____________________________________________________________
பல பேர் கணித அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள் சிலபேருக்கு கணிதம் விளங்காமல் மிகவும் அவஸ்தைப்படுவார்கள். அப்படி அவஸ்த்தைப்படுபவர்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளது ஒரு இணையம். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு கணித section களையும் அறிந்து கொள்ளலாம்.சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கணித அகராதியான ஏ மேக்த்ஸ் டிக்ஷனரி பாட் கிட்ஸ் தான் அந்த தளம்.அகராதிகளில் பல வகை உண்டு இல்லையா? ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் பார்க்க உதவும் பொதுவான அகராதிகள் தவிர குறிப்பிட்ட துறைகளுக்கான அகராதியும் உண்டு.அந்த வகையில் கணித பாடத்தில் அடிப்படையான விஷயங்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்தஅகராதி உருவாக்கப்பட்டுள்ளது.
கணித பாடத்தில் ஏதாவது ஒரு பதம் சரியாக புரியவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் அதற்கான அர்தத்தை இந்த தளத்தில் தேடிப் பார்க்கலாம். அகராதியில் எப்படிபொருள் தேடுவோமோ அதே போல இந்த தளத்திலும் குறிப்பிட்ட சொல்லுக்கான பொருள் தேடலாம்.அகராதியை போலவே அகர வரிசையில் சொற்களுக்கான பட்டியல் இடம் பெற்றுள்ளது. விளக்கம் தேவைப்படும் சொல்லின் ஆரம்ப எழுத்தை இந்த பட்டியலில் பார்த்து கிளிக் செய்து பொருள் தெரிந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு “டிகேட்” என்றால்என்ன என்றோ அல்லது “டிரில்லியன் “என்றால் என்ன என்ற சந்தேகமோ ஏற்பட்டால் அந்த சொல்லுக்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்.அதே போல “ஹெக்சகன்” என்பது எதை குறிக்கும் என்று குழப்பமாக இருந்தாலும் அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.“மில்லினியம்” என்பதுஎதை குறிக்கும் “வென் டயகிராம்” என்றால் என்ன என்று சந்தேகம் ஏற்பட்டாலும் அவற்றுக்கான பொருளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கணித பாடம் தொடர்பான பதங்களுக்கு விளக்கம் தேவை என்றால் இந்த அகராதி கை கொடுக்கும்.
சுட்டிசுக்கான அகராதி இல்லையா,அதனால் இதில் விளக்கங்களும் சுவாரஸ்யமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான அகராதி போல வெறும் அர்தத்தை மட்டும் தராமல் அந்த அர்தத்தை எளிதாக புரிய வைக்க கூடிய அழகான விளக்கமும் இடம் பெற்றுள்ளது. பல இடங்களில் இந்த விளக்கம் அனிமேஷன் வடிவிலும் இருப்பது தான் சிறப்பு.இந்த அனிமேஷன் விளக்கத்தால் அர்த்தமும் எளிதாக புரிவதோடு அந்த விளக்கத்தை தெரிந்து கொள்வதில் கூடுதல் சுவாரஸ்யமும் உண்டாகும்.உதாரணத்திற்கு டிரில்லியன் என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம்.எண்ணிக்கையில் நூறு ,ஆயிரம்,லட்சம் போல மில்லியன்,பில்லியன்அதற்கடுத்து டிரில்லியன் வருகிறது. டிரில்லியன் என்றால் லட்சம் கோடி என்று பொருள். அதாவது மில்லியன் மில்லியன். இது எத்தனை பெரிது என்று எளிதாக உணர்த்துவதற்காக இந்த அகராதி டிரில்லியன் என்றால் பத்தின் பனிரெண்டு மடங்கு என்று விளக்கம் தருகிறது. அருகிலேயே 12 முறை வரைசையாக பத்தை பெருக்கி காட்டுகிறது. அதற்கு கீழே உள்ள பகுதியில் கிளிக் செய்தால் டிரில்லினனை நீங்களே எண்ணிக்கையில் எழுதிப்பார்க்கலாம். அதாவது பத்தை பணிரெண்டு முறை கிளிக் செய்தால் அந்த எண்ணிக்கை தோன்றுகிறது. இது ஒரு சின்னஞ்சிறிய அனிமேஷனாக தரப்பட்டுள்ளது.
இதே போல முப்பரிமாணம் என்னும் திரி டைமன்ஷனுக்கும் சின்ன அனிமேஷனோடு விளக்கம் தரப்பட்டுள்ளது.இந்த அனிமேஷன் விளக்கங்கள் பல இடங்களில் நாமே விளையாடி பார்க்க கூடிய புதிர் விளையாட்டு போல இருக்கிறது. டிஸ்டன்ஸ் என்ற சொல்லுக்கு இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான நீளம் என்று பொருள் தெரிந்து கொள்வதோடு அதற்கான உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ள பறவைகளுக்குஇடையிலான தூரத்தை நாமே ஸ்கேல் கொண்டு அளந்து பார்க்கலாம்.அதே போல பித்தகரஸ் பற்றிய விளக்கத்தில் வெவ்வேறு வகையான முக்கோணங்களை உருவாக்கி பார்க்கலாம். இப்படி எல்லா விளக்கங்களுமே அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அழகான அனிமேஷன் விளக்கத்தோடு அமைந்துள்ளன. தேவையான இடங்களில்எண்கள் மற்றும் வரைபடத்துடனான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
ஆக கணித பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதோடு புதிய புதிய கணித பதங்களுக்கான அர்தத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் இந்த தளம் ஏற்படுத்துகிறது. எடுத்து கொண்ட விஷய்த்தை மிக எளிதாக புரிய வைத்து சுவாரஸ்யத்தையும் உண்டாக்குவதால் இந்த அக்ராதியில் உள்ள மற்ற சொற்களையும் வரிசையாக கிளிக் செய்து பார்க்கத்தோன்றும்.எல்லா பதங்களுமே எளிமையாக புரியும் வகையில் இருப்பதால் கணிதம் மீதான மிரட்சி நீங்க ஆர்வம் ஏற்பட்டு விடும்.
அகராதி தவிர கணித வரைப்பங்களுக்கான பகுதியும் இருக்கிறது.
http://www.amathsdictionaryforkids.com/
http://www.amathsdictionaryforkids.com/
நன்றி,
சிஎன்
சிஎன்
தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள
FB Page: https://www.facebook.com/thagavalguru1
FB Page: https://www.facebook.com/thagavalguru1
மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்..
https://www.facebook.com/groups/ThagavalGuru/
https://www.facebook.com/groups/ThagavalGuru/
நட்புடன்,
TG அட்மின்
TG அட்மின்
No comments:
Post a Comment