Sunday, January 27, 2013

இளைஞனே வா என்னோடு-நீ தினமும் பார்த்த காட்சியை என்னோடு சேர்ந்து பார்






இளைஞனே
வா என்னோடு-நீ
தினமும் பார்த்த காட்சியை
என்னோடு சேர்ந்து பார்

இளைஞனே
இன்று முழுவதும்
உன்னை சுற்றி நோக்கு
இறுதியில் உன்னை நோக்கு

கோவிலுக்கு வா
கடவுள் இருப்பாரா?
எனக்கு தெரியாது
ஆனால்,
கையேந்துபவர்கள் இருப்பார்கள்.

குடித்து கூத்தடிப்பவனே!
குப்பையை கிண்டி
குடித்தனம் நடத்தும் நமது
குடும்பத்தை பார்

களியாட்டம் ஆடுபவனே!
கல்லுடைக்கும் வேலை(ளை)யில்
காயம் பட்டாலும்
காசு இல்லாமல்
மண்தான் சிறந்த
மருந்தென்று
மனதை ஏமாற்றிக் கொள்கிறானே
அவனை பார்

மாடி கட்டி வாழ்பவனே!
மந்தையிலே
மறப்பு கட்டி
மழைக்கு கும்பிடு போட்டு
வாழும் நமது குடும்பத்தை பார்

பஞ்சணையில் படுப்பவனே
பாயிக்கு பணமின்றி
மூட்டிய வேட்டிக்கு
மூன்று வேலை கொடுக்கும்
நம் சனத்தை பார்

அறுசுவை உணவு உண்பவனே
வயிற்றுக்கு
வழியின்றி வாடும்
வஞ்சனையின் வாசனை
அறியாதவர்களை பார்

அலங்காரம் செய்து கொள்பவனே!
வேப்பம் குச்சியில் பல்துலக்கி
களிமண் போட்டு குளிந்து
வண்டி மையில் கண்ணெழுதும்
நம் சகோதிரிகளை பார்

கல்வி கற்கும் வயதில்
கட்டிடத்திற்கு
கலவை சுமக்கிறது
உன் சனநாயக நாட்டின்
பெருமையை பார்

உரிமை பற்றி சவடால் பேசுபவனே!
உதவி செய்வதில்
உரிமை எடுத்து கொள்ள கூடாதா?

சுயநலம் தான் வருகிறதா?
சுரணை வரவில்லையா?

காமம் வீசும் உனது கண்கள்
கருணை மறந்ததோ?

இதையெல்லாம்
நான் சொல்வதை கேட்டு
உனது மனம் சுரணை கெட்டு
செவிக்கு திகட்டுகிறதா?
நீ வாழ்ந்து பயனில்லை
செத்து போ..

No comments:

Post a Comment