Wednesday, October 8, 2014

‘நஞ்சு’ மண்ணில் பூத்த ‘அமுதம்‘!

மெரிக்கா வின் ராச்சேல் கார்சன், ‘மௌன வசந்தம்' என்ற புத்தகத்தை வெளியிட்டது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, உயிரினங்களுக்கே ஆபத்தாக மாறிக்
கொண்டிருப்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்க...
உலகமே அதிர்ச்சியோடு திரும் பிப்பார்த்தது. அதேசமயம், ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப் பாளர்கள், நாக்கூசக்கூடிய வார்த் தைகளால் ராச்சேல் கார்சனை அர்ச் சனை செய்தார்கள். இதை நினைக்கும் போது, ‘அமுதம் பிறந்த மண்ணில்தான் நஞ்சு பிறக்கிறது! கட்டபொம்மன் பிறந்த மண்ணிலேதான் எட்டப்பனும் பிறக்கிறான்’ என்று 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' படத்தில் சிவாஜி பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது.
அமெரிக்க மக்கள் அத்தனை பேரும் கிளர்ந்தெழுந்து மிகக் கொடிய நஞ்சை எதிர்த்துக் குரல்கொடுக்க ஆரம்பித் தனர். இதையடுத்து, விஷ மருந்துகளின் பயன்பாட்டைத் தடை செய்தது அமெரிக்கா. ஆனால், அவற்றின் உற்பத்தியை தடை செய்யவில்லை. ‘ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா கண்டங்களில் வாழும் மக்களின் தலையில் அதைக் கொட்டி பிழைத்துக் கொள்ளுங்கள்’ என்று தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு வழிவகை செய்து கொடுத்தது. அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணிலும் மண்புழுவைப் போல் வெளியில் தெரியாமல், ஒரு பண்ணையில் இயற்கை வழி விவசாயம் நடந்து கொண்டு இருந்தது. அந்தப் பண்ணைக்கு உரியவர்... ரொடெல். அதுவும் இந்தியாவிலிருந்து இயற்கை விவசாயத்தை கற்றுக்கொண்டு போனவர் அவர் என்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்.
'ரொடெல் பண்ணை' இன்று ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக அங்கே வளர்ச்சி கண்டுள்ளது. ‘ஐம்பது ஆண்டுகளாக மண்ணுக்கு மறுவாழ்வு அளிக்கும் இயற்கை வழி உழவாண்மைக்காக உலகெங்கும் ரொடெல் நிறுவனம் பிர சாரம் செய்து வருகிறது. இயற்கை வழி பயிர் சாகுபடி மூலம் ஏராளமான ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும். இந்த முயற்சியின் மூலம் இயற்கைவள ஆதாரமும் சுற்றுச் சூழலும் தானே மேம்படும்' என்பதுதான் அந்தப் பண்ணையின் பிரதான பிரசா ரமாக இருக்கிறது.
அமெரிக்காவில் வாழும் இந்தியரான லட்சுமிநாராயணன் சென்ற ஆண்டு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார். அது, ரொடெல் நிறுவனம் வெளியிட்டிருந்த 'இயற்கை வழி உழவாண்மையின் வெற்றி' என்ற புத்தகமாகும். இந்த ஆண்டு, அதே நிறுவனத்தின் இன் னொரு புத்தகத்தை அனுப்பி இருக் கிறார் லட்சுமிநாராயணன். அதன் தலைப்பு 'நீயும் சாகுபடியும் தண்ணீரும்'! இந்தப் புத்தகம் கூறும் கொள்கைகள், செய்முறைகள், உலகின் எந்த சீமைக்கும் பொருந்தி வரும்.
*மனிதன் மற்ற உயிரினங்களில் இருந்து மேம்பட்டவன் அல்ல. அவன் இயற் கையின் ஒரு அங்கம். அவனால் இயற் கையைக் கட்டுப்படுத்தவோ மாற்றி அமைக் கவோ முடியாது. ஆனால், ஒத்திசைந்து வாழ முடியும்.
*செடி, கொடிகளும் விலங்குகளும் சுமூகமாக வாழ்கின்றன. அவை காற்று, தண்ணீர், மண், வெளி, சூரிய ஒளி ஆகிய இயற்கை ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
*மண்ணில் கழிவு என்று எதுவும் இல்லை. உணவுச் சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன. மேல் மட்டத்தின் கழிவு, கீழ் மட்டத்தின் உணவு. மனிதன் கழித்ததை, கால் நடைகள் உண்ணுகின்றன. கால்நடைக் கழிவு, புழுக்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவாகிறது. நுண்ணுயிர் செயல்பாடு செடி வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சங்கிலியை புரிந்து செயல்பட்டால் பண்ணைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு குறையும்.
*உணவு உற்பத்தி இயற்கை சுழற்சியைச் சார்ந்து உள்ளது. ஆரோக்கியமான மண் என்பது உயிரற்ற திடப்பொருள் அல்ல. உயிரோட்டமுள்ள ஒரு அமைப்பு.
செடி, கொடி, மரங்களே அடிப்படையில் உற்பத்தி யாளர்கள். அவை சூரியசக்தியை க்ளுகோஸாக மாற்று கின்றன. நிலைத்த நீடித்த பயிர்த் தொழிலென்பது இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும். ரசாயன பயன்பாடுகளும் எந்திரங்களின் உபயோகமும் மண் அரிப்புக்கு வழிகோலுகின்றன.
*நிலம் வளமானதா... இல்லையா என் பதைக் காட்டித் தரும் உயிரினம் மண்புழு. அது மண்ணில் காற்றோட்டத்தினை உண்டு பண்ணுகிறது. தனிமங்களை செடி ஏற்கும் வண்ணம் மாற்ற உதவுகிறது.
*பூச்சிகள் எதிரிகள் அல்ல. மகரந்தச் சேர்க்கைக்கு அவை இன்றியமையாதவை. அவற்றில் ஒன்று மற்றொன்றுக்கு உணவா கின்றது.
*பருவம் அறிந்து பயிர் செய்தல், மூலிகைச் சாறு தெளித்தல், உரிய விளைச்சல் எடுக்க தகுந்த முறைகள்.
இப்படி பல்வேறு விஷயங்களை எடுத்துப் போட்டு உலகுக்கு வழிகாட்டும் ரொடெல் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா வின் சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவாவை சிறப்புரையாற்ற அழைத்திருந்தது. அங்கே சென்ற வந்தனா சிவா, ''உங்களுக்கு எப்படி இயற்கை வழியில் ஆர்வம் வந்தது?'' என்று அந்நிறுவனத்தாரிடம் கேட்டார்.
அப்போது கிடைத்த பதில்- ‘‘முன்பு எங்க தாத்தா இந்தியா போயிருந்தார். அங்கே ஆல்பர்ட் ஓவார்டு செய்து கொண்டிருந்த ஆராய்ச்சிகளைக் கண்டு இயற்கை வழிக்கு மாறினார்’’ என்பதுதான்!

No comments:

Post a Comment