Thursday, April 2, 2015

முட்கள் குத்தும்போதெல்லாம் முணுமுணுப்பேன் அவள்பெயரை ...


இந்த கவிதை என் கல்லூரி நாள்களில் நான் எழுதியது . அந்நாளில் பலரின் பாரட்டைப் பெற்ற இக்கவிதையே , என்னை மேன்மேலும் கவிதை எழுத தூண்டி , இன்று முழுநேர கவிஞனாகவே மாற்றிவிட்டது ... இந்த கவிதையில் எதுகை மோனை சந்தமெல்லாம் யாரும் எதிர்பார்க்க வேண்டாம் . இது என் ஆரம்பகால கவிதை , இது கவிதை எழுத தொடங்கிய காலத்தில் எழுதியது , ஆனாலும் இது உணர்வு பூர்வமானது ,
உண்மையான காதலில் வலியை உணர்த்தக்கூடியது . நீங்களும் என் ஆரம்ப கால கவிதையை வாசித்துப் பாருங்களேன் ..!
என்னவளை ...
என் மனச்சோலையில்
ரோஜாவாக வளர்த்தேன் ...
அவளில் நினைவு
முள்ளாய் மாறுமென்று தெரியாமல் ...
முட்கள் குத்தும்போதெல்லாம்
முணுமுணுப்பேன் அவள்பெயரை ...
ஒருநாள் ...
ஏமாற்ற நோயால்
ரோஜா உதிர்ந்தது ...
முள்களெல்லாம்
என் மனக்கோட்டை வேலியானது ...
என் மனதை பாதுகாக்கஅல்ல ...
எவள்மனது உள்ளே
நுழைந்துவிடக் கூடாதென்று ...

என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

No comments:

Post a Comment