காய கற்ப மூலிகைகளென்று சொல்லும் போது அதற்குள்ள ஒரு முக்கியத்துவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். அதாவது கழிவுகளின் பெருக்கமே அனைத்து நோய்களும் .நோய்களின் தொகுப்பு மரணம் .எனவே கழிவுகளை அகற்றினால் நோய்கள் அனைத்துமே அகலும். நோய்களும் அகன்றால் மரணமும் அகலும்.எனவே ஒரு குறிப்பிட்ட வியாதியை இந்த காய கற்ப மூலிகைகள் கண்டிக்கும் என்றால் அந்தக் குறிப்பிட்ட வியாதியுடன் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதால் உடலில் உள்ள மற்ற வியாதிகளையும் கண்டிக்கும் என்பதோடு ஆயுளையும் விருத்தி செய்யும் என்று பொருள்.
இப்போது ஒரு கற்ப மூலிகையான கனையெருமை விருட்சம் பற்றிப் பார்க்கலாம்.
இந்தக் கனையெருமை விருட்சப் பாலை தேன் நாம் அருந்தும் போது கண்ணாடிக் குவளையில் இருக்கும் காட்சி.இது போன்ற பல காய கற்ப மூலிகைகளை நமது பயன் பாட்டில் உபயோகிக்கும்போது உடல் நன்றாக வளம் பெறும் முதுமை அகன்று இளமைத் தன்மை நம் உடலுக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment