Monday, June 30, 2014

சித்தர்களின் பள்ளி படை ஆலயங்கள் - கரூரில் -காத்தருளும் கரூரார் சித்தர்




கரூர் பேருந்து நிலையம் அருகே நடந்து செல்லும் தொலைவில் உள்ளது அருமையான, பழமையான,பெரிய சிவாலயம் இங்கே பசுபதீஸ்வர் பசுபதிநாதர், (பசுபதி, ஆனிலையப்பர்) என்னும் திருநாமத்தில் சிவபெருமான் எழுந்தருளுகிறார் ...ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.


> பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் என்ற சித்தர் வாழ்ந்து பேறு அடைந்த கோயில். இவர் ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.


> கருவூர் சித்தர் : பதிணென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். பற்றற்றவராக வாழ்ந்திருந்த இவர் மீது அந்தண இனத்தைச் சார்ந்தவர்கள் வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் குறை கூற, மன்னன் இவரிடம் எக்குறையும் காணாது, குறை கூறியவர்களைத் தண்டித்தான். மீண்டும் மீண்டும் அந்தணர்கள் தொல்லை தரவே இவர் தைப்பூசத்தன்று ஆனிலையப் பருடன் ஐக்கியமானதாகக் கூறப்படுகிறது.


> இங்குள்ள ஆனிலை எனும் லிங்க வடிவமானது முற்றிலும் சுயம்பு மூர்த்தியாகும். புற்றிடங்கொண்ட ஈசரை முதலில் வழிபடும் பெருமை பெற்றவராக பிரம்மதேவர் குறிப்பிடுகிறார். காமதேனுவால் வழிபடப்பட்ட சிவாலயம் இது. காமதேனு வழிபடும்போது குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் ஏற்பட்ட குழிவான தழும்பு வடிவம் உள்ளது.


> இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது.


> சித்தர் பீடத்தின் அமைப்பே மனதை லகிக்க செய்கிறது ..பீடத்தின் முன்று பீடத்திலும் காக புசுண்டர் , அகத்தியர் , பதஞ்சாலி முனிவர் என அமைப்பு அழகாய் உள்ளது .பீடத்தின் முற்றத்தில் பதினெட்டு சித்தர்களுக்கும் அமர்ந்து அருள் செய்வது போல் உள்ளது ...எழுந்து வரவே மனமில்லை ...ஒருமுறை சென்று வாருங்கள் ..

>  சித்தர் பீடத்தின் அமைப்பே மனதை லகிக்க செய்கிறது ..பீடத்தின் முன்று பீடத்திலும் காக புசுண்டர் , அகத்தியர் , பதஞ்சாலி முனிவர் என அமைப்பு அழகாய் உள்ளது

> சித்தர் வழிபாட்டில் மெய்பொருளை நாடும் அன்பர்கள் ஒருமுறை சென்று வாருங்கள் ..சித்தர் பீடத்தில் தவம் செய்ய தெய்வீக உணர்வுகளை பெறலாம் ...வழிகாட்ட வல்ல குருவாக அருள் செய்கிறார் ..உத்திரம் 2 பாதம் ,சித்திரை 2 பாதம் ,அஸ்தம் ஆகிய நட்சத்திரக் காரர்கள் செல்ல வேண்டிய அருமையான ஸ்தலம் ..

>  சித்தர் பீடத்தின் அமைப்பே மனதை லகிக்க செய்கிறது ..பீடத்தின் முன்று பீடத்திலும் காக புசுண்டர் , அகத்தியர் , பதஞ்சாலி முனிவர் என அமைப்பு அழகாய் உள்ளது

> சோழர்களின் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர் கருவூர் சித்தர்! அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கு ராஜராஜசோழனின் அப்பா தங்கத்தால் பசு ஒன்றை தானமாக வழங்கினார் என்று வரலாறு தெரிவிக்கிறது;அதன் பலனாக,உலகம் முழுவதையும் ஆட்சி செய்வதற்காகவே பிறந்தவர் ராஜராஜசோழன்!(அலெக்ஸாண்டர் உலகை கைப்பற்றுவதற்கு முன்பே உலகை ஆண்டவர் நமது மன்னர் ராஜராஜசோழன்! சித்தர் கருவூராரின் ஆசியும்,வழிகாட்டுதலுமே இதற்குக்காரணம்!!!

> கருவூர் சித்தர் : பதிணென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில்  கோயில் கொண்டுள்ளார்.

> கடும் தவத்தினால் கரூர் சித்தருக்கு எட்டு வகை சித்திகள் கிடைத்தன. சித்திகள் பெற்ற கரூர் சித்தர் சிவ தல யாத்திரை மேற்கொள்கிறார். ஈசனை அழைத்த உடன் அவர் காட்சி கொடுக்க வேண்டும் என்ற சித்தியும் பெற்றார். நெல்லை வந்த கரூர் சித்தர் நெல்லையப்பரை அழைத்தார். கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமுற்ற கரூர் சித்தர் ஈசன் இங்கு இல்லை. எருக்கும், குறுக்கும் இங்கு எழுக என்று சாபமிட்டு மானூர் நோக்கி நடந்தார்.

>  சித்தர் பீடத்தின் அமைப்பே மனதை லகிக்க செய்கிறது ..பீடத்தின் முன்று பீடத்திலும் காக புசுண்டர் , அகத்தியர் , பதஞ்சாலி முனிவர் என அமைப்பு அழகாய் உள்ளது

சுவாமி நெல்லையப்பர் சிவதொண்டராக வந்து கரூர் சித்தரை அழைத்தார். சற்று கோபம் தணிந்த சித்தர், மானூர் வந்து காட்சி தந்து சாபவிமோசனம் பெறலாம் என ஈசனிடம் கூறி நடந்தார். இதையடுத்து நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் மானூர் சென்று கரூர் சித்தருக்கு ஜோதிமயமாக காட்சி அளித்தனர். தொடர்ந்து கரூர் சித்தரை உடன் நெல்லைக்கு அழைத்து வந்தார்கள். நெல்லை வந்ததும், இங்கு ஈசன் உள்ளார். எருக்கும், குறுக்கும் அறுக என கூறி சுவாமிக்கு சாப விமோசனம் வழங்கினார்...


No comments:

Post a Comment