Monday, June 30, 2014

காகபுஜண்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பரதேசி விநாயகர்



> பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் TO துறையூர் வழித்தடத்தில் களரம்பட்டி என்ற கணவாய் கிராமம் உள்ளது ..சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு பார்பதற்கு மிகவும் அழகான இயற்கை அமைப்பை பெற்றுள்ளது
 



> இங்கே காகபுஜண்ட மகிரிசி 1300 வருடங்களுக்கு முன்பு அனுகூல மாமுனி எனும் திருநாமத்தில் விநாயக பெருமானை ஸ்தாபனம் செய்து வழிபட்டும் இங்கே தவம் இயற்றியும் வந்துள்ளார் ..இந்த விநாயகர் பரதேசி விநாயகர் என்றே அழைக்கப் படுகிறார்..
 

> காகபுஜண்ட மகிரிசி விநாயக பெருமானை ஸ்தாபனம் செயும் போது வாகனமாக அஷ்ட சித்திகளை முறை படி 8 மூசிகமாக
(மூஞ்சுரு ) பிரதிஷ்டை செய்துள்ளார் ..
 

> சித்தர் இந்த மலை குகையில் ரசவாதம் ,காயகற்பம் ,வைத்திய
சாஸ்திரங்கள் கைவர பெற்றவர்கள் ..சித்தர் கலைகளை காவல் காக்கும் பொருட்டு அய்யனார் ,ஆகாச கருப்பு ,கோட்ட கருப்பு ன்னு விநாயகரை சுற்றிலும் காவல் தெய்வங்கள் இருக்கிறது...
 

> புலிகால் சித்தர் ,பதஞ்சலி என மூல சித்தர்கள் வலம் வந்த பெருமைக்குரிய பகுதியாக பெரம்பலூர் திகழ்கிறது ...அருகே மேல புலியூர் ,கீழ புலியூர் ,புளியம்சோலை எனும் ஊர்களே இதற்கு சான்றாகும் ...
 

> பரதேசி விநாயகர்க்கு எதிர் புறம் காகபுசுடற்கு திருவுருவ சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது ..மாதம் தோறும் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பூஜை நடை பெறுகிறது ..
 

 > ஒரு முறை வாருங்கள் ...சித்தர்கள் வழிபட்ட பரதேசி விநாயகரை நாமும் வழிபட்டு நலம் பெறுவோம் ...

No comments:

Post a Comment