Monday, June 30, 2014

தேனீ மாவட்டம் -கொடுவிலார்பட்டி சச்சிதானந்தர் ஆசிரமம் :




> தேனியிலிருந்து 6-வது கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் கொடுவிலார்பட்டி எனும் கிராமம் சித்தர்களால் விரும்பப் பட்ட யோகவாழ்கைக்கு உகந்த ஒரு தெய்வீக மணம் கமழும் பூமியாகும்.
 

> 3000 ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியரின் சித்தர்புராணப் பாடல்களால் பாடப்பட்ட புண்ணிய பூமியாகும் ..அதன்படியே இன்றும் அந்த இடம் இருபெரும் மகான்களின் ஜீவ ஐக்கியம் பெற்ற சன்னிதானமாக இருந்து பக்தி மணம் பரப்பி வருகிறது..
 

> கொடுவிலார்பட்டி சச்சிதானந்தர் ஆசிரமத்தில் ஸ்ரீ சச்சிதானந்தர் சுவாமிகள் அவருடைய சற்புத்திரர் ஸ்ரீ பரஞ்ஜோதி சுவாமிகள் ஆகிய இருவரும் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளனர் ..
 

> இன்றும் இந்த சமாதி கோவிலில் ஸ்ரீ அகத்தியர் -உலோப முத்திரை ,ஸ்ரீ காகபுஜண்டர் -பகுளாதேவி இவர்களின் சூட்சும இருப்பை உணர முடியும் .
 

> இமாலயத்தின் மஹா அவதார பாபாஜி (மரணமற்ற மகான் )தன் குரு அகத்திய முனிவரைத் தேடிப் பொதியமலைக்கு வருகிறார் .அகத்திய மகிரிஷி காட்சி கொடுத்து கொடுவிலார்பட்டி எனும் கிராமத்தில் போகர் உன்னை கண்டு எடுத்துக் கதிர்காமத்தில் வைத்து உபதேசிப்பார் என்று அனுப்பி விடுகிறார் .மேற்கு தொடர்ச்சியின் சுருளிமலை வந்த பாபாஜி அங்கிருந்து கொடுவிலார் பட்டியை அடையாளம் காண முடியாமல் பன்றி மலை வழியாக பழனி வந்து போகரை காணுகிறார் ..உன்னை பார்க்க வீரபாண்டி கடந்து கொடுவை வர நினைத்தேன் என பாபாஜியை கண்ட மாத்திரத்தில் போகர் சொன்னதாக ஓலை சுவடி பாடல்கள் சொல்கின்றன ..
இப்படத்தில் காண்பதற்கரிய பொருள் ஒன்று உள்ளது ..இதனை யாரிடமும் சொல்லவேண்டாம் என ஆசிரமத்தில் சொல்லிவிட்டார்கள் ..நேரில் சென்று கண்டு களிப்புறுங்கள் ..

No comments:

Post a Comment