Tuesday, July 1, 2014

ADULTS ONLY....

மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...



உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குங்கள். எப்போதும் 'ஹார்ட்' ஆக இருக்க வேண்டியதில்லை. 'சாப்ட்' ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. 'வெரைட்டி'யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.

கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு 'உறவில்' இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும். அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு 'பிளான்' செய்வதும் தவறு.  கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை . உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, 'இன்னிக்கு என்ன பன்னப் போறானோ' என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல 'பொசிஷன்' குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் - முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.... என்பதை நினைத்து அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்



உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு  அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்

ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.

இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.

விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல்

அவசியமாகும்.

1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப்

பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச்

செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற

குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.

2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து  வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது.  இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

 மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு

செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை

மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும்.

ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும்

நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்

4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல

முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க

வேண்டும்.

 சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது

மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை

வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப்

பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள்

கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக்

கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.

 முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு

செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக்

கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில்

முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது

என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக

இருக்கக்கூடும்.

6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும்.

ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.

7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது

கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம்

நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.

8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல

முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன்

ஆண்கள் இருக்க முடியும்.

9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த

வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும்.

10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது

போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.  

இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை  முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------

ஆசைக்கு அடுத்த நிலை


செகஸ் ஆசை தோன்றியதும் ஆண்&பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே செயல்படத் தொடங்குகிறார்கள். உச்சகட்டத்தைப் பல்வேறு விதங்களில் அடையமுடியும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கோம்.

ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்

1. ஆண்&பெண் உறுப்புகள் மூலம் செயல்படும் இயல்பான கலவி
2. பெண் அல்லது ஆணின் ஆசனவாய்ப் புணர்ச்சி
3. வாய்வழிப் புணர்ச்சி
4. சுய இன்பம்
5. செக்ஸ் படங்கள், காட்சிகள் பார்ப்பது
போன்றவற்றின் மூலம் உச்சகட்டம் அடைய முடிகிறது. இந்த செக்ஸ் செயல்பாடுகளின் கடைசிக்கட்டமாக விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இதுவே ஆண்களுக்கு உச்சகட்டமாகும்.

பெண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்

1. இயல்பான பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைக்கும் கலவி
2. பெண் உறுப்புகளைச் சுவைத்தல்
3. சுய இன்பம்
4. பல்வேறு பொருள்பளைப் பயன்படுத்தி இன்பம் காணுதல்
5. கை, கால், வாய், போன்றவற்றின் மூலம் புற விளையாட்டுகள்
6. பிற பெண்ணுடன் கலந்து இன்பம் அணுபவித்தல்
7. பி.டி.எஸ்.எம். எனப்படும் துன்பத்தை அனுபவித்து இன்பம் காணுதல்

பெண்களுக்கும் விந்து வெளியேற்றம் உச்சகட்டத்தை அறிவிப்பதாக இருந்தாலும்அடுத்தடுத்து பல்வேறு உச்சகட்டங்களை அடைய முடியும். இது தவிர ஆண்&பெண் இருவரும் கனவு காணுதல், கற்பனை செய்தல், செக்ஸ் கதைகள் பேசுதல் மூலமாகவும் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------------

இணை தேர்வு வழிமுறை


காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.

1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.

3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.

4. மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.

6. ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில்  இருந்து அறிந்துகொள்ள முடியும்.

7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்.

8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.

9. பனக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.

10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்


 ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு  ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் கலவி அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை ஆசை ஏற்படாத நிலையில் கலவிக்கு அழைக்கவோ  அனுபவிக்கவோ கூடாது.

கீழ்கண்ட பல்வேறு காரணங்களால் செக்ஸ் அனுபவிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

1. உடல் அசதி
2. மன அழுத்தம்
3. மாதவிலக்கு
4. உடல் நலமின்மை
5. தம்பதிகளுக்குள் சண்டை
6. அதிக போதை
7. கடந்தமுறை செக்ஸில் நடந்த மோசமான நிகழ்வு
8. தொடர்நது ஒரே நிலையில் உறவுகொள்வதில் ஆர்வம் இன்மை

மேற்கண்ட காரணங்களால் செக்ஸை தவிர்க்க நினைக்கும் போது விலகிநிற்பதே நல்லது. ஆனால் மனம், உடல் நலத்தைச் சீரமைக்க உடலுறவால் முடியும் என்பதால் மேற்கண்டவற்றை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய இணையைச் சந்தோஷம் அடைய வைத்து இந்த சிக்கலில் இருந்து செக்ஸ் மூலம் விடுதலை வாங்கித் தரவும் முடியும். ஆனால் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கிய கட்டமாக இருக்க வேண்டும். இதற்கு ஆண் அல்லது பெண் மிகவும் பொறுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி தூண்டப்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். தன்னுடைய இணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அதன்படி அணுகி இன்பத்துக்கு அழைப்பதுதான் சரியான வழியாகும்.

---------------------------------------------------------


 

No comments:

Post a Comment