அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா ! பரம் பொருள் ! இறைவன் ! எல்லாம் வல்லவரும் கடவுளே ! அவரின்றி ஓர் அணுவும் அசையாது ! அவர் பேரொளியாக விளங்குகிறார் !அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளூம் கூறியிருக்கின்றனர் !
அண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள் , ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா ? இருக்கிறார்
! நம் உயிராக ! ஜீவாத்மாவாக சிறு ஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே !
இதையும் இதுவரை இவ்வுலகில்தோன்றிய அனைத்தும் ஞானிகளும் கூறிருக்கின்றனர் !
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் !
உயிராக சிற்றோளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா !
உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது !
அது இறையம்சல்லவா !
நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர் , அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது !
ஒன்று , இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது !
நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக , பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும் , மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும் , அந்த ஊசிமுனை வாசலைமெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது !!
கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் !
இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் !
நம் அத்மஜோதியை மறைத்து கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே , அதற்காக நம் ஞான தவம் செய்தாலே , நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும் !
ஜீவன் எங்கிருக்கிறது ? எப்படி இருக்கிறது ? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியல் செல்வதுதானே புத்திசாலித்தனம் !
நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனுடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் !
உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே !
நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றல் , கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரொளியான அந்த இறைவன் அடையலாம் அல்லவா ?!
நம் அகத்தீ பெருகவேண்டும் ! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் !
சுட்டும் இருவிழி சுடர்தான் சூரிய சந்திரனாகும் ! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே ! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே !பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர் !
பரிதவிக்கும் மாக்களை மரணமிள்ளது காக்க ! பரிபாஷைகளை கூறியது சிந்திக்க வைக்க ! தெளிவடைய செய்ய ! மக்களை தன்னிலை உணரச் செய்யவே ! சந்தேகமற உபதேசித்து ஞான உபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள் !
உலகமெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியது கடவுள் ஒருவரே ! அவர் ஜோதி வடிவானவர் ! எங்கும் நிறைந்தவர் ! எல்லாம் வல்லவர் ! மனித உடலில் தலையில் ஜீவனாக, ஒளிர்ந்து ,இருகண்மணியிலும் துலங்குபவர் !
கண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள் ஒளியை அடைய வேண்டும் ! தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாஅக்கினியை பெருக்க வேண்டும் !
நம் கண்மணி ஒளி பெருகி, நம்முள் கடந்து தான் , நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் !
கடவுளை நினைத்து கண்மணி ஒளியை நினைத்து குரு உபதேசத்தால் உணர்ந்துகுருதீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும் !
நெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும் !
அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் ! இதுவே கங்காஸ்நானம் !
அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டிருக்க வேண்டும் !
கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகிகண்மணிமுன் உள்ள திரை விலகும் !
உருகி கரையும் ! பின்னர் தானே ஜோதி தரிசனம் !
ஒவொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே , வள்ளலார் வடுலூரில் சத்திய ஞான சபையில் 7 திரை நீக்கி தங்க ஜோதியை காண வைத்துள்ளார் !
ஞானம் பெறநாடுவீர் குருவை ! யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி , உணர்த்தி தீட்சை தருகிறாரோ அவரே ஞான சற்குரு !
இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்!
ஞானம் என்றால் பரிபூரண அறிவு ! தெளிவு ! நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பரிபூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்ந்து கொள்வது ஞானம் !
பற்பல பிறப்பெடுத்து துன்பபடுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனை !
பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த , மும்மல , 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை !
நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி , நாம் நம் உள் ஒளியை பெருக்கி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை !
எல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தை தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார் !
ஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே !!
ஒரு ஆன்மா, தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகபெரிய சேவை !தானத்தில் சிறந்தது ஞானதானமே !!
மரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினர் வள்ளலார் ! அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி தீட்சை தருபவரே உண்மையான சற்குரு !
“கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி ! ”
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !
கண் வழி கட உள்ளே கடவுளை காண் !