கரூரார் சித்தர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் ...செப்பு ,பொன்னில் விக்கிரகங்களை வார்ப்பதில் வல்லவர் இவர் .
ஒருமுறை ராஜராஜ சோழன் கருரரிடம் சுத்த தங்கத்தில் நடராஜர் சிலை வார்க்க சொல்ல கரூராரும் செய்து கொடுத்தார் ...அதில் செப்பு கலந்து விட்டதாக கூறி கருராரை சிறையில் அடைத்தார் ..கரூரரின் குரு போகர் சித்தர் தனது சீடரை காக்க சொக்க தங்கத்தில் செப்பு கலக்காமல் சிலை வார்க்க முடியாது எனும் உண்மையை உணர்த்தி கரூராரை மீட்டு சென்றிருக்கிறார் ..
அது முதல் கருராரிடம் நட்பு கொண்ட ராஜராஜன் இவரின் ஆலோசனைப் படி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டினார் -கும்பாபிஷேகம் செய்யும் போது கரூரார் கூறிய முறையில் செய்யாமல்
மந்திரி பிரதானிகள் -அரண்மனை புரோகிதர்களை திருப்தி படுத்த எண்ணி சித்தர் கூறியது பாதியும் -மற்றதில் பாதியுமாக கும்பாபிஷேகம் நடத்தினார் ..
லிங்கம்( பிரகதீஸ்வரர் ) அஷ்ட பந்தனம் ஆகவில்லை .. (மருந்து நிற்கவில்லை ) மன்னன் கரூராரை வேண்ட கரூரார் தாம்பூலம் தரித்து அதன் எச்சிலை அஷ்டபந்தனத்தில் துப்பி லிங்கத்தை நிறுத்த பந்தனம் ஆனது ..கரூரார் ராஜராஜனை அழைத்து நான் உனக்கு நன்மைக்காக கும்பாபிஷேக முறையை வகுத்து கொடுத்தேன் ..நீ யாரையோ திருப்தி படுத்த எண்ணி ஒரு முறையில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டாய் ..
எனது சொல் ஏற்கபடாத இடத்தில் எனக்கு வேலை இல்லை என கூறி குழியை தோண்டி உள்ளமர்ந்து ஜீவசமாதியில் ஆழ்ந்து சீடர்களை அதை மூட சொல்லிவிட்டார் ...சமாதிக்கு செல்லும் முன் மன்னரிடம் ஆணவத்தில் நிமிர்திருக்கும் நீ காட்டிய இக்கோவிலை தரிசிக்க வருபவர்கள் பதவி இழப்பர் என சாபம் கொடுத்து விட்டார் ...இதன்படி இந்த கோவிலுக்கு வரும் இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள் ..பிற உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்கள் பதவி இழந்து இருக்கிறார்கள்..
கரூரார் குடமுழுக்கு நடைபெற்ற நாளிலே சமாதி கொண்டதால் அவரது சமாதி கட்டப் படாமல் சிறிய அளவில் கோவில் பின்புறம் உள்ளது ..கருராரின் பிரிவை தாங்கி கொள்ள இயலாமல் அவரை நிலை குலைய செய்தது -சரியாக ஒரு மாதம் கழிந்ததும் கோபுரத்தின் உச்சிக்கு சென்று கிழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் ..
இக்குறிப்பு கன்னிமாரா நூலகத்தில் உள்ளது ..ராஜராஜன் இறந்த பிறகு பலகாலம் பூஜை இல்லாமல் வேறொரு காலத்தில் பூஜைகள் செய்யப்பட்டது ...
வழிகாட்ட வல்ல குருவாக அருள் செய்கிறார் ..உத்திரம் 2 பாதம் ,சித்திரை 2 பாதம் ,அஸ்தம் ஆகிய நட்சத்திரக் காரர்கள் செல்ல வேண்டிய அருமையான ஸ்தலம் ..
அருள் மிகு வராகி அம்மன் தனி சன்னதியில் அருளை வழங்கும் வடிவில் காட்சி தருகிறாள் ...
No comments:
Post a Comment