மசானபு பூகோகா என்ற மறைந்த ஜப்பானிய அறிஞரின் உழவில்லா இயற்கைமுறை வேளாண்மை உலக மக்களிடையே முன்னோடிகளிடையே செல்வாக்குப் பெற்று வருகிறது.
அவருடைய வேளாண்மை முறை என்பது நடைமுறைப் படுத்தப்பட்டால் அது கண்களுக்கும் கருத்துக்கும் இயற்கைக்கும் அனைத்து உயிர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை!
உலகமே அற்புதமான ஒன்றாக மாறிவிடும்.
ஆனால் நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.
ஆதாவது அவர் வாழ்ந்து நிரூபித்த இடம் அருமையான இயற்கைச் சூழலும் நீர்வளமும் மிக்க பகுதியாகும்.
அப்படிச் செய்வதும் அப்படி வாழ்வதும் எளிமையான ஒன்று...
ஆனால் அதை முன்னுதாரணமாகக் கொள்ளும் நாம் நமது நாட்டில் உள்ள பல்வேறு வகையான நீர்வளம் நிலவளம் ஆகியவற்றுக்குப் பொருத்தமாக அதை அப்படியே பின்பற்ற முடியாது.
அதனால் நீர்வளம் அற்ற பகுதிகளில் இயற்கை முறையில் ஆதாவது புகோகா முறையில் சாகுபடி செய்யும் முறைகளை வெற்றிகரமாக செய்து முன்னுதாரணம் ஏற்படுத்தவேண்டும்.
அதுதான் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.
அதைத் தவிர இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆதாவது இயற்கை முறை வேளாண்மையும் அது சார்ந்த வாழ்க்கையும் பல்லுயிர்ப் பெருக்கமும் மண்ணுக்கும் மக்களுக்கும் சொர்கபூமி என்பது எப்படி உண்மையோ அவ்வளவு உண்மை இன்று வேளாண்மை என்பது வர்த்தகம் என்னும் நுகத்தடியில் பிணைக்கப்பட்டு்ள்ளதும் ஆகும்.
அதில் இருந்து மீளவேண்டும் என்றால் தன்னளவில் நிலம் வைத்திருப்பதும் அதில் உழைப்பதும் மட்டும் போதுமானது அல்ல!
அதில் இருந்து பெறப்படும் வருவாய் என்பது பண்ணை செலவுக்கும் ஆட்கள் செலவுக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கும் போதுமானதாக இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு நிலை இயற்கை முறை உழவில்லா வேளாண்மையில் உருவாக்க முடிந்தால் மட்டுமே முழு வெற்றியாக இருக்கும்.
அது வறண்ட நிலங்களிலும் சாத்தியப் படவேண்டும்.
சாத்தியப் படும்!
அதற்கான முறையில் திட்டமிடப்படவேண்டும்.
Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2014/10/84.html