Friday, October 4, 2013

உரக்குழி அமைப்பது எப்படி?


மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம்.
உதாரணமாக இரண்டு தென்னை / பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் இரு மரங்களுக்கு நடுவே இருக்கும் இடைவெளியைப் பொறுத்து குழியின் நீளத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.
குழிகளில் தேவையற்ற வாழை(இலை,தண்டு) மரங்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வேண்டும். அதன் மீது எதன் இலை, தழை கிடைத்தாலும் போடலாம். வேப்ப இலையைச் சேர்த்துப் போட்டால் பூச்சித் தாக்குதல் இருக்காது.
இப்படி இலை, சருகுகள், காய்கறி,பழ கழிவுகள், கால்நடைக் கழிவுகள், மழைநீர் என அடுத்தடுத்து சேர்ந்து குழி முழுமையாக நிரம்பியதும், தென்னை மட்டைகளை படுக்கை வரிசையில் அடுக்கவேண்டும். உரக்குழியில் உள்ள சத்து நீர் ஆவியாகாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியில் உள்ள இயற்கைப் பொருட்கள், மண்ணோடு மண்ணாக அமுங்க ஆரம்பித்ததும், மட்டை அடுக்கின் மீது மண் போட்டு, அதையும் அமுக்கவேண்டும்.
மரங்கள், செடி, கொடிகள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை இந்த உரக்குழிகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான இயற்கை உரம் இதிலிருந்து கிடைத்து விடும். சில மாதங்கள் கழித்து கிளறிப் பார்த்தால் மண்புழுக்கள் நிறைந்திருக்கும்.
தொட்டி செடிகளுக்கு தேவையான உரத்தையும் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளலாம்.
Happy Gardening...
by Pasumai Vidiyal
pic: google

No comments:

Post a Comment