Thursday, April 2, 2015

ஒருபாடலை ஒரு ரசிகன் ரசிக்க வைக்க யார் யார் எதை உணரவேண்டும் ?!!!


1 ) எதுகைமோனை சந்தங்கள்
சரியாக அமையாமல் எழுதிக்கொடுக்கப்படும் எந்த பாடல்களும் மெட்டுக்குள் நின்றாலும் மனிதன் மனக்கட்டுக்குள் நிற்காது என்று ஒரு கவிஞன் உணரவேண்டும்
2) இசை ஒருகவிஞனின் வரியை எளிமையாக்கினால் அது பாட்டு
இரைச்சலாக்கினால் அது பதறல் என்று ஒரு இசையமைப்பாளர் உணரவேண்டும் .
3 ) தன்குரலை உதட்டில் இருந்து எடுத்தால் அது வெறும் உளறல் ...
உணர்விலிருந்து எடுத்தால் மட்டுமே எந்த ஒரு பாடலும் உயிர்பெரும் என்று பாடகர் உணரவேண்டும் .
இந்த மூன்றுபேரும் இதை சரியாக உணர்ந்தால் மட்டுமே ஒரு ரசிகன் அந்த பாடலை முழுமையாக உணரமுடியும் இல்லையேன் முதல்வரியை மட்டுமே உலறமுடியம் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

No comments:

Post a Comment