பெண்களுக்கு உதவும் எண்கள்
04423452365
1091 இந்த எண், தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண். திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளலாம்!
இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ தொடர்புகொள்ளலாம்.
04428551155
குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளுவதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.
04426530504, 26530599
மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599- என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்! மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
04426184392, 9171313424
வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு
எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.
04425353999, 90031 61710
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
95000 99100
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும்,உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
04424749002, 04426744445
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
04428592828, 94454 64748
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான
டோல் ஃப்ரீ எண் 180011400,
94454 64748,
72999 98002,
72000 18001,
044- 28592828
ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
93833 37639
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.