----------------------------------------------------------------------
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் உலகளாவிய ஆய்வின் முடிவில்,இன்றைய நாளில் இணையத்திற்கு வருபவர்களின் வாசிப்புப் பழக்கம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்திற்கு வருபவர்களில் அதிகமானோர் தேவையற்ற பக்கங்களைப் படிப்பதிலும், பொழுது போக்குகளில் அதிகம் கவனம் செலுத்துவதிலுமே உள்ளனர் என்றும்,ஆனாலும் இவை சிறிது சிறிதாகவே குறைந்து வருவதும், நல்லவற்றை அவசியமான, தேவையானவற்றை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக,சமூகத் தளங்களின் மேல் உள்ள ஆர்வத்தையும், அங்கு நடந்து வரும் சிலரின் தவறான செயல்களையும் சொல்லலாம்.
ஒரு IP (Internet Protocol ) இலக்கத்தை மறைப்பதால், ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட வீடியோ ஒன்றை நாம்பார்க்கவும் முடியும். இது நாம் எந்த proxy ஐ பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ப இணையம் வேகம் இருக்கும் என்பதால்,நாம் ஒரு proxy ஐ தெரிவு செய்யு முன்னர் அதன் வேகத்தைக் கண்டு கொண்டு அந்த புரொக்சியை தெரிவு செய்வது சிறந்தது ஆகும்.
இப்போது IP ,Internet Protocol, யை மறைப்பதை கண்டறிய முன்னர்,IP என்பது என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது ஆகும்.IP Address என்பது உங்கள் தொலை பேசி இலக்கம் போல்,வீட்டு முகவரி என சொல்லலாம். அந்த முகவரியை அப்படியே எழுதினால் அதை கணினி புரிந்து கொள்ள வேண்டும்.புரிந்து கொள்ளா விட்டால்........பள்ளி வகுப்பறையில் ஒரு குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும் போது,அந்தக் குழந்தைக்கு தன் பெயர் தெரியா விட்டால்...........அதனால் தான் கணினி புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஒரு இலக்கத்தை வைத்து விட்டால், கணினி உடனே புரிந்து கொள்ளும். ஒரு கணினிக்கு ஒரு இலக்கம் மட்டுமே இருக்கும். வகுப்பறையில் ஒரே பெயரில் நான்கு பேர் இருந்தால் என்ன செய்வது? சின்ன மணி,பெரிய மணி,குட்டி மணி இப்படி சொல்லித் தான் அழைக்க வேண்டும்.கோடிக் கணக்கான கணினிகள் இருக்கின்றனவே எப்படி முடியும்? இப்போது நம் முன்னே வருகிறது,IP இலக்க முறை.
ஒரு பக்கத்தின் IP ஐ கண்டறிய start. - all programs- accessories – command prompt ல் சென்று ping google.com என கொடுத்து enter செய்தால் google.com ன் IP ஐ காட்டும்.நீங்கள் உங்கள் கணினியில் start.- all programs- accessories – command prompt ல் சென்று ipconfig/all என எழுதினால் உங்கள் ip முழு விபரமும் காட்டும். தற்செயலாக தற்போதய ip4 address போதுமானதாக இல்லையேல், உங்கள் கணினி புதிய ip6 ல் வேலை செய்யக் கூடியதாக, தற்போது வரும் கணினிகள் அனைத்திலும் அமைத்துள்ளார்கள். உங்கள் கணினியின் ip6 address ஐயும், அங்கே காண முடியும்.IP என்பது 0 – 255 ற்கு உட்பட்ட நாலு எண் கூட்டைக் கொண்டது.(66.72.98.236 or 216.239.115.148)static IP என்பது எப்போதும் மாறாமல் இருக்கும். Dynamic IP என்பது நீங்கள் ஒவ்வொருமுறையும் இன்டெர்னெட் போகும் போதும் மாறக் கூடியது. ஆனாலும் உங்கள் இணைப்பு broadband ஆக இருந்தால்,அதாவது router மூலம் இணைக்கப்பட்டால், இந்த dynamic IP எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
static Ip யை நாம் மாற்றவும் முடியும். அதே போல் நாம் IP யை மற்றவர்கள் கண்டு பிடிக்காமலும் செய்ய முடியும்.அப்படி செய்தால் நீங்கள் ஒரு மின் அஞ்சல்அனுப்பினால் மற்றவர் எங்கிருந்து அனுப்பியது என்று கண்டு பிடிக்க முடியாது.அதே போல் ஒரு இணையப் பக்கத்திற்கு சென்றால்,உங்களை அடையாளம் காணவோ அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்றோ கண்டு பிடிக்க முடியாது.
International Corporation of Assigned Names and Numbers(ICANN), Internet Assigned Numbers Authority - IANA இந்த IP யை வேறு சில நிறுவனங்களுடன் சேர்ந்து நிர்ணயிக்கிறது.இந்த ip யை A,B,C,D,E என வகைப்படுத்தி செயல்படுத்துகிறார்கள்.
A- 1-126 /8
B- 128-191 /16
C- 192 -223 /24
D- 224 - 239E -224 - 255
B- 128-191 /16
C- 192 -223 /24
D- 224 - 239E -224 - 255
என்ற தொடக்க எண்களைக் கொண்டு இயங்குகிறது.IP 6 இப்படி இருக்கலாம் 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7344 அல்லது 2001:db8:85a3::8a2e:370:7344
இப்போது IP இலக்க முறை பற்றி சொல்வதானால்,இவற்றில் இரண்டு முறைகள் உண்டு.தற்போது நடைமுறையில் இருப்பது ip4 -இது 32 bit முறையும்,இனி வர இருப்பதுIP6 126 bit முறையும் என சொல்லலாம். தினமும் கணினி பாவனை அதிகரிப்பதால்,சில வருடங்களில் ip4 ல் உள்ள IP address போதுமானதாக இருக்காது என்பதால், IP6 கொண்டு வரப்பட்டது.IP 4 ல் 4,294,967,296 addresses ம் IPv6 340,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 - IP addresses ம் பயன்படுத்த முடியும்.
ஒரு IP இலக்கத்தில்network, Hostஎன இரு பிரிவுகள் இருக்கும். 200.168.212.226 என்ற IP இலக்கத்தில் 200.168.212 நெட்வேர்க் இலக்கமாகவும்,223 ஹோஸ்ட் இலக்கமுமாகும்.உங்கள் ISP(Interner service provider) BSNL போன்றவை உங்களுக்கு தருபவை external ip address ஆகும்.அதாவது,உங்களுடைய உண்மையான ip யை router மாற்றி வேறொரு ip யைத் தான் இணையத்திற்காக பாவிக்கும்.ஒரு Router ன் IP 192.168. எனத் தொடங்கும்.
இப்போது ஒரே கணினியில் பல கணினிகளை இணைப்பது பற்றி கேள்விகள் எழலாம்.இதில் subnet mask, Router,TSP/IP அதிக பங்களிப்பை செய்கிறது.இந்தப் படத்தின்படி நீங்கள் பேஸ்புக்கில் தொடர்பு கொள்கிறீர்கள் ,உங்கள் நண்பர் சிந்தனை களத்திற்கு சென்றிருந்தால்,ஒரே IP இலக்கம் இருந்திருந்திருந்தால் என்ன நடக்கும்?மேலே உள்ள அறையில் நீங்கள் பேசுவதை கீழே உள்ள அம்மா கேட்பது போல்...? இருவருக்கும் கல்தா தான்.முன்னர் சொன்னது போல் IP ல் நெட்வேர்க் + ஹோஸ்ட் இலக்கம் இருக்கும். Ip ல் இறுதியாக வரும் இலக்கம் கணினிகளை தனியாக்கி காட்டுவதுடன் Router அவற்றைப் பிரித்து செய்திகளை அனுப்புவதுடன், சில சமயம் firewall ஆகவும் செயல்படும் என்பதால், நீங்களும் உங்கள் நண்பரும் பிழைத்துக் கொண்டீர்கள்.
இந்த Router, உங்கள் IP (local IP) யை இணைய IP (internet IP) ஆக மாற்றி(Network Address Translation ) பாவித்துக் கொள்ளும்.அதனால் நீங்கள் செல்லும் இணையப் பக்கத்தில் உங்கள் உண்மையான IP க்குப் பதில், Router ஆல் மாற்றப்பட்ட ip ஐ தான் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால்,இணைய IP வைத்து, ISP இடம் இருந்து உங்கள் விபரங்களைபெற்றுவிட முடியும்.ISP இடம் உங்கள் முழு விபரங்கள்,நீங்கள்செல்லும் இணையப் பக்கங்கள்,நேரம் உட்பட அனைத்தும் லாக் செய்யப்பட்டு இருக்கும். இப்படித்தான் பொலீசார் விபரங்களைப் பெறுகின்றனர்.மேலும் IP பற்றி சொன்னால் கணித முறைகளைப் பயன்படுத்தி பதிவை அதிகமாக்கி விடும்
No comments:
Post a Comment