Thursday, October 3, 2013

வாத்து வளர்ப்பு:

வாத்து வளர்ப்பு:

இந்தியாவில் பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப் படுகின்றன. இவை ஆண்டுக்கு
100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அறுவடை
நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால், போதுமான தீவனம் கிடைக்காததும் குறைந்த
முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத்
தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி
குறைவதோடு, வாத்துகள் இறப்பும் நேரிடும்.

தீவன பராமரிப்பு:

இறைச்சிவாத்துகளுக்கு: இவ்வகையான வாத்துகள் 7 வாரத்தில் குறைந்தபட்சம் 2.2
முதல் 2.5 கிலோ வரை வளரக்கூடியது. அப்போது அதனுடைய தீவன மாற்றுத்திறன் 3.25
ஆகும். முட்டை வாத்துகளுக்கு: முதல் 20 வாரத்திற்கு வாத்துகளுக்கு 12.5 கிலோ
தீவனம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற
கணக்கில் ஓராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும்.

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு: அறுவடை செய்த நிலங்களில்
உள்ள உதிரி தானியங்கள் புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன. இவ்வகையான
தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானது அல்ல. ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு
முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்னரும் கூடுதலாக நெல் போன்ற
தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ நாம்
கொடுக்கலாம். ஒரு சில விவசாயிகள் குச்சி தீவனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த
வகையான தீவனங்கள் ஒரு நாளைக்கு 50 கிராம் முதல் அதிகமாக 100 கிராம் வரை
கொடுக்கலாம். அப்படி கொடுக்கப்படும் பொழுது தொடர்ச்சியாக முட்டையிடுவதற்கு
போதிய ஊட்டச்சத்துகள் தீவனத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன.
இந்தியாவில் பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப் படுகின்றன. இவை ஆண்டுக்கு
100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அறுவடை
நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால், போதுமான தீவனம் கிடைக்காததும் குறைந்த
முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத்
தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி
குறைவதோடு, வாத்துகள் இறப்பும் நேரிடும்.
தீவன பராமரிப்பு:
இறைச்சிவாத்துகளுக்கு: இவ்வகையான வாத்துகள் 7 வாரத்தில் குறைந்தபட்சம் 2.2
முதல் 2.5 கிலோ வரை வளரக்கூடியது. அப்போது அதனுடைய தீவன மாற்றுத்திறன் 3.25
ஆகும். முட்டை வாத்துகளுக்கு: முதல் 20 வாரத்திற்கு வாத்துகளுக்கு 12.5 கிலோ
தீவனம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற
கணக்கில் ஓராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும்.
மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு: அறுவடை செய்த நிலங்களில்
உள்ள உதிரி தானியங்கள் புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன. இவ்வகையான
தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானது அல்ல. ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு
முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்னரும் கூடுதலாக நெல் போன்ற
தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ நாம் கொடுக்கலாம். ஒரு சில விவசாயிகள் குச்சி தீவனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வகையான தீவனங்கள் ஒரு நாளைக்கு 50 கிராம் முதல் அதிகமாக 100 கிராம் வரை கொடுக்கலாம். அப்படி கொடுக்கப்படும் பொழுது தொடர்ச்சியாக முட்டையிடுவதற்கு போதிய ஊட்டச்சத்துகள் தீவனத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன.

No comments:

Post a Comment