Saturday, January 26, 2013

மடகாஸ்கர், அமேசான், பாப்புவா நியூ கினியா பழங்குடி மக்களின் விவசாய முறை


உலகப் புகழ் பெற்ற வெற்றி முறை. நிலத்தை காயப்படுத்தாமல் இயற்கை இடு பொருட்களை கொண்டு, எந்த இயந்திர உபயோகமின்றி நடைமுறை சாத்தியங்களோடு மகசூல் செய்கின்றனர். பாப்புவா பூர்வ குடிகளின் குச்சி நடவுமுறை, மடகாஸ்கர் ஒற்றை நாற்று நடவு முறை போன்றவை இயற்கை வேளாண் ஆர்வலர்களால் இந்திய விவசாயிகளுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டது. நீர் சிக்கனம், நில சீர் அமைப்பு, ஆட்குறைப்பு, இயற்கை இடுபொருள் என அனைத்தையும் உள் அடக்கிய இம்முறை நெற் பயிர்களை மையமாக வைத்து துவங்கப்பட்டது. நம்மாழ்வாரின் தொடர் முயற்சியும் , கொடுமுடி நடராஜனின் பஞ்ச கவ்யமும் "ஒற்றை நாற்று நடவுமுறைக்கு" கை கொடுத்தன. இதன் வெற்றி அரசு வேளாண் அலுவலர்களை "காப்பி" அடிக்கத்தூண்டியது. துல்லிய வேளாண்மை என பெயர் மாற்றம் செய்து "வெற்றி நடவுமுறை" என தம்பட்டம் அடித்து கொண்டனர்

No comments:

Post a Comment