Saturday, June 28, 2014

தேன்சிட்டு

காலி வயிறு..!
----------------------
வணக்கம்.. நண்பா்களே...!

ChandraSekaran Sonof PV Nathan's photo.

















சொல் வழக்கு ஒன்று உண்டு...
”யாரும்.. படுக்கைக்கு ..பட்டினியுடன் செல்லக்கூடாது..”
இதை உணா்ந்தவா்கள்.. நாங்கள்...
எங்களால் எது முடியுமோ.. அதை
அனைவருக்கும் பகிா்ந்து.. கொடுப்பதில்..
எங்கள் குழுவினா் என்றைக்கும்..தயங்குவதில்லை..
அந்த வாிசையில்.. தேன்சிட்டு குழுமத்தின்..
எனது கூட்டாளி நண்பா் திரு.பாரதி அவா் அருமை
சகோதரா் திரு.சரவணன் அவா்களுடைய..
லியோ சுயசார்பு இயற்கை வேளாண் பண்ணைக்கு..
”நீங்கள் உள்ளே வரும்போது வேண்டுமானால்..
காலி வயிறுடன் வரலாம்”.. ஆனால் திரும்பிச்
செல்லும் போது உங்கள் வயிறு காலியாக...
இருக்கக் கூடாது.. நண்பா்களே..
இந்த பண்ணை சென்னை-திருநின்றவூருக்கும்..
அரக்கோணத்திற்கும் இடையில் வடக்கே.. உள்ள..
காவோி ராஜபுரத்தில் சுமார் 200 ஏக்கா் பரப்பளவில்..
பரந்து விரிந்துள்ளது...
முற்றிலும் இயற்கை வேளாண் சுயசார்பு பண்ணை..
ஆகும்... இயற்கை வேளாண் என்றால் பொதுவாக..
அனைவருக்கும்.. தெரிந்ததுதான்.. அதாவது.. இயற்கை
உரங்கள் இட்டு விவசாயம் செய்வது.. அவ்வளவுதான்..
சாி நண்பா்களே.. அது என்ன சுயசார்பு.. பண்ணை...
ஒரே வாியில் சொல்வதென்றால்... வெளியில் இருந்து..
சூாிய ஒளியும்.. காற்றும் மழையும் தவிர வேறு எதுவும்..
உள்ளே செல்வது இல்லை.. மின்சாரம் உட்பட..
அது எப்படி சாத்தியம்.. என வரிசையாக கூறுகிறேன்..
முதலில் 200ஏக்கா் பண்ணையின் அமைப்பை பார்ப்போம்..
முன் பகுதியை தவிர சுற்றிலும் மரவேலி.. அதனுள்..
17 வகையான மாமரங்கள் . நெல்லி..சப்போட்டா ..மாதுளை..
கொய்யா.. வாழை.. என 20க்கும் மேற்பட்ட பழவகை மரங்கள்..
30க்கும் மேற்பட்ட மரவகைப் பயிா்கள்.. மூலிகை செடிகள்..
என இன்னும் பல..
1. மண் ஆதாரம்..
---------------------------
இயற்கை வளம் மிக்கது..
2.நீா் ஆதாரம்..
-----------------------
பண்ணையில்..ஒரு பொிய கிணரும்...அதைவிட பெரிய..
நீா்தேக்கக் குளமும் வெட்டப்பட்டிருக்கிறது..
3.உர மேளாண்மை..
-------------------------------
ஒரு துளி செயற்கை உரமோ.. பூச்சி விஷமோ..
ஒருபோதும் பயன்படுத்துவதே..இல்லை..
அதற்கு மாறாக.. இயற்கை உர பயன்பாடு.. எவ்வாறு..?
சுமார் 50 மாடுகள்.. (பால் கன்றுக்கு மட்டுமே..) 200க்கும் மேற்பட்ட ஆடுகள்.. நான்கு கழுதைகள்.. கினி கோழி.. போண்டா வாத்து.. சேவற்கோழிகள்.. முயல்கள்..
ஒட்டகங்கள்.. குதிரைகள்..இன்னும்பல..
4.மின்சாரம்..
--------------------
சோலார் தகடுகள் முழுமையா பொருத்தி இருப்பதால்..
மின்மோட்டார்கள் இயக்கத்தில் சொட்டுநீா் பாசனம்..
5.களை மேளாண்மை...
-------------------------------------
இலை தழை..ஆடு ..மாடுகளே பார்த்துக் கொள்ளும்..
புல்பூண்டுகளை..குதிரையும்.. பூச்சிகள்.. புழுக்கள் கோழி.. வாத்துகளுமே..பார்த்துக்..கொள்ளும்.. உயரமான வேலி மரங்கள் ஒட்டகம் பார்த்துக்கொள்ளும்.. இதை சும்மா
வேடிக்கை பார்த்துக் கொள்ள ஒரு நபா் மட்டுமே..
6.அறுவடை..
---------------------
அதற்கு.. நீங்களேதான்..
ஆம் நண்பா்களே.. குடும்பத்துடனும்..நண்பர்களுடனும்...
உறவினருடனும்.. குழந்தைகளுடனும்..காலி வயிறுடன்..
வாருங்கள்...காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை
தங்கி சுற்றிப்பாருங்கள்.. உங்களுக்கு பிடித்தமான
பழங்களை நீங்களே பறித்து சாப்பிடுங்கள்.. உங்கள் வீட்டிற்கோ ..உறவினருக்கோ.. நண்பாகளுக்காகவோ..
பழங்களை நீங்களே..பறித்து பையில் போட்டால் ..
அங்கே உள்ள கழுதைகள் உங்களுக்காக சுமந்து..
எடை இயந்திரம் வரை கொண்டு வந்து கொடுத்துவிடும்..
விலை 30 முதல் 50 வரை மட்டுமே.. சிறிய காலிஅட்டை
பெட்டிகளும் அங்கேயே விலைக்கு கிடைக்கும்...
பழங்களை கீழே இருந்தே பறிக்கவும்.. என்னை போல..
மரத்தில் தயவுசெய்து ஏற வேண்டாம்.. பத்திரமாக..
இருக்கவும்... மேலும் பறித்த பழங்களையோ.. சாப்பிடும்..
பழங்களையோ.. தயவு செய்து வீணடிக்காதீா்கள்...
மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.. நண்பா்களே...
நீங்கள் அங்கு பறித்து சாப்பிடும் எந்த பழமாக..
இருந்தாலும் சரி.. அது எவ்வளவு எண்ணிக்கையாக..
இருக்தாலும் சாி.. அதற்கு கண்டிப்பாக விலை இல்லை..
விலையில்லையே என கூச்சப்பட வேண்டாம்..நண்பா்களே..
பிடித்ததை பறித்து வயிறார..மகிழ்ச்சியுடன் சாப்பிடுங்கள்..
அதுதான் பாரதி,சரவணன் மற்றும் எங்களுக்கும்.. மகிழ்ச்சி..
இன்னும் நிறைய கதைகள்.. உள்ளன.. பின்னா் பேசுவோம்..
நண்பாகளே..
கூகுள் மேப்பில் உங்கள் இடத்திலிருந்து..Kaveri rajapuram..என டைப் செய்து வழி தெரிந்து கொள்ளுங்கள்.. அரக்கோணம் பேருந்து நிலையத்திலிருந்தும்.. பேருந்துகள் உள்ளன..
மேலும் அவசியம் ஏற்பட்டால் மட்டும் திரு. பாரதி ..
அவா்களை தொடா்பு கொண்டு ஒரு சில வார்த்தைகள்
மட்டும் பேசும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்..
ஒரு சில சமயம் தொடா்பு கிடைக்காவிட்டால்.. மீண்டும்
முயற்ச்சி செய்து பாருங்கள்.. சில சமயங்களில் வேலைப்
பளு அதிகமாக இருந்தால் கைபேசியை அவரால் எடுக்க இயலாமலும் இருக்கக்கூடும்.. யாரும் தவறாக எண்ணவேண்டாம்..
திரு.பாரதி.. 99400 17635 தொடா்பு கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment