Saturday, May 9, 2015

SMALL PC - உங்களை கண்காணிக்கும் மிகச்சிறிய கணிணி


_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஒரு அரிசி பருக்கையை விடவும் மிகவும் சிறிய புதிய கணிணி ஒன்று உங்களை அறியாமல் உங்களை கண் காணிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.இந்த வகை கணிணியே உலகின் மிகவும் சிறிய கணிணி என்றும் அறியப்படுகின்றது.இதன் அளவு 5 மில்லிமீற்றர்அளவுடையதாகும்.மேலும்குறுக்காக இது 2மில்லிமீற்றர் அளவுடையது.
இந்த கணிணி மிச்சிகன் மைக்ரோமோட் என்று அறியப்பட்டுள்ளது.இந்த கணிணிக்கு தேவையான மின்வலு சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கின்றது.சூரியவெளிச்சத்தில் வலுவேற்றப்பட்டு இந்த கணிணி இயங்கும் வலுவுடையது.மேலும் இந்த கணிணியில் வெப்பநிலை உணரி,அமுக்க உணரி மற்றும் கண்காணிப்புகருவிகள் என்பனவும் இணைக்கப்பட்டுள்ளமை இந்த கண்டுபிடிப்பின் விசேட அம்சமாகும்.
இதன் அளவுக்கு ஏற்ப ஒரு சிறு மூடியினுள் 150க்கும் அதிகமான இந்த கணிணியை உள்ளடக்கலாம் என்ற அளவு கூறப்படுகின்றது.மேலும் ஒரு கணிணியின் முழுமையாக தொழிற்பாட்டை இந்த சிறிய கணிணி கொடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.கணிணி ஒனிறின் பாகங்கள் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்படும் போது செய்ற்பாடுகள் குறையாது ஆனால் அவற்றுக்கு தேவையான மின்சாரவலுவில் மாற்றம் இருக்கும்.அதாவது தேவையான மின்சாரம் மிகவும் குறைவானதாகும். அந்த வகையில் இதன் சூரியமின்னேற்றும்கலம் 1மில்லிமீற்றர் தர 2 மில்லிமீற்றர் அளவுடையது.
தனிநபர்பாதுகாப்பு விடயங்களில் இத்தகைய கணிணிகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
படங்களை பாருங்கள் உங்களுக்கே இது புரியும்.

நன்றி,
சிஎன்

No comments:

Post a Comment