Sunday, October 19, 2014

சுண்ணாம்பின் மகத்துவம்



எலும்பின் இருக்கும் சத்து கால்சியம் என்ற சுண்ணாம்பு சத்து தான். நமது முன்னோர்கள் வீடுகளுக்கு வெந்த சுண்ணாம்பை பாலில் நீர்த்து ( சிமெண்டுக்கு பதில்) , அத்துடன் கடுக்காய், பனை வெல்லம் சேர்த்து கலக்கி வீடுகள்ம் சுவர்கள் போன்றவரை கட்டுவார்கள்.

சுண்ணாம்பு கற்களை வேகவைத்து பால், இளநீர் சேர்த்துக் கரைப்பதால், பாலில் உள்ள சுண்ணாம்பு சத்தும், இளநீரில் உள்ள சுண்ணாம்பு சத்தும் சேர்ந்து சுண்ணாம்பு கற்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. இது போதாது என்று முன்னோர்கள் கடுக்காய் சேர்த்தார்கள். அப்படி என்ன தான் செய்யும் இந்த கடுக்காய் என்றால் ?

கடுக்காய் ஒரு காயகல்பம் மூலிகை. இந்த உடம்பை கல்லு போல மாற்றும் தன்மை உடையது கடுக்காய். சுண்ணாம்புடன் கடுக்காய் சேர்ப்பதால் சுண்ணாம்பு சத்தை இரும்பை போல இறுக்கும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயில் உள்ள துவர்ப்புத் தன்மை சுண்ணாம்புடன் சேரும் பொது வீடு, சுவர், கட்டடம் போன்ற வற்றின் ஆயுள் மேலும் நீட்டிக்கப் படுகிறது. இவற்றோடு பனை வெல்லம் சேர்த்தல் என்ன ஆகும் ? எதற்கு சேர்கிறார்கள் ?

முன்னோர்கள் தென்னைமரம், பனை மரம் இவற்றில் உள்ள பாலையை சீவி விட்டு அதில் ஒரு பானையை சுண்ணாம்பு உள் பக்கமாக தடவி விடுவார்கள். இதில் பதநீர் வந்து இறங்கும். இதில் வேறு எந்த பொருளும் சேர்க்க கூடாது குறிப்பாக போதை பொருள் சேர்க்காமல் இருப்பது நல்லது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீருடன் தக்க அளவில் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி எடுப்பது தான் பனைவெல்லம். பனைவெல்லம் இனிப்பு தன்மையாக இருக்க பதநீரும், சுண்ணாம்பும் தான் காரணம். அதே போல தண்ணீர் துவர்ப்பு தன்மை கொண்டது, இதன் துவர்ப்பும் சுண்ணாம்பும் சேர்ந்து மேலும் வலு சேர்த்து அந்த வீடோ, சுவரோ, கட்டடமோ பல நூறு ஆண்டுகள் உறுதியாக இருக்க செய்கிறது.

சுண்ணாம்பு ( இயற்கை தாது), பால் ( இயற்கை), இளநீர் ( இயற்கை), கடுக்கை ( இயற்கை), பனைவெல்லம் ( இயற்கை) என இயற்கை மூலங்களில் உண்டான கட்டடங்களே பல நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் போது, இயற்கைமூலங்களில் இருந்து கிடைக்கும் சுண்ணாம்பு சத்தை நாம் உணவாகவோ மருந்தாகவோ சாப்பிடும் போது நமது எலும்புகள் பலம் பெற்று, உறுதியுடன், உடல் வலிமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வது திண்ணம். இது சித்தர்களின் சூத்திரம்.

இந்த முறை இந்த அண்டத்திற்கு மட்டும் அல்ல இந்த அண்டத்தில் உள்ள பிண்டதிற்கும் பொருந்துகிறது.

தினமும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுகின்ற பாட்டிகளுக்கு கை, கால், மூட்டுகளில் வலி வருவதில்லை. சுண்ணாம்பு மிக அற்புதமான மருந்து. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட வெட்க படுவோம். அது ஏதோ கிராமத்தில் உள்ளவர்கள் போடுவதென்று. எலும்பு தேய்மானம் ஆகாது எலும்பு தேய்மானம் என்று மருந்து சாப்பிடுபவர்கள், மூட்டுகளில் வலி(Join Pain ), உள்ளவர்களுக்கு நல்ல பலனை தரும். மேற்சொன்ன பாதிப்பு இல்லாதவர்கள் கூட போடலாம். புகையிலை தான் சேர்க்க கூடாது.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

இப்படி சுண்ணாம்பு நிறைய விதத்துல பயன் படுகிறது இதன் மகத்துவத்தை சொல்ல ஒரு பதிவு போதாது.