டீசல் மற்றும் மின்சார ரயில்கள் வாக்யூம் பிரேக் மூலம் நிறுத்தப்படுகிறது. ஏர் கம்ப்ரஷர்ஸ் மற்றும் வாக்யூம் எக்ஸாஸ்டர்ஸ் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ரயில் பெட்டிகளின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள வாக்யூம் குழாய்களில் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இக்குழாயில் சதுர இஞ்ச்சிற்கு 20-22 இஞ்ச் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. எல்லா பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ள வாக்யூம் சிலிண்டர்களிலும் வெற்றிடம் உருவாக்கப்படும். இவ்வெற்றிடம் சக்கரங்களுடன் இணைக்கப் பட்டிருக்கும் பிரேக்கை விலக்கிப் பிடித்திருக்கும்.
ரயில்
பெட்டியிலுள்ள அபாயச் சங்கிலியை நாம் இழுக்கும்போது, வெற்றிடத்தை
உருவாக்கும் கருவியானது நிறுத்தப்பட்டு, அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வால்வு
திறந்து, காற்று உள்ளே செலுத்தப்படுகிறது. அதன் காரணமாக பிரேக் செயல்படத்
தொடங்குகிறது.
வெற்றிடக் குழாய்கள் அனைத்துப் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், காற்று அனைத்துப் பகுதியிலும் நுழைந்து எல்லா பெட்டிகளிலும் பிரேக் செயல்படத் தொடங்குகிறது. ரயில் நிறுத்தப்படுகிறது. எந்தப் பெட்டியில் அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டது என்பதை இன்ஜினிலிருந்த படியே கண்டறிய முடியும்