Wednesday, October 22, 2014

கிரயப் பத்திரம் தொலைந்தால் என்ன செய்வது‬ ‪‎யாரைஅணுகுவது‬


பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.அவர்களை அனுக வேண்டும்.

‪#‎என்னென்ன_ஆவணங்கள்_தர_வேண்டும்‬
☉ கண்டு பிடிக்க முடியவில்லை என்ற காவல் துறை கடிதம்,
☉ பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம்,
☉ யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,
☉ சர்வே எண் விவரங்கள்.

‪#‎எவ்வளவு_கட்டணம்‬
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொருபக்கத்திற்கும் 20 ரூபாய் வாங்கப்படும்.

‪#‎கால_வரையறை‬
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

‪#‎நடைமுறை‬
முதலில் கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும்.
இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,
பின்பு சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.