சூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள்
* இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக்
கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும்.
* மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு 3000 யூனிட் மின்சாரம் தேவை.இந்தியாவில் தற்போது சராசரியாக ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மின்சாரம் 800யூனிட்கள்.
*ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில்கிடைக்கும் சூரியவெப்பம் கொண்டு 700 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும்.
*நமக்குக் கிடைக்கும் ஒளியின் அளவு:
7வாட்ஸ் L.E.D.பல்ப் தரும் ஒளி =18 வாட்ஸ் C.F.L.BULBதரும் ஒளி =40 வாட்ஸ் tube light தரும் ஒளி =60வாட்ஸ் குண்டு பல்ப் தரும் ஒளி.
எனவே L.E.D.பல்ப் அதிகம் உபயோகத்திற்கு வந்தால் மின்சார செலவு கணிசமாகக் குறையும்.
*ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு 0.5 கிலோ நிலக்கரி எரிக்கப்படுகிறது. அதிலிருந்து 1.5கிலோ கார்பன் டை ஆக்சைட் வெளியேறுகிறது.இதனால் நமது சுற்று சூழல் கணிசமாக பாதிக்கப்படுகிறது.
*இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரம்,நிலக்கரி மூலம் தெர்மல் நிலையங்களில் 70%ம் ,அணுமின் நிலையங்கள் மூலமாக 15%ம் ,நீர் மூலமாக 5%ம் முறைசாரா வழிகளில் காற்றாலை மூலமாக 3%ம்,சூரிய சக்தியின் மூலம் 1%ம் பயோ சிஸ்டத்தின் மூலம் 1%ம்கிடைக்கிறது.
No comments:
Post a Comment