Wednesday, May 6, 2015

ஆங்கில VOCABULARY விளையாட்டு


எந்தவொரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில் நாம் வல்லவர்களாக இருக்கலாம். அந்தவகையில், ஆங்கில மொழியில் சொல்வளம் (VOCABULARY) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது. ஆங்கில சொல்வளத்தை அதிகரிப்பதை நோக்காகக்கொண்டு ONLINE விளையாட்டாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளத்திற்கு சென்று, புதிதாக ஓர் இலவச பயனாளர் கணக்கை உருவாக்கிக்கொள்வதன் மூலம் இதற்குள் நுழையலாம். ஆங்கிலம் ஆரம்பநிலையில் இருப்பவர்கள் முதல், ஆங்கிலப்புலமை பெற்றவர்கள் வரை அனைவரும் தங்களுக்குத் தகுந்தபடி LEVELஐ தேர்ந்தெடுத்து இங்கு விடையாடலாம்.
தினமும் அகராதியில் பல வார்த்தைகளைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், இனி ONLINE மூலமாக எங்கிருப்பினும் இந்த விளையாட்டுக்களை விளையாடி தங்களது ஆங்கில VOCABULARY அறிவை வளர்க்கலாம்.
இணைய சுட்டி :- http:/vocabgenii.com

No comments:

Post a Comment