அணு உலைக்கு மாற்றாக மிதக்கும் சூரிய மின்சக்தி தீவுகளை உருவாக்குகிறது சுவிட்சர்லாந்து !
சுவிஸ் நாட்டில் உள்ள ஏரியில் மூன்று மிதக்கும் சூரிய ஒளித் தீவுகளை உருவாக்கி வருகிறது இரு தனியார் நிறுவனங்கள். இத்தீவுகள் செயற்கையாக உருவாகப்படுபவை. ஒவ்வொரு சூரிய தீவுகளிலும் 100 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு மிதக்கும் தீவும் 25 மீட்டர் குறுக்களவு கொண்டது . இவைகள் சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றும் சோதனைக் கூடமாக செயல்படும் . இதில் உள்ள சூரியத் தகடுகளில் படும் ஒளி அருகில் உள்ள வெந்நீர் தொட்டிக்கு அனுப்பப்படும். அதிலிருந்து உருவாகும் நீராவியை குழாய்கள் வழியாக கரையில் இருக்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும். அங்குள்ள நீராவியால் இயங்கும் சுழலும் டர்பைன் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இத் தீவிலுள்ள 100 சூரிய தகடுகளும் 45 டிகிரி பாகையில் சாய்வாக இருக்கும் . மேலும் மொத்த தீவும் 220 டிகிரி சுழலும் விதமாக அமைக்கப்படுகிறது. எந்த திசையில் சூரிய ஒளி விழுகிறதோ அத்திசையில் இந்த தீவை சுழற்றிக் கொள்ளலாம். அதனால் சூரியக் கதிர்களின் முழு ஆற்றலை பகல் பொழுதில் எந்நேரமும் பெறலாம் .
இந்த மூன்று சூரிய சக்தி தீவுகளும் 2013ஆகஸ்ட் மாதம் நிறுவப்படும் எனத் தெரிகிறது. இதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை அருகில் உள்ள நிலப்பரப்புக்கு அனுப்பும் கட்டமைப்பு வசதிகளையும் தற்போது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதை உருவாக்க சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் எனத் தெரிகிறது. எனினும் இதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை ஒப்பிடுகையில் இந்த செலவு பெரும் செலவாக இருக்கபோவதில்லை. சுத்தமான மின்சாரமும் செலவு குறைந்த மின்சாரமும் இதன் மூலம் கிடைப்பது நல்ல விடயம் தானே . இந்த சூரிய தீவுகளின் மூலமா பல பல நூறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுமின் நிலையம் அமைக்க பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து அதனால் சுற்றுப் புறச் சூழல் மாசடைவதுடன் மக்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது . பல நோய்களை கண்ணனுக்கு தெரியாமல் மக்களிடம் பரப்புகிறது. இதையெல்லாம் தவிர்க்கும் விதமாக இப்படியான மாற்று வழி மின்சாரத்தை தமிழகமும் பயன்படுத்த முன்வந்தால் ஆபத்தான அணு உலைகளுக்கு நாம் மூடுவிழா காணலாம்.
ஐரோப்பியா நாடுகள் மாற்று வழி மின்சாரத்தை நோக்கி பயணித்து அணு உலைகளுக்கு மூடுவிழா காணும் போது நாம் மட்டும் ஆபத்தான அணுஉலைகளை ஏன் திறக்க வேண்டும் ?

No comments:
Post a Comment