Thursday, August 22, 2013

தேனீ


 இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு - பயிலரங்கம்.

இன்றைய விவசாயம் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பூச்சிகளின் மேலாண்மை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரசாயான பூச்சிகொல்லிகளால் சுற்றுசுழலும் கெட்டு முடிவில் விவசாயிகளின் தற்கொலைகளில் முடிவடைகிறதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். நம் முன்னோர்கள் எப்படி மேலாண்மை செய்தார்கள்? இயற்கை முறையில் பூச்சிகளின் மேலாண்மை சாத்தியமா? ஏன் தேனீக்கள் வேண்டும்? இந்த கேள்விகளுக்கு இப்பயிலரங்கம் தெளிவான விளக்கம் தரும். இது பற்றிய நூல்களும் அங்கு விலைக்கு கிடைக்கும்.

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போம் சங்கம். பதிவு எண்:110/2006,தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்துடன் இணைந்து நடத்தும் ஒரு நாள் பயிலரங்கம்.

நாள் : 09-01-2009 (வெள்ளிகிழமை)

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தலைப்பு : இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு

இடம் : வேளாண் பூச்சியியல் துறையின் கருத்தரங்கு அறை.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை -3

கட்டணம் : ரூ.180/= ஒருநபருக்கு. (பயிற்சி கையேடு,தேநீர்,மதிய உணவு உட்பட)முதலில் பதிவு செய்யும் 75 நபருக்கு மட்டும் அனுமதி.

பதிவிற்கு : தேவராஜன்..............93691 16018
                        நாராயணசுவாமி......94433 84746.

தேனீயின் மகரந்தம்.!


தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது.

தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு ம...ணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.

ஆற்றலை வழங்கும்

தேனீயின் மகரந்தம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனதனுக்கு தேவையான இயல்பான ஆற்றலை வழங்குகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி கொண்டுள்ளதால் உடல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.

தோல் பராமரிப்பு

தேனீயின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல், போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில் பயன் படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது.

சுவாச அமைப்பு

நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு கொண்டுள்ளது. இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு தருகிறது. மேலும் பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது.

செரிமான அமைப்பு

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில் தேனீயின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது. மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது..

மலட்டுத்தன்மையை

தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர். புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.

தேனீ வளர்ப்பு நுட்பங்கள்- நூல்

மனிதன் தன் அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் மிக அதிக மகசூல் தரும் புதிய இரகங்களை கண்டுபிடித்தாலும் இயற்கையாக தேனீக்கள் செய்யும் மகசூல் அதிகரிப்பை தவிர்க்கக் கூடாது. தேனீ வளர்ப்பது என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் ஆகும். விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு சாலப் பொருந்தும். ஒன்று மகசூல் கூடுகிறது மற்றொன்று தேன், மெழுகு, அரசக்கூழ் (Royal Jelly) போன்றவற்றால் கூடுதல் வருமானம்.

          
   1991-92 ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த தமிழகம் அவ்விடத்தை இழந்துவிட்டது. மீண்டும் அவ்விடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தேனீ வளர்ப்பை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் மெ. முத்துராமன் அவர்களின் “தேனீ வளர்ப்பு நுட்பங்கள்” என்ற நூல் மிக பயனுள்ளதாக இருக்கும். தெளிவான வண்ணபடங்களுடன் வளர்ப்பு, பராமரிப்பு நுட்பங்கள், உணவு ஊட்டுதல், நோய்கள் என அனைத்து தகவல்களையும் விரிவாக தந்திருப்பது நூலின் சிறப்பு. ரூ.100/= விலையுள்ள இந்நூல் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும்.

வேளாண் பூச்சியியல் துறை,
பயிர் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயமுத்தூர் - 641 003.

தேனீக்கள் வளர்த்து குபேரன் ஆகமுடியுமா ???

 

முடியும் என்று சொல்பவர் இந்தியாவின் மொத்த தேன் ஏற்றுமதியில் 70% செய்யும் காஷ்மீர் அபியரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். 1980 களில் ரூ.1000/= துவக்க முதலீடு செய்யது இன்று 2008 இல் ரூ.136 கோடிகள் வர்த்தகம் செய்பவர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். இன்று பணியாற்றும் உழியர்கள் சுமார் 1500 பேர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேனைக் கொள்முதல் செய்கிறது காஷ்மீர் அபியரீஸ். 4 வணிகப் பெயர்களில் 42 நாடுகளில் இவர்களது தேன் விற்பனையாகின்றது. தேனீக்கள் வளர்த்தல் ஏதோ ஒரு விவசாய சிறு உபதொழில் என்று நினைக்கும் நாம் அதில் கூட சாதனைகள் செய்திருக்கும் திரு. ஜக்ஜித் சிங் கபூரை பார்க்கும் போது பிரமிப்பு அடைகிறோம்.. சாதனையாளர் திரு. ஜக்ஜித் சிங் கபூர் அவர்களின் இலக்கான 100 நாடுகள் ரூ.400 கோடிகள் மிக விரைவில் அடைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

 

தேனீ வளர்ப்பு - ஒரு பார்வை

 

அயல் மகரந்த சேர்க்கையில் தேனீக்கள், பறவைகளின் பங்கு கணிசமானது. ஆனால் இவைகளின் தொகை குறைந்து கொண்டே போவதால் உணவு உற்பத்தியும் குறைந்து கொண்டே போகின்றது. இதனை மேம்படுத்த UNDP (United Nations Environment Programme) மிக சிறந்த ஒரு திட்டத்தை வரும் 5 வருடங்களுக்கு $26.45 மில்லியன் டாலரில் இந்தியா, கென்யா, பிரேசில், கானா, நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செயல்படுத்தவுள்ளனர். இதனால் உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் தேன் மற்றும் மெழுகு உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் கிராமப்புற வேலை வாய்ப்பு ஏற்படுகிறது.

வியாதி, வனம்அழிதல், இரசாயன பூச்சிகொல்லிகளை உபயோகித்தல், விவசாய மாற்றத்தால் விவசாயிகள் தேனீ வளர்ப்பை கைவிட்டது, புதியஇனங்களின் அறிமுகம், வைரஸ்களால் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இதன் தொகை குறைந்து கொண்டே போகின்றது. எனவே UNDP யின் இந்த திட்டம் வரவேற்க வேண்டிய நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய திட்டம். பயன்படுத்திக் கொள்ளவோம்.

தேனீக்கள் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள கீழ்கண்ட தொடர்புகளை பயன்படுத்துங்கள்
http://www.islamkalvi.com/science/honey_bee.htm
http://iyargai.blogspot.com/search/label/தேனீ
பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை.
http://www.ecogreenunits.blogspot.com/



தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.

தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.

சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.

தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.

தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.



தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??


பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.


** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.

** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.

** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.

** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது:

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.