Saturday, May 9, 2015

LINK அனுப்பட்ட லிங்க் பாதுகாப்பானதா?


_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நீங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக இணையதளங்களின் ஊடே சாட் செய்து கொண்டிருக்கும்போது உங்களுக்குநண்பர்கள் அனுப்பும்LINK கள் பாதுகாப்பானதுதானாஎன சோதித்தறிவது கட்டாயம்.சில இணைப்புகள் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் இணைப்புகளாக இருக்க கூடும். உங்கள் நண்பர்களுக்கு தவறுதலாக அந்த இணைப்பு கிடைத்து, அதை உங்களுக்கும் அனுப்பி வைத்திருப்பார். அல்லது உங்களதுநண்பர் பெயரில் வேறுயாராவது அனுப்பி வைத்திருப்பர்.
இணைப்பை பார்த்தவுடன் அவசரப்பட்டு கிளிக் செய்து பார்த்தால் அது தேவையில்லாத அல்லது மோசமான வைரஸ், மால்வேர் பாதிப்பை ஏற்படுத்தும் இணைப்பாக இருக்கும்.இதைத்தவிர்க்க, அந்த இணைப்பு பாதுகாப்பானதா என கண்டறிவது அவசியம் ஆகும். அப்படி கண்டறிய ஒரு அருமையான ஆன்டி வைரஸ் டூல் உள்ளது. ONLINE LINK SCAN என்ற இந்த டூலின் மூலம்viruses, malware, phishing scams, மற்றும் trojansபோன்றவைகளின் பாதிப்பு உள்ளதா என நீங்கள் அந்த இணைப்பை கிளிக் செய்யாமலே கண்டறிய முடியும்.உங்களுக்குஅனுப்பட்ட இணைப்பைகாப்பி செய்து கொண்டு, ONLINELINKSCAN என்ற இணையதளத்திற்கு செல்லலவும்.அதில் உள்ள பெட்டியில் காப்பி செய்த இணைப்பை பேஸ்ட் செய்துSCAN LINKஎன்ற பொத்தானை அழுத்தவும்.
உடனே அந்த இணைப்பில் ஏதேனும் வைரஸ் போன்ற பிரச்னைகள் உள்ளதா என கண்டறிந்து, அதற்கானLINK SCAN SUMMARY -ல் காட்டும்.
இவ்வாறுஉங்களுக்கு அனுப்பட்ட லிங்க் பாதுகாப்பானதுதானாஎன கண்டறிந்த பிறகு, அதை கிளிக் செய்து பார்வையிடுவது நல்லது.
நன்றி,
மெட்ரோ

No comments:

Post a Comment