Sunday, October 19, 2014

சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம்

சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த ஆலோசனை மற்றும் தகவல்களுக்கு:

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் .....

இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட், இரண்டு கிலோ வாட், ஐந்து கிலோ வாட், பத்து கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த ஒரு கிலோ வாட்க்கு Rs - 137500/-* ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு ஐந்து யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 80-100 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும்.

முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும். ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால், சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை.
தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்சார மாநிலம் ஆக்குவோம்! மின் மிகை மாநிலம் ஆக மாற்றுவோம்!

 CONTACT : 959 777 1037

 {SOLAR POWER SUPER POWER]
All Leading Company : UPS , Inverter , PCU & SOLAR Panels , SOLAR Hybrid Sinewave(DSP Based) Inverters /UPS/PCU , Petrol Pump Inverter , Water Pumping Systems , SOLAR Charging Controllers , Battery Charger , SOLAR LED Street Light, SOLAR Water Heater, ALL SOLAR Products , ALL LED Lights, All Batteries & ALL GPS VEHICLE TRACKING SYSTEM