Tuesday, July 30, 2013

காலம்.....




காலம்.....



காலம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நேரம் தான்...உண்மையில் நேரம் என்பது அளவீடு...காலத்தை நிமிடம்,நொடி,மணி என்றும் வெவ்வேறு அளவுகளீலும் குறிக்காலம்...
காலத்தை விஞ்ஞானிகள் ,சற்று மறுபட்டு நீண்ட காலத்தை ஒளியாண்டாகவும்,மிக குறுகிய காலத்தை நானோ செக்ண்ட்டிலும் குறிக்கின்றனர்..

சரி தலைப்பிற்க்குள் செல்வோம்.....காலத்தை பற்றி எழுதும் போது முதலில் வரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தான்...

அவரின் (theory of relativity) கோட்பாட்டின் படி காலமும் நம்முடன் சேர்ந்தே பயணிக்கிறது.....அதாவது காலம் சார்புடையது என்பதே அவருடைய கோட்பாடு....அதன் அடிப்படையில் பார்த்தால் விண்வெளி தோன்றிய அதே கணத்தில் தான் காலமும் தோன்றியுள்ளது என்பது நமக்கு தெளிவாக புலனாகிறது.ஆகவே காலமும் வெளியும் சார்புடையது என்று ஐன்ஸ்டைன் தன் கோட்பாட்டில் கூறியுள்ளார்.

காலத்தை பற்றி நன்கு புரிந்து கொள்ள நாம் பேரண்டம் உருவாகிய நிலைக்கு முன் செல்ல வேண்டும்.அறிவியலில் நான் கற்று தெரிந்து கொண்டது வரை,நமது பேரண்டம் மிக சிறிய,மிகவும் அடர்த்தி கொண்ட ஒரு புள்ளி இருந்ததாக கருதப்படுகிறது(singularity) இன்னும் அவற்றை பற்றி தெளிவான விபரங்கள் அறிவியலால் கண்டறியப்படவில்லை.பின் அந்த அடர் மிகுந்தபுள்ளி மிகப்பெரிய அளவிற்கு ஊதி,வீங்கி,பின் வெடித்தது..இவற்றை தான் பெருவெடிப்பு (பிக் பாங்க்) என்று கூறுகின்றனர். அதன் பின்பு தான் இப்போது உள்ள பேரண்டம் படிப்படியாக உருவாகியுள்ளது.

எனடா இவன் வேறு எங்கே கொண்டு செல்கிறான் என்று தோன்றினாலும்..இவற்றில் தான் முக்கிய நிகழ்வு உள்ள்து...பெருவெடிப்பு ஏற்பட்ட அதே கணத்தில் தான் காலமும் உருவாகியுள்ளது.அது வரை காலம் என்ற ஒன்றே இல்லை அவற்றை t=0 என்று குறித்தனர்.
பெருவெடிப்பிற்கு முன்பு காலம் என்ற ஒன்று இருந்ததா? என்ற வினா எழலாம்...இது வரை அதற்க்கான விடை கண்டறியப்படவில்லை.. பிக் பாங்க்கு முன் என்ன நடந்திருக்க வாய்ப்புள்ளது பற்றி சில கோட்பாடுகள் வெளிவந்துள்ளன...அவற்றின் படி பிக் பாங்க்கு முன் காலமும் பின் நோக்கி சென்றுள்ளது என கூறப்பட்டுள்ளது....இது வரை அக்கூற்று நிருபிக்கப்படவில்லை...

மிக லேசான துகள்கள் பின் கனமுலகங்கள் பின் நட்சத்திரங்கள் பின் கோள்கள்,அண்டம் மேலும் மேலும் உருவாக அடிப்படை காரணம் காலம் மட்டும் தான்...காலம் நின்று விட்டால் அனைத்தும் நின்று விடும்..அந்த நிலை வர வாய்ப்பே இல்லை என நம்புகிறேன்....அந்த நிலை ஏற்ப்பட்டால் நமக்கு வயது என்றும் மாற்றம் அடையது...ஏன் நம் இதயம் கூட துடிக்காது...

ஆனால் காலத்தின் வேகத்தை குறைக்க சில விஞ்ஞானிகள் யோசனைகளை கூறுகின்றனர்..அவர்களுள் முக்கியம்மானவர் ஹாக்கிங்....இவர் கூறியதின் படி கருந்துளை அருகே சென்று பயணம் செய்து பின் மீண்டும் பூமியை அடையும் போது நமது காலத்தில் பெரும் மாற்றம் காண்ப்படும்..(இவற்றை கிழே விவரிக்கிறேன்)
இக்கூற்று இன்னும் நிருபிக்கப்படவில்லை..
ஏனெனில் கருந்துளையை அடைவது மிக கடினம்.. ஆனால் இக்கூற்று சாத்தியமாக வாய்ப்புள்ளது..
ஏனெனில் கருந்துளையின் திணீவு மற்றும் ஈர்ப்புவிசை நமது காலத்தில் மாற்றம் ஏற்படுத்தலாம்.

ஐன்ஸ்டைன் கூறியதாவது ,நம் வாழ்க்கை சராசரி 60 ஆண்டு காலங்கள் ஆனால் நம்முடைய நகரும் வேகத்தை பொறுத்து நமது காலத்தில் மிகச்சில வினாடிகள் அதிகரிக்கின்றன...அந்த காலமாற்றத்தை நம்மால் உணர முடியாது...ஆனால் இதே வேகம் வெளியில் மிகப்பெரும் தாக்கத்தை காலத்தில் ஏற்படுத்தும்...நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்க முயற்சிக்கும் போது நமது காலம் வெகுவாக குறைக்கப்படும்...நாம் ஒளியின் வேகத்தை நெருங்குவது மிகக்கடினம் ஏனெனில் ஒளியின் வேகத்தை நெருங்கையில் பயணம் செய்யும் பொருளின் திணிவு(mass) அதிகரிக்கும்.இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் நம்மால்,திணிவு அதிகரிக்க அதிகரிக்க வேகம் குறையும்..ஆகவே ஒளியின் வேகத்தில் பயணிக்கவே முடியாது...என்பது புலனாகிறது...

காலத்தை ஆராய்கையில் ஐன்ஸ்டைன் கண்டதாவது,காலமும் இடத்திற்கு இடம் மாறுபடும்....ஒடும் ஆற்றை போல சில இடங்களில் வேகமாகவும் சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் நிலையாகாவும் மாறி மாறி காணப்படுகிறது....
காலமாற்றம் ஈர்ப்புவிசை,கோளின் சுழற்சி,திணிவை பொறுத்து மாறுகிறது.. காலம் பூமியில் ஒரு மாதிரியும்,வெளியில் மாதிரியும் செயல்படுகிறது...காரணம் ஈர்ப்புவிசையே....ஈர்ப்புவிசை மற்றும் திணீவு கால மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது...எனெனில் இவற்றை பொறுத்து தான் பொருளின் வேகமும் அமையும்..இதற்கு ஹாக்கிங் கூறிய (எ.கா) பார்ப்போம்..

ஹாக்கிங் கூறியதாவது,பிரமீடுகளின் அருகே நிற்கும் போது,நமது நேரம் குறைவாகவும்,பிரமீடுகளை தாண்டி செயல்படுபவர்களின் நேரம் வேகமாகவும் இருப்பதை காணலாம்..எனக்கூறினார்...

காரணம் பிரமீடுகளின் திணிவு காலத்தீல் மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது...ஆகவே நாம் பிரமீடுகளின் அருகே நாம் நிற்கும் போது நம் திணிவும் பிரமீடுகளின் திணிவும் ஒன்றாக்கப்படுகிறது...( பிரமீடுகளின் திணிவு+நம்முடைய திணீவு)... இப்போது பிரமீடுகளின் நேரம் என்னவோ அதுவே நம்முடைய நேரமாகும்...ஆகவே தான் பிரமீடுகளின் அருகே நிற்கும் மனிதனின் நேரமும், பிரமீடுகளின் தொலைவில் நிற்கும் மனிதனின் நேரமும் சற்று மாறுபட்டு காணப்படுகிறது...

இந்த ஒரு (எ.கா)வை கொண்டு நம்மால் எளிதாக வெளியுலும் பூமியுலும் ஏற்படும் காலமாற்றத்தை புரிந்து கொள்ள முடியும்....பூமியானது விண்வெளியில் உள்ளது.இவற்றின் திணிவு சுமார் 59720000000000 டன்கள் என கண்க்கிடப்பட்டுள்ளது.....இந்த மிகப்பெரிய திணிவின் தாக்கத்தினால் பூமியுனுள்..காலத்தின் வேகம் விண்வெளியை காட்டிலும் குறைவாக உள்ளது...

விண்வெளியில் ஈர்ப்புவிசையின் அளவு மிக மிக குறைவாக இருப்பதால்,காலம் வேகமாக காணப்படும்... ஐன்ஸ்டைனின் இக்கூற்று நிருபிக்கப்பட்டுவிட்டது.. 

இந்த மாதிரி விண்வெளீயின் வேகமான கால ஒட்டத்தால் செயற்கை கோள்களின் நேரமும்,இடமும்,அமைப்பும் அவ்வப்போது சரி செய்யப்படுகிறது...

(குறிப்பு:
விண்வெளியில் பொருட்களுக்கு திணீவு மட்டுமே உண்டு.எடை இல்லை....அதிக திணிவு உள்ள பொருள் விண்வெளியை வளைப்பதால் அதனுடன் சேர்ந்து காலமும் வளைகிறது...இது போன்ற சூரியனின் வளைவுகளினால் தான் பூமி நீல்வட்ட்ப்பாதையில் சுழல்கிற்து)

விண்வெளீயை ஆட்சி செய்யும் காலத்தை மனிதன் அனைத்து இடங்களில் காணும் படி மிக குறுகியதாக்கிவிட்டான்....இக்கட்டுரை எழுதும் போது ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது...”காலம் பொன் போன்றது”...நான் நினைக்கிறேன் இப்போது உங்கள் நேரம் பொன்னாது என......

No comments:

Post a Comment