Monday, June 30, 2014

சித்தர்களின் பள்ளி படை ஆலயங்கள் வடக்குப் பொய்கைநல்லூர் -கோரக்கநாதர்




> நாகப்பட்டிணம் மாவட்டம் வடக்குப் பொய்கைநல்லூர் (வேளாகண்ணியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) எனும் இடத்தில போகர் மற்றும் மச்சமுனி சித்தரின் சிஷ்யன் கோரக்க சித்தர் ஜீவ சமாதி பெற்றுள்ளார் ..எல்லா சித்தர்களும் ஏதேனும் பழமையான சிவாலயத்தில் சமாதி கொண்டிருப்பர் ..ஆனால் இவர் கடற்கரை பகுதியில் வெட்டவெளியில் கருணையே வடிவாக கோரக்க நாதர் காட்சி தருகிறார் .சாம்பலில் இருந்து உதித்தவர் ..குரு பத்தி மிகுந்தவர் இரக்ககுணம் படைத்தவர் ..இங்கே தவத்தில் அமர்ந்தால் மனம் லகிக்கிறது ... ..இங்கு இருந்து எழுந்து வர மனமே இல்லை ...ஒருமுறை சென்று வாருங்கள் ...
> நாகப்பட்டிணம் மாவட்டம் வடக்குப் பொய்கைநல்லூர்க்கு அருகே ஒரு மைல் தொலைவில் வாலைதேவி ஸ்ரீ பால்மொழி அம்மன் கோவில் உள்ளது ...இது காகபுசண்டர் வனம் என்று அழைக்கப்படுகிறது ...காகபுசண்டர் தவம் செய்த வனம் என்று நம்பப்படுகிறது ...அமைதியான இடம் .. இங்கு மிகவும் பழமையான பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது இந்த ஆலமரத்தின் நடுமைய பகுதியில் தான் ஸ்ரீ பால்மொழி அம்மன் இருக்கிறார் மிகவும் பழமை வாய்ந்த சித்தர் குடிலாகும் ..தற்போது இந்த ஆலமரத்தை சுற்றி 18 சித்தர்களின் சிலை வைத்துள்ளனர்.....சென்று வாருங்கள் ...

> கோரக்கரின் ஜீவசமாதி இடங்கள்:

1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு)
4. வடக்கு பொய்கை நல்லூர்
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (வட நாடு)

இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருளும் பேரருளாளர்.

 .. இங்கு மிகவும் பழமையான பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது இந்த ஆலமரத்தின் நடுமைய பகுதியில் தான் ஸ்ரீ பால்மொழி அம்மன் இருக்கிறார் மிகவும் பழமை வாய்ந்த சித்தர் குடிலாகும் ..தற்போது இந்த ஆலமரத்தை சுற்றி 18 சித்தர்களின் சிலை வைத்துள்ளனர்.....சென்று வாருங்கள் ...

> ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார். மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள். மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து “இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்” என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.
அவளோ “உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே” என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள். சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார். பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண். மச்சேந்திரர் சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய் என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று “கோரக்கா” என்று கூப்பிட்டார். அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால் கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார்.

கோரக்க சித்தர் ஜீவ சமாதி அருகே உள்ள தியான மண்டபத்தில் கோரக்கர் ..

> பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர். அதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். அதில் ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும் அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார். மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் ‘எனக்கு மேலும் வடை தேவை’ என்றார். கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். ‘சுட்டுத்தாருங்கள் தாயே’ என்று மன்றாடினார். ‘‘ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..’’ என்றாள், அவள். ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’ என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்?’’ _ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள். கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ‘‘கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்?’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?’’_என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார்.




கோரக்க சித்தர் ஜீவ சமாதி

> கோரக்கரும் பார்வை பெற்றார். அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார். காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது. அல்லமத்தேவர் ஓர் அபூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும். மொத்தத்தில் இயற்கையின் பல பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர். அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது. கோரக்கரே இவரை வெட்டியவர். தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார். பின்னாளில் பிரம்ம முனியின் நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது.


No comments:

Post a Comment