துணவுப் பயிர்


தானியக் கீரையானது மிக வேகமாக வளரக்கூடிய தானிய வகையை  சார்ந்தது. இலைகள் கறியாகவும், விதைகள் தானியமாகவும் நேரடியாகப் பயன்படுத்தலாம். தனியாக பயிர் செய்தால் 4.5 டன்/ஹெக்டர் அளவிற்கு கீரை மகசூலும், 1-2; டன்/ஹெக்டர் அளவிற்கு தானிய மகசூலும் பெறலாம். ஆன்டீஸ் மலைதொடரில் வாழ்ந்த பண்டைய மக்கள் இதனை புனித தானியம் எனவும், இந்தியாவில் இப்பயிரானது ராம்தானா அல்லது கடவுளின் தானியம் என்றும் அழைக்கின்றனர். வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது.விதைப்பு, அறுவடை மற்றும் உர நிர்வாகம் கிட்டதட்ட சோளத்துடன் ஒத்துள்ளது. இரண்டு அடி முதல் எட்டு அடி உயரம் வரை வளரக்கூடிய இக்கீரை, மிக குறுகிய வளர்ச்சி பருவம் (80நாட்கள்) கொண்டது.


விதைகள்
தட்ப வெப்பநிலை
16°c - 35°c
மழையளவு
200 மி.மீ - 3,000 மி.மீ (ஆண்டு மழையளவு)
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள மண்.
நிலம்தயார் செய்தல்
3 உழவு போதுமானது.
பயன்கள் :
ஊட்டச்சத்து நிறைந்த இத்தானியக்கீரை ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கீரீம் தயாரிப்பிலும் இதர பேக்கிரி பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
வடஇந்தியாவில் இத்தானிய கீரையிலிருந்து செய்யப்பட்ட "லட்டு" மிகப் பிரபலம்.
63% கார்போஹைட்ரேட் மற்றும் 12.6 -17.6% புரத சத்தும் நிறைந்த தானியக் கீரை மற்ற எல்லா வகை தானியங்களையும் விட சிறந்தது.
நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற கீரைகளிலிருந்து தனிச் சிறப்புடன் விளங்குகிறது.
குறைந்து வரும் மழையளவு, வெப்பத்தைத் தாங்கி வளரும் திறன், எல்லா மண் வகைகளிலும் வளரும் திறன் என பயிர் செய்வதற்கு ஏற்ற சூழலை தருவதோடு சத்து மிக்க கீரை / தானியமாகவும் இருப்பது, சந்தை வாய்ப்பும் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் இதனை பயிர் செய்ய முயற்சி மேற்கொள்ளாலாம்.
மேலும் விபரங்கள் பெற :
முதல்வர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்  - 641 301
தொலைபேசி : 04254-22010 Extn 202 (or) 222398
அலைபேசி  : 94433 77970

No comments:

Post a Comment