Tuesday, August 20, 2013

TUBE LIGHT குழல் பல்பு வெண்மையாக எரியக் காரணம் என்ன..?



குறைந்த அழுத்தத்தில் ஆவி நிரப்பப்பட்ட குழலில் மின்னிறக்கம் காரணமாக புற ஊதாக்கதிர்கள் வெளிப்படுகின்றன.
இவை கண்ணுக்குப்புலப்படா.
குழலின் உட்புறத்தில், புற ஊதாக்கதிர்களை உட்கவர்ந்து ஒளிக்கதிர்களாக மாற்றக்கூடிய ஓளிர்வுப் பொருட்கள் பூசப்பட்டிருக்கும்.
இவற்றிலிருந்து கிடைக்கும் ஒளி,
எல்லா அலைநீளங்களிலும் வெளிப்படுவதால்
அவவொளி வெண்மையாக நமக்குத் தெரிகிறது.

No comments:

Post a Comment