Tuesday, August 11, 2015

திரு லக்ஷ்மன் வழங்கும் மாடிதோட்டப் பயிற்சி கருத்தரங்கம்

இன்றைய கால கட்டங்களில் நாம் உண்ணும் அனைத்து விதமான உணவுகளிலும், ஏதோ ஒரு வகையில் பூச்சிக்கொல்லி மருந்தானது கலந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

நம் உடலில் உள்ள பாகங்கள் அனைத்திலும் அந்த பூச்சி கொல்லி மருந்தானது தனது வேலையை தவறாமல் தினசரி நடத்திக்கொண்டு வருகின்றது. இதன் பாதிப்பு நமக்கில்லை என்று நிமதியாக இருந்துவிடமுடியாது. ஏனெனில் அந்த ரசாயனம் கலந்த காய்கறி உணவானது நமது உடலில் உள்ள DNA வை ஒருமுறை பாதித்தால் போதும் நம் மூலம் பிறக்கும் அடுத்த தலைமுறைகளிலும் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

இதில் இருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளது. நாம் காய்கறிகளை சந்தையில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நமது வீட்டிலேயே உருவாக்கி கொள்ளலாம். வாரத்தில் எழு நாட்கள். நாளொன்றுக்கு ஒரு காய்கறி என்ற அடிப்படையில் நாமே நமது தேவைக்கு செடிகளை நமது வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளிலிருந்து நல்ல ஊட்டச்சத்துகளும் நல்ல சுவையும் கிடைக்கும். ஒருமுறை நீங்கள் அதை உணர்ந்து பார்த்துவிட்டால் அது தான் உங்கள் சந்ததியினரை காப்பாற்றும் அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்துவிடுவீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

வீட்டில் உள்ள குடும்ப தலைவிகள் தான் இது போன்றதொரு விழிப்புணர்வை பெற்று தன் குடும்பத்திற்க்கான ஊட்டச்சத்து பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

 மேலும் பழம் தரும் மரக்கன்றுகளை வாங்கி நமது மாடியில் வளர்க்கவேண்டும். வேளைக்கு ஒரு பழம் என்று சாப்பிட்டு நமது உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்.


No comments:

Post a Comment