Wednesday, April 29, 2015

ALL DETAILS WE KNOW சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

சொற்கள் சொல்லும் சுவையான செய்தி / முகநூல் வெளியீட்டதன் தொகுப்பு

உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

அரிக்கேன் விளக்கு
அரிக்கேன் என்னும் சொல் ஒரு புயலைக் குறிக்கும் பெயர். அந்தப் புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணை விள்க்கு தான் அரிக்கேன் விளக்கு என்று பெயர் வந்தது.
**********************************************************

கதர்

கதர் என்பது அரபு மொழிச் சொல்லாகும், அதற்கு கவுரவம் என்பது பொருள். கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை சுதந்திர வீரரான முகம்மது அலி காந்தியடிகளுக்கு போர்த்தி இதை கதராக (கவுரமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் தான் நூற்பு ஆடை "கதர்" என்று அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

சிசேரியன்
ரோம் நாட்டில் ஜூலியஸ் சீசர் பிறந்த போது, அவனது தாயின் வயிற்றில் அறுவை செய்து தான் குழந்தையை எடுத்தார்கள். அதனால் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு அவனது பெயரே " சிசேரியன்" என்று நிலைத்து விட்டது.
*************************************************************************
ரூபாய்
ரூபாய் .. ரூபி என்பது ஆங்கிலச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல்
"ராப்யா " என்பேத ரூப்யாவாகி, ரூபாய் ஆகியுள்ளது,ராப்யா என்றால் வார்ப்பட வெள்ளி என்று பொருள்.
மன்னர் ஷெர்ஷா தான் முதலில் கி,பி. 1538..1545 ரூபியா என்ற பெயரில் ெவள்ளிக் காசுகளை வெளியிட்டார்.

ஆப்பிரி்க்கா

ஆப்பிரிக்கா என்றால் " வெயில் நிலம் " என்று பொருள்

உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

ஆங்கிலச் சொற்கள்
1 முதல் 99 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c,d எழுத்துக்கள் கிடையாது, 100 (Hundred)எழுதும் போது மட்டும் 'd' வரும்.
1 முதல் 999 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c, எழுத்துக்கள் கிடையாது, 1000 (Thousand )எழுதும் ேபாது தான் a வரும்
b என்னும் எழுத்து முதன் முதலாக billion மட்டும் வருகிறது. மொத்த எண்ணிக்கையிலும் ஒரு ஸ்பெல்லிங்கில் கூட வருவதில்லை.
*************************************************************************
கபடி
கபடி என்பது ஒரு விளையாட்டின் பெயர். இந்த விளையாட்டில் எதிர் அணியினரை நோக்கி "கபடி" கபடி" என்று பாடிக் கொணடு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது கையைப் பிடித்தோ , காலை பிடித்தோ வந்தவரை வெளியேற்றுவது வழக்கம்.
அப்போது சொல்லப்படும் " கையைப்பிடி" என்று சொல்லப்படும் வார்த்தை "கைப்பிடி" என்று மருவி , கபடி என்று சுருங்கி, அதுவே விளையாட்டின் பெயராகவும் நிலைத்து விட்டதெனவும் கூறப்படுகிறது. இது தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு எனவே இது ஒரு தமிழ் சொல்லின் சுருக்கமே என்பதாகும்.

******************************************************************************************************
உங்களுக்கு தெரியுமா?
ெசாற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

நீலப்புத்தகம்

பிரிட்டிஷ் அரசின் அலுவலக அறிக்கை "நீலப்புத்தகம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

வெள்ளைப் புத்தகம்
ஜெர்மனி மற்றும் சீனாவின் அலுவலக அறிக்கை " வெள்ளை புத்தகம் " என்னும் பெயரி்ல் அழைக்கப்படுகிறது.

ஆரஞ்சு புத்தகம்
நெதர்லாந்தின் அலுவலக வெளியீடுகள் அனைத்தும் " ஆரஞ்சு புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது.

மஞ்சள் புத்தகம்
பிரான்சின் அலுவலக வெளியீடுக்ள் அனைத்தும் " மஞ்சள் புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது

சாம்பல் புத்தகம்
ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அலுவல வெளியீடுக்ள் " சாம்பல் புத்தகம் என அழைக்கப்படுகிறது.

சிவப்பு புத்தகம்
ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட நூல் " சிவப்பு புத்தகம்" என அழைக்கப்படுகிறது

பச்சை புத்தகம்
இத்தாலி மற்றும் ஈரானின் அலுவலக வெளியீடுகள் பச்சைபுத்தகம் என்று அழைக்கப்படுகிறது

வெள்ளை அறிக்கை
அதிகார பூர்வ உண்மைகள் பற்றி அரசு வெளியிடும் சிறு கையேடு " வெள்ளை அறிக்கை " எனப்படுகிறது.
**********************************************************************************************

உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

அனைத்து எழுத்துக்களும் கொண்ட ஆங்கிய வாக்கியம்

இந்த ஆங்கில வாக்கியத்தில் ஏ முதல் இசெட் (A -Z)வரையிலான அனைத்து ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளது இதன் சிறப்பு
Pack my box with five dozen Jugs of liquor.
The quick brown fox jumps over the lazy dog.
Jackdaws love my big sphinx of Quartz.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

(Boyocott) பாய்காட்
"காப்டன் பாய்காட்" என்பவர் அயர்லாந்தில் ஒரு பண்ணையின் உரிமையாளர், ஒரு சமயம் விவசாயிகள் இவர் சொற்படி நடக்க மறுத்தார்கள் வியாபாரிகளும் அவருக்கு தங்கள் பொருட்களை விற்க மறுத்தார்கள், அதிலிருந்து பகஷ்காரம் (புறக்கணிப்பு) செய்வதைக் குறிப்பிட பாய்காட் என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.
--------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்தி:

டாங்க் (Tank)
போர்க்களத்தில பயன்படும் முக்கியமான வாகனம் டாங்க் ஆகும். 1915ல் இது உருவானது. முதல் உலகப் போரின் போது இது ஒரு வகை போர் சாதனம் என்பது எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க, தண்ணீர் கொண்டு வரும் வண்டி , அதாவது ' டாங்க்' Tank என்று சொன்னார்கள், இதுவே , நாளடைவில் நிலைத்து விட்டது.
-------------------------------------------------------------------------------------------

நோபல் பரிசு
1896 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி காலமான ஆல்பிரட் நோபல் என்பவர் 90 லட்சம் டாலர்களை பேங்கில் வைப்பு நிதியாக போட்டு, அதன் வட்டியை ஆண்டுதோறும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். இதுவே நோபல் பரிசாகும். 1901ஆம் ஆண்டு முதல் பெளதிகம், ரசாயனம், மருத்துவம், இலக்கியம், சமாதானம், ஆகிய ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1968 ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது.
-------------------------------------------------------------------------------------------
ஜெராக்ஸ்
பொதுவாக, ஒரு பிரதி போல் மற்றொரு பிரதி காப்பி எடுப்பதை "ஜெராக்ஸ்" எடுப்பது என்று சொல்லப்படுவதுண்டு. ஜெராக்ஸ் என்ற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா? முதன் முதலில் நகல் எடுப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட மெசினின் பெயர்தான் ஜெராக்ஸ் என்பது அதுவே நாளடைவில் காப்பி எடுப்பதற்கான சொல்லாக மாறிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------

செங்கடல்
செங்கடல் என்றால் சிவப்பாக இருக்கும் கடல் என்பதல்ல. எடாம் என்ற மலையின் நிழல் கடலில் தெரியும். ஹிப்ரூ மொழியில் எடாம் என்றால் சிவப்பு எனப்பொருள் அதனால் தான் செங்கடல் என பெயர் பெற்றது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்:

அட்ட (அஷ்ட) வீரட்ட ஸ்தலங்கள்

ஈசன் சிவபெருமானார் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் எட்டு இதனையே அட்ட வீரட்ட ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் அனைத்தும் தஞ்சை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களான காவேரி டெல்டா பகுதிகள் காணப்படும் தலங்கள், இத்தலங்கள் சமயக்குறவர்கள் நால்வர் பாடல்களில் அதிகம் காணப்படும் கோவில்கள் கொண்ட தலங்கள் உதாரணமாக திருநாவுக்கரசர் பாடலில் கண்ட வரிகள் "அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே," அவையாவன:
1) திருப்பறியலூர் வீரட்டம் : தக்கன் யாகம் அழித்தல் ஸ்தலம்
2) திருக்கண்டியூர் வீரட்டம் : தான் என்ற கர்வம் பெற்ற பிரம்மன் சிரத்தை பைரவர் மூலம் தலை கொய்தல் ஸ்தலம்
3) திருவதிகை வீரட்டம் : முப்புரம் - மும்மலங்கள் - திரபுர சம்காரம் செய்த ஸ்தலம்
4) திருக்கோவிலூர் வீரட்டம் : பைரவர் உருவம் தாங்கி வானர்களுக்காக அந்தகா சூரன் வதம் செய்த ஸ்தலம்
5) திருக்குறுக்கை வீரட்டம் : காமதகன மூர்த்தி யாகி காமமை - மன்மதனை எரித்த ஸ்தலம்
6) திருக்கடவூர் வீரட்டம் : சிவபக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை - கூற்றுவனை வதம் செய்த ஸ்தலம்
7) வழுவூர் வீரட்டம் : கயமுகா சூரனாகிய யானையினை (கொன்று ) வதம் செய்து அதன் தோலை உரித்து யானைத் தோ லினை அணிந்த தலம்
8) திருவிற்குடி வீரட்டம் : சலந்திர ஸ்தலம் ( தன்கால் பெருவிரலால் கீறியமைந்த சக்கரத்தினால் தலையைஅறிந்த ஸ்தலம்)
ஆக எட்டு வீரச்செயல்கள் புரந்த ஸ்தலங்கள் அட்ட வீரட்டம் என்றழைக்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

ஓசி OC
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது கம்பெனித் தபால்களை On Company Service என்று குறித்து கட்டணம் செலுத்தாமல் அனுப்புவது வழக்கம், ( தற்போதும் அரசு அலுவலகத்தபால்கள் அனைத்தும் அரசு இலவச சேவையிலேயே அனுப்பப்படுகிறது, அதனை தற்போது இந்திய அரசு பணி சர்வீஸ் ' OIGS" ) அதன் சுருக்கமான OCS என்பதே ஓசி ( OC ) ஆகி , காசு கொடுக்காமல் வாங்கும் பொருளை எல்லாம் இன்று ஓசி என்று அழைக்கின்றோம்
----------------------------------------------------------------------------------------------12.4.2015
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

நீலப்படம் Blue Film
அந்த மாதிரியான படங்ககளுக்கு நீலப்படம் என்று பெயர் வந்தது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
ஸ்காட்லாந்தில் விலை மாதர்களை கைது செய்தால் , நீலநிற கவுனை அணிவித்து விடுவார்கள், அங்கே இது போன்ற தவறான தகாத செயல்களை நீலநிறத்தில் தான் அடையாளப்படுத்துவார்கள்.
அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல்களைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது,அதன் பெயர் " ப்ளூ" . என்பதாகும், மேலும் நீல நிறத்திற்கு செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதற்குரிய சக்தி இருக்கிறது, எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

A,B,C,D,E, F ஆங்கில வரிசை எழுத்துக்கொண்ட சிறிய வார்த்தை

A,B,C,D,E, Fஆகிய ஆறெழத்துக்களையும் கொண்ட மிகச் சிறியஆங்கில வார்த்தை 'FEED BACK"
**********************************************************************
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்

தினமும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் அதிகம் பயன்படும் வார்த்தை எது தெரியுமா?
" ஹலோ "என்னும் வர்த்தை தான்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எட்டுன் (அட்ட ) பொருள் கொண்ட வார்த்தைகள்
அட்ட சுபம் பொருட்கள்
இணையக் கயல், கண்ணாடி, சாமரம், கொடி, தோட்டி, நிறைகுடம், முரசு, விளக்கு
அட்ட சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், காயம், இந்துப்பு
அட்ட தனம்
அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, வித்தை, விவேகம், தனம்
அட்ட தாது
எட்டு உலோகம்: பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம்,
அட்டதானப் பரீட்சை
வைத்தியன் அறிகுறி எட்டு, நாடி, முகம், மலம்,அமுரி, கண்,நா, சரீரம், தொனி.
**********************************************************************************************************

திரி கடுகு
சுக்கு, மிளகு, திப்பிலி இம் மூன்றும் திரிகடுகம்என்றுரைப்பர்

திரி சாதம்
லவங்க பத்திரி, ஜாதிபத்திரி, தாளிய பத்திரி

திரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், மர மஞ்சள்

திரி கந்தம்
சந்தனம், அகில், கட்டை, தேவதாரி

திரிகாயம்
வெளளுள்ளி, சுக்கு, பெருங்காயம்

திரி கோபம்
சந்தனம், சிவதை,, வெங்குங்குலியம்

திரி மூலம்
கண்டு பரங்கி மூலம், திப்பிலி மூலம், சித்தர மூலம்

திரி நிம்மம்
மலை வேம்பு, நில வேம்பு, கறி வேம்பு

திரி பத்திரி
லவங்க பத்திரி, ஜாதி பத்திரி, தாளிச பத்திரி

திரி லவங்கம்
கிராம்பு, அகில், சண்பகம்

திரி லவங்கப்பூ
சண்பகப்பூ, சிறு நாகப்பூ, கிராம்பு

முக்கூட்டு எண்ணெய்
நெய், ஆமணக்கெண்ணை,எள் எ்ண்ணெய்

முச் சீரகம்
சீரகம், கருஞ்சீரகம், காட்டு சீரகம்
****************************************************************************

முலட்டோ
நாம் ஆங்கிலேயரும் இந்தியரும் கலந்த இனத்தை ஆங்கிலோஇந்தியன் என்று கூறுவது போல் வெள்ளையரும் நீக்ரோவும் கலந்த கலப்பினத்திற்கு பெயர் " முலட்டோ " என்பதாகும்.

கம்யூனிகேஷன் Communication

கம்யூனிகேஷன் Communicationஎன்ற சொல், Communis கம்யூனிஸ் என்ற லத்தீன் சொ்ல்லிருந்து தோன்றியது, இதற்கு பொது என்று பொருள், இருவருக்கிடையே பொதுவான கருத்து என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகின்றது,

கறுப்பு பெட்டி

விமானத்தின் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டியின் இன்னொரு பெயர் சிவிஆர் ( CVR) காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்டர் எ்ன்பதாகும்

பாரதி
பபரதியாருக்கு " பாரதி" என்ற பட்டப் பெயர் எட்டயபுரம் அரச சபையால் அளிக்கப் பட்டது,

டிராகுலா DRACULA

செஞ்சிலுவைச் சங்கத்தினர் , தாங்கள் அமைத்த புதிய இரத்த சேமிப்பு நிலையத்திற்கு BLOOD BANK டிராகுலா DRACULA எனப் பெயர் வைத்தனர், DRACULA என்பது 'DONORS REGISTRATION AND CALL UP LINKED ACCESSION 'என்பதன் சுருக்கப் பெயராகும், பெயர் பொருத்தம்சூப்பராக இருக்கிறதல்லவா?

மஞ்சள் புரட்சி, வெண்மை புரட்சி
ஒரு நாட்டில் உணவு எண்ணெய் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க உணவு எண்ணெய் உற்பத்திக்கு சூரியகாந்தி என்ற எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி திட்டத்தினை மஞ்சள் புரட்சி என்றும்,
பால் மற்றும் முட்டை அதி தீவிர உற்பத்தி திட்டத்திற்கு
வெண்மை புரட்சி என்றும் பெயரிடப்பட்டு தி்ட்டங்கள் செயல் படுத்தப்பட்டன.

திருக்குறளில் காணப்படாத எழுத்து

தமிழ் கடவுள் ஆகிய சொற்களும், ஒள என்ற எழுத்தும் திருக்குறளில் எங்கும் காணப்படவில்ைல

நெம்பர் 1 ன் சிறப்பு
2011 ஆம் ஆண்டிற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு, அதாவது நெம்பர் 1ஐ மட்டுமே உபயோகித்து இவ்வருடத்தி்ல் நான்கு நாட்களை குறிப்பிட முடியும், அதாவது, 1.1.11 , 11/1/11. 1/11/11. 11/11/11 ஆகியவையே அந்த நாட்கள் இது போன்று 100 வருடங்கள் கழித்துதான் மறுபடியும் வரும் எனபதை காண்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பஞ்சா (5) ஐந்து இனத்தினை குறிக்கும் சொற்கள்

பஞ்ச தந்திரங்கள்
கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல், நண்பர்களை சம்பாதித்தல், பகைவரிடம் உறவாடி வெல்லுதல், பொருள் அழிவு,ஆய்வினையின்றி ( ஆராய்ச்சின்றி) செயலில் இறங்குதல், ஆகியவை ஆகும்.

பஞ்ச புராணம்
தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து இலக்கியங்களை பஞ்சபுராணம் என்று கூறப்படும்.

ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலியன கொண்டது ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.

பஞ்ச பூதங்கள்
பூமி, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் ஆகிய பஞ்ச பூதங்கள் எனப்படும்.

பஞ்ச பூத தலங்கள்
காஞ்சிபுரம் ( பூமி), சிதம்பரம்( ஆகாயம் ), காயஹ்திரி (காற்று), திருவண்ணாமலை ( நெருப்பு), திருவானைக்கால் ( நீர்)ஆகியன.

பஞ்சமா பாதகங்கள்
கொலை, பொய், திருட்டு, மது, குருநிந்தை முதலிய கெட்ட குணங்கள்

பஞ்ச வர்ணம்
வெள்ளை, கருப்பு, சிவப்பு, பசுமை என்ற பச்சை, பொன்னிறம் ஆகியன

ஐம்படைத் தாலி
சங்கு, சக்கரம், கதை, வாள், வில், ஆகிய உருவம் கொண்ட குழந்தைகளுக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி என்பதாகும்.

திருமண பஞ்சமூலம்
நாணல் வேர், தருப்பை வேர், கரும்பு வேர், நெல்பயிர் வேர், வெள்ளை அசன் வேர் ஆகியன.

பஞ்ச கவ்வியம்
ஆவின்பால், தயிர், வெண்ணை , நீர், சாணம், - கோமாதாவின் சீறு நீரையும் ( கோமியத்தையும் பஞ்சகாவியம் என்று சொல்லும் பழக்கம் உள்ளது)

பஞ்ச கோலம்
சுக்கு, திப்பிலி, திப்பிலி மூலம், செவ்வியம், சித்திரை மூலம்

பஞ்ச அமிர்தம்
பால், சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம்,( அல்லது) பேரீச்சம் பழம்.

பஞ்ச காரம்
சீனிக்காரம் , சவுக்காரம், பொரிகாரம், பிரிகாரம், படிகாரம்.

பஞ்ச காரகம்
காயம், வெள்ளுள்ளி, வெங்காயம், கடுகு, வெந்தயம்

பஞ்ச சாரம்
நவச்சாரம், எவச்சாரம், உவாச்சாரம், சத்திச்சாரம், கதவிச்சாரம்

பஞ்ச திரவியம்
ஏலம், சண்பகம், சீரகம், கிராம்பு, கொட்டம்

பஞ்ச மோகினி
கோரோசினை, குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், புணுகு

பஞ்ச வர்க்கம்
சிறுநாகப்பூ, ஏலம், லவங்கம், சாதிக்காய், கற்பூரம்

பஞ்ச வேம்பு
நல்வேம்பு, மலைவேம்பு, கருவேம்பு, நிலவேம்பு, சிவனார் வேம்பு முதலியன

பஞ்சாக்கினி மூலம்
காட்டுக்கறணை, கறிக்கறணை, புளிமடல், பிரண்டை, கோப்பிரண்டை.

பஞ்சரத்தினம்
முத்து, வைரம், மரகதம், நீலம், பொன்(தங்கம்) இவை ஐந்தும் பஞ்சரத்தினம் என்று அழைக்கபடுகிறது.

பஞ்ச இந்திரியம்(உறுப்புக்கள்)
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் பஞ்ச இந்திரயம் எனப்படும்

பஞ்சாங்கம்
நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் என்னும் ஐந்து அங்கங்கள் கொண்ட குறிப்பு புத்தகத்திற்கு பஞ்சாயங்கம் என்று பெயர்.

பஞ்சக்கிரி
சாதிக்காய், சாதி பத்திரி, கிராம்பு குராசாணி, வசுவாசி ஆகியன

பஞ்ச தரு
சந்தனம், பாரிசாதம், அரிசந்தனம், மந்தாரம், கற்பகம்

பஞ்சபீத மூலி
வெள்ளெருக்கு, மாவிலங்கை, கொடி வேலி, புன் முருங்கை,கோவை கிழங்கு

பஞ்சலோகச்சாயம்
திப்பிலி,திப்பிலி மூலம், சுக்கு, செவியம், கண்டுபரங்கி

பஞ்சலோகம்
பாசை, வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு

பஞ்சவாசம்
ஏலம், தக்கோலம்,இலவங்கம், சாதிக்காய், கற்பூரம்

பஞ்சாட்சர மந்திரம்
நமசிவாய என்ற மந்திரத்தின் நடு எழுத்தினை மாற்றி மாற்றி அமைக்கும் சொற்கள்
நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவநசி , வசியநம,

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடிகாரம்
"கடிகை" என்னும் சொல் தமிழில் நாழிகை என்ற கால அளவை குறிக்கும், அதனால் காலத்தை அளக்கும் கருவிக்கு கடிகாரம் என்று தமிழில் ெபயர் வந்து விட்டது. 14ம் நூற்றாண்டில், வழக்கத்தில் இருந்த கடிகாரத்திற்கு மணியைக்காட்டும் ஒரே ஒரு முள் மட்டுமேஇருந்தது.

கிராம வாத்தியங்கள்
முரசு, பறை, உறுமி, பம்பை, தாளம், ெநடுங்குழல் ஆகியன

கோவில் வாத்தியங்கள்
கொம்பு, தாதை, திருச்சினம், பூரி, சங்கு

கச்சேரி வாத்தியங்கள்
யாழ், வீணை, குழல், மிருதங்கம், கோட்டு வாத்தியங்கள்

நரம்புக் கருவிகள்
யாழ், வீணை, பிடில்

தோலிசைக் கருவிகள்
தவில், தப்பட்டை, டமாரம், மத்தளம், மிருதங்கம்

துளைக் கருவிகள்
வேங்குழல், நாதசுரம், மகுடி

நரம்புக்கருவிகள்
யாழ், வீணை, பிடில்

குதிரைச் சக்தி HP
ஒரு நொடிப் பொழுதில் ஒரு அடி தூரத்திற்கு 550 பவுண்ட் எடையை தூக்க தேவையான சக்தியே ஒரு குதிரை சக்தி HP எனப்படும்,

நாலும் / இரண்டும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் ( நாலடியார்) இரண்டும் ( குறள்) சொல்லுக்குறுதி

தந்தை நாடு
உலகில் ஒரே ஒரு நாடு மட்டும்தான் தந்தை நாடு என்று அழைக்கப்படுகின்றது, அது ஜெர்மானியர்கள் தாம் பிறந்த நாட்டை "தந்தையர் நாடு" என்றே அழைக்கின்றனா்.

வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்பதற்கு " தாயே உன்னை வணங்குகிறேன்" எனப் பொருளாகும்.

சிம் கார்டு SIM
நாம் நம் கைபேசியில் பயன்படுத்தும் சிம் SIM கார்டு என்பது SUBSCRIBER INFORMATION MODULE என்பதன் சுறுக்குமாகும்

No comments:

Post a Comment