உயிருடன் உள்ள இம்மீன்கள் நீர்பாசி மற்றும் தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு
நீர்நிலைகளான ஏரி, குளம், குட்டைகளில் காணப்படும். தற்போது விரால் மீன்
குஞ்சுகள் வளர்ப்பு குளங்களில் இருப்புசெய்து வளர்த்தெடுத்து விற்பனை
செய்யப்பட்டு வருகிறது. விரால் மீன் குஞ்சுகள் ஆற்றோரங்களில் குளம்,
குட்டைகளின் ஓரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. 1000
குஞ்சுகள் ரூ.1500 விலை போகிறது. தவிர செயற்கையான தூண்டுதல் முறையில் ஊசி
மூலம் பிட்யூட்டரி அல்லது ஓவாபிரியம் செலுத்தி இனச்சேர்க்கை ஏற்படுத்தி
மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். இதற்காக ஆராய்ச்சிகள் மத்திய நன்னீர்
மீன்வள ஆராய்ச்சி மையத்தில் விரால் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு குறித்த
ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆய்வுப்பணிகள் துவங்கிட திட்டம்
வகுக்கப்பட்டுள்ளது. (மீன்வளத் துறை, தமிழ்நாடு அரசு) நன்கு வளர்ந்த மீன்
குஞ்சுகளைப் பெரிய வளர்ப்புக் குளங்களில் எக்டருக்கு 5000 வீதம் இருப்புச்
செய்யலாம். அதற்கு முன் குளங்களில் உள்ள பழைய நீரை அப்புறப்படுத்தி உழுது
காயவைத்து, பின்னர் சுண்ணாம்பு எக்டருக்கு 200 கிலோ வீதம் தண்ணீரில் கரைத்து
தெளிக்க வேண்டும். பின்னர் ஓரளவு தண்ணீர் விட்டு மாட்டுச்சாணம் எக்டருக்கு
2000 கிலோ கரைத்து குளத்துக்குள் தெளிக்க வேண்டும். பின்னர் ஒரு மீட்டர் உயரத்
திற்கு குறையாமல் நீர் ஏற்ற வேண்டும். மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு 2
அல்லது 3 நாட்களுக்கு முன் ஏற்பாடு களைச் செய்துகொண்டால் குளத்து நீரில்
நுண்ணுயிர்கள் வளர்ந்து மீன் குஞ்சுகளுக்கு ஏற்ற இயற்கை உணவாக இருக்கும்.
மேலும் கூடுதலாக உணவு தேவைப் படுவ தால் திலேபியா, கம்பூசியா, ஓரிசியாஸ்,
அப்போகிலஸ் போன்ற அதிக இனப் பெருக்கம் ஏற்படுத்தும் வகை யிலான சிறு மீன்களை
எக்டருக்கு 1000 வரை விட வேண்டும். குளத்தில் பூச்சிகள் விழும் வகையில் ஒளி
விளக்குகள் அமைத்தால் இரவு நேரங்களில் அதிகமான அளவில் பூச்சிகள் விழ
ஏதுவாகும். மேலும் செயற்கையாக உணவு கொடுத்து அதை எடுத்து வளரப் பழக்க வேண்டும்.

10 மாதங்களுக்குப் பின்னர் ஒரு மீன் 600 கிராமுக்கு மேல் வளர்ச்சியடைந்தால்
விற்பனைக்கு ஏதுவாக அறுவடை செய் யத் துவங்கலாம். விரால் மீனைப் பொறுத்த
மட்டில் இறந்த மீன்களைக் காட்டிலும் உயிருள்ள மீன் விலை மதிப்புள்ளது. ஒரு
எக்டருக்கு ரூ.1,44,000 வரை வருவாய் கிடைக்கும்.

*(தகவல்: இன்றைய வேளாண்மை, ஜூன் 2010) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.*
I Need The Contact no My No Pls Contact me 8095254191
ReplyDelete