Wednesday, July 8, 2015

The secret KGB UFO files

12 ஆயிரம் வருட பழமை வாய்ந்த வேற்று கிரகவாசியின் மம்மி எகிப்தில் கண்டுபிடிப்பு


எகிப்து நாட்டின் பிரமிடுகளுக்குள் அமைந்த கல்லறையில் பழங்காலத்தை சேர்ந்த வேற்று கிரகவாசி ஒன்றின் மம்மி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அமெரிக்காவின் தொலைக்காட்சி சேனல் ஒன்று கடந்த 1998ம் ஆண்டு வீடியோ ஆவணம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

கே.ஜி.பி. என்ற ரஷ்ய உளவு அமைப்பு கடத்திய ஆவணங்களின் ரகசியங்கள் என்ற பொருள் தரும் வகையில் தி சீக்ரெட் கே.ஜி.பி. அப்டக்சன் பைல்ஸ் என்ற பெயரில் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டு அமெரிக்க அரசால் வெளியிடப்பட்டது.

எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா எகிப்திற்கு ஆதரவு அளித்தது.  ரஷ்ய உளவு அமைப்பினரான கே.ஜி.பி. 20 ஆயிரம் வீரர்கள்  ரகசியமாக எகிப்து நாட்டிற்கு செல்கின்றனர்.  ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டம் என்ற பெயரில்  இந்த ரகசிய திட்டத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டில் உள்ள பிரமிடுகள் குறித்த ஆய்வும் நடந்தது.  அதனால் ராணுவ விவகாரங்களுக்கு உதவும் வகையில் பிரமிடுகளில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கும் எனற அடிப்படையில் அவர்கள் நோக்கம் இருந்தது.

இதனை அடுத்து பிரமிடில் இருந்த கல்லறைக்குள் ரஷ்ய வீரர்கள் செல்கின்றனர்.  அவர்களுடன் எகிப்து வீரர்களும் செல்கின்றனர்.  அமெரிக்காவின் உளவு அமைப்பு சி.ஐ.ஏ.வுக்கு இந்த ஆய்வு விசயம் தெரிய கூடாது என்ற வகையில் ரகசியமுடன் இரு நாடுகளும் இந்த பணியில் ஈடுபட்டன.  அந்த கல்லறைக்குள் எண்ணற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வாயுக்களை தவிர்க்கும் முகமூடிகளை அணியாமல் செல்கின்றனர்.  அங்கு உள்ள சவ பெட்டி ஒன்றை திறக்கின்றனர்.  அதில் இருந்து விஷ வாயு கிளம்பி அந்த சூழலை நிறைக்கிறது.  அந்த பெட்டியினுள் மம்மி ஒன்று உள்ளது.

அதனை வீரர்கள் பார்த்தபோதும் சுவாச பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.  அதன்பின்னர் பாதுகாப்பு கொண்ட சிறப்பு முகமூடிகளை அணிந்து வீரர்கள் மீண்டும் செல்கின்றனர்.  அதில், ஆச்சரியம் தரும் வகையில் 2 மீட்டர்கள் உயரம் கொண்ட மம்மியின் உடல் ஒன்று உள்ளது.  எகிப்தின் பழங்கால மக்களை விட மிக உயரம் கொண்டு அந்த உடல் இருந்துள்ளது.  இதனை கார்பன்-14 ஆய்வுக்கு உட்படுத்திய அறிவியலாளர் போரீஸ் டிமோயேவ் கூறும்போது, எகிப்து சாம்ராஜ்யங்களுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 12 ஆயிரம் வருடங்களை கடந்தது இந்த உடல் என கூறியுள்ளார்.
இந்த உடலை இதனுள் வைத்து சென்றவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  எனினும், அறிவியலாளர்கள், கணினி நிபுணர்கள், டாக்டர்கள் மற்றும் பிற கல்வி நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய அந்த குழுவினர் வேற்று கிரகவாசிகளின் அரசனான ஒசிரீஸ் என்பவரது மம்மி அது என்று முடிவு செய்துள்ளனர்.  இதனை அடுத்து நட்சத்திரங்களில் இருந்து வந்தவரை வழிபடுவோம் என்ற அடிப்படையில் அவரை பின்பற்றுபவர்கள் (பாலோயர்) என்று குழுவினர் கூறி கொண்டனர்.

எகிப்து பிரமிடுகளின் உண்மையான பணி என்ன என்பது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.  அவை ஒளியின் ஆற்றலை ஒன்று சேர்த்து வைக்கும் சக்தி கொண்ட இயந்திரங்களாக பயன்பட்டிருக்கும் என்றும் நட்சத்திரங்களுக்கு இடையே நடைபெறுபவை குறித்த  தகவல் பரிமாற்றம் செய்பவையாக இருந்திருக்கும் என்றும் சில அறிவியல் கருத்துகள் இருக்கின்றன.

எனினும், எகிப்திய நாகரீக அறிவு மற்றும் பெரிய பிரமிடுகளின் உருவாக்கம் ஆகியவை தொடர்ந்து மர்ம விசயங்களாக உள்ளன.  ஒரு முன்னேறிய நாகரீகம் கொண்ட பழங்கால எகிப்தியர்களின் வளர்ச்சி குறித்து புரிந்து கொள்வது அடிப்படை கேள்வியாக உள்ளது என்று எகிப்து நாட்டின் ரோஸ்லின் அமைப்பை சேர்ந்த மெக்நாக்டன் என்பவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment