Tuesday, August 27, 2013

சோறுக்கு வழிதேடாத அரசு , பீருக்கு வழிதேடுது

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ,

மறுக்க முடியாது ,

இதை மறந்துபோனதுதான் வேதனை !

பெருகிப்போகும் மக்கள் தொகை ,

சுருகிப்போன விவசாயம் ,

நாகரீக வாழ்க்கையில்
சேற்று வாசனையும் நாற்று வாசனையும்
மக்களுக்கு நாற்றமாய் தெரிய ,
பட்டினம் தேடி பறக்கிறார்கள் ,
கிராமத்தை வெறுக்கிறார்கள் ,
காசு கொடுத்து வாங்காத இயற்க்கை காற்றை மறந்து ,
காசு கொடுத்து வாங்கும் ஏசி காற்றில் மயக்கம் !

வலுவிழந்த விவசாய முதுகெலும்பு ,

ரத்த ஓட்டத்தில் ஆங்காங்கே தடைகள் ,

துண்டுகலாகிப்போன ஆறுகள் , நதிகள் ,

என்று சேரப்போகிறது ஒன்றாய் ,

வலுவிழந்த முதுகெலும்பிற்கு

வலு சேர்க்கும் வழி நதிகளை தேசியமயமாகளும்

இணைத்தலுமே !

பொன்னை விளைவிக்கும்

பூமித்தாயின் வயிற்றில் ,

கட்டிட புற்றுநோய் அல்லவே தொற்றிகிடக்கு !

உணவு பொருட்கள் விளைந்து செழித்த இடத்தில்

கழிவு குப்பைகளை கொட்டி

பூமியின் புனிதத்தை கெடுக்கிறோம் !

மும்மாரி பொழிந்த மழை ,

முப்போகம் விளைந்த நெல் ,

பசுமையால் செழித்த பூமி ,

பசியாறிய உலகம் ,

மருந்துகள் இல்லாத அந்த காலத்தில் ,

இயற்கையாய் விளைச்சல்,

ஆறுமாத பயிரால்

ஆயிசு நூறு ,

மூன்று மாத பயிரால்

ஆயிசு பாதி ,

இயற்கையை உண்டவன் இயற்கையாய் மடிந்தான் ,

மருந்தால் விளைந்ததை சாப்பிட்டவன்

மருந்தாலே மடிகிறான் !

ஆயிரம் தொழில்களில் ஆர்வம் கொண்டோம் ,

சோறுபோடும் தொழிலை மறந்துபோனோம் ,

சேற்றில் கால்வைக்கவிட்டால் ,

சோற்றுக்கு வழியேது

கணிப்பொறிகள் வந்ததும்

கழனிகளை மறந்துவிட்டோம் ,

எப்படி ஏறி எங்கு சென்றாலும் ,

அடிப்படை என்பது விவசாயம்தானே !

வரப்புகளை வெறுத்தோம் ,

இயற்கையின் வெறுப்புகளை சம்பாதிக்கிறோம் ,

பணமென்பதையே கொள்கையாய் கொண்டுவிட்டோம் ,

விவசாயத்தை விட்டுவிட்டால் ,

நாளை பணத்தையா தின்ன முடியும் !

விளையாட்டு சாதனைக்கு

கோடிக்கணக்கில் பரிசு ,

விவசாய சாதனைக்கு என்னையா இருக்கு ,

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை !

இந்தியாவின் முதுகெலும்பு

கூன் வளைந்து போய்விட்டது ,

ஆமாம்,விவசாய நிலங்களில்

இன்று காடிடங்கள் அல்லவே

விளைந்து கிடக்கு !

எருவும் , நீரும் , சேரும் , விதையும்

கலந்த இடத்தில் ,

இன்று கம்பியும் , கலவையும் , கான்கிரிட்டும்

அல்லவா கலந்து கிடக்கு !

நாற்று வாசனை வந்த இடத்தில் ,

தார் வாசனை ,

வரப்புகளை அபகரித்த

தேசிய நெடுஞ்சாலைகள் ,

சோறுக்கு வழிதேடாத அரசு ,

பீருக்கு வழிதேடுது ,

களையிழந்த விவசாய ஒழுங்குமுறை

விற்பனைக்கூடம் ,

களைகட்டும் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகள்!

முட்டாள் சட்டங்களால் ,

முடங்கிப்போன விவசாயம் ,

விளைவித்த நிளங்கள்

இன்று விலைநிலமாய்,

பாரத தாயின் உடலை

பங்கு போட்டுக்கொள்ளும் ரியல் எஸ்டேட் !

வருடா வருடம் வரும் பட்ஜெட் ,

வாழவைக்கும் விவசாயத்தை மறந்துவிட்டு ,

சாகடிக்கும் ராணுவ தளவாடங்கள் வாங்க முதலிடம்!

ரத்தத்தை வியர்வையாக்கி ,

உழைத்து சோர்ந்தவனுக்கு

ஓய்வெடுக்க வீடில்லை ,

A / C அறையில் ஓசியில் தூங்கும் அதிகாரிகளுக்கு

ஐந்தாவது , ஆறாவது ஊதிய கமிஷனில்

சம்பள ஏற்றம் ,வீடு , ஊர் சுற்ற கார் !

No comments:

Post a Comment