Thursday, May 21, 2015

வேற்று கிரக வாசிகள் 5 கோடி பேர் வாழ்கின்றனர்

லண்டன்




வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா  என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து உள்ளனர்.

சூரிய குடும்பத்திற்கு வெளியே ஆயிரகணக்கான் கிரகங்கள் உள்ளன.அங்கு எதிலாவது வேற்று கிரகவாசிகள் வாழும் வாய்ப்பு உள்ளது.ஆனால் இது வரை அவர்களது வாழ்க்கை முறை குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை.

லாக்ஹீட் மார்டின் அமெரிக்காவின் உலக அளவிலான விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாகும் . உலகளவிய  பாதுகாப்பு மற்றும் உயரிய தொழில் நுட்பம ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி என்ஜினியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் பாய்ட்புஷ்மேன்.  (வயது 78) கடந்த் ஆகஸ்ட் மாதம்  மரணம் அடைந்து விட்டார். வேற்று கிரகவாசிகளுடன் உரையாடியதாகவும்  அதன்மூலம் வேற்று கிரக வாசிகளான வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டதாகவும் அவர் படங்களுடன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது நண்பர் மார்க் கியூ பாட்டர்சன்னுடன் தெரிவித்து உள்ளார். இவர் தனியார் விண்வெளி என்ஜினீயர் ஆவார். பாட்டர்சன் தனது நண்பர் பாய்ட் புஷ்மேனின்  பேசுக்களை தொகுத்து பேட்டியாக யூடியூப்பில் வெளியிட்டு உள்ளார்.

பாய்ட் புஷ்மேன் சில வேற்றுகிரகவாசிகளுக்கு 230 வயது இருக்கும்,4 முதல்  5 அடி வரை உயரம் இருக்கும். அவைகளுக்கு நீளமான விரல்கள் இருக்கும். அவர்களுடைய கிரகம் கியூண்டும்னியா (Quintumnia) பூமியில் இருந்து அந்த கிரகத்திற்கு செல்ல 45 வருடங்களாகும். அவர்களுக்கு என்று அங்கு ஒரு வேலையை கொடுத்து பூமிக்கு அனுப்புவதாகவும்  அதனால் அவர்கள் பூமிக்கு வருகிறார்கள். வேற்று கிரகவாசிகளில் 2 பிரிவுகள் உள்ளது.  என்று கூறினார்.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகளின் உருவம் மற்றும் எடை அளவு குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் பிரபஞ்ச தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர் பெர்குஸ் சிம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேற்று கிரக வாசிகள் 5 கோடி பேர் வாழ்கின்றனர். அவர்கள் கரடி போன்ற தோற்றத்தில் இருக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் 314 கிலோ எடைவரை இருப்பார்கள் என கூறியுள் ளார். ’பெயஸ்’ கோட்பாடு அடிப்படையில் இதை தாம் கணித்ததாக அவர் தெரி வித்துள்ளார். 'பெயஸ் கோட்பாடு பெயசியன் புள்ளி விவர கணக்கியலின் பிரிவு ஆகும்.

No comments:

Post a Comment