Wednesday, October 29, 2014

வீடு/வணிகம் மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்


· வீடு அல்லது வணிக மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
· விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.
· தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தாக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5-இன் படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால,சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர் தரவேண்டும்.மேலும் படிவம்-6-இன்படியான காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து,மேலும் இயல்பான காப்புவைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்க வேண்டும்.
· மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்,
· பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.
· விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்து கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
· எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.
· மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்,
· மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
· மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
· தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து,அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்,
· மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.