Wednesday, October 29, 2014

SOLAR PUMP சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!

சூரிய மின்சக்தி துறையில் ரூ. 5,800 கோடி முதலீடு
சூரிய மின்சக்தி துறையை ஊக்கப்படுத்தும் விதமாக 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5,800 கோடி மதிப்பிலான சூரிய மின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசு உள்ளதால் இது இத்துறைக்கு ஊக்கமளிப்பதாய் அமையும். மேலும் 2015 பட்ஜெட்டில் சூரிய மின் உற்பத்திக்கான ஒதுக்கீடு இருக்கலாம் என இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய மின் தொகுப்புடன் (கிரிட்) இணைந்த 1,000 மெகாவாட் சூரிய மின்னாற்றல் நிலையத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன. இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவில் சாத்தியக்கூறு பற்றாக்குறை நிதியாக (விஜிஎப்) ரூ. 1,000 கோடியை மூன்று ஆண்டுகளில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
என்டிபிசி, என்ஹெச்பிசி, ஐஆர்இடிஏ, சிஐஎல் மற்றும் இந்திய ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டு சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க முன் வந்துள்ளன. இதுதவிர, மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் இந்த திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. 300 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி ஆலைகளை 2019 க்குள் அமைக்க பாதுகாப்பு அமைச்சகமும் திட்ட
மிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள் மற்றும் வடிவமைப்பாக இருக்கும். இதன் மூலம் சூரிய மின் னாற்றல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 25 சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இதன் மூலம் 20,000 மெகா வாட் உற்பத்தி எட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலீடு 4,050 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் மேகாலயா மாநிலங்களில் இந்த சோலார் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து பேசிய சன்எடிசன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு தலைவரும், இந்திய பிரிவின் இயக்குநருமான பசுபதி கோபாலன் ‘ 2015 ஆம் ஆண்டு சோலார் மின்சக்தி துறைக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் ஆண்டாக இருக்கும் என்றார். மேலும், கடந்த ஐந்து வருடங்களில் சோலார் மின் உற்பத்தி துறை குறித்த புரிதல் உருவாகியுள்ளது.
எனவே சோலார் மின் உற்பத்தி என்பது புதிய தொழில்நுட்பம் அல்ல என்றார். சோலார் மின்சாரம் என்பது வித்தியாசமானது அல்ல, நம்மிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு என்றார். விவசாயத்துக்கும் பயன்படாத நிலங்களைத்தான் சோலார் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளா
====================================================================
சென்னை,

மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்–லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சூரிய மேற்கூரை மின் அமைப்பு
தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார்.
அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் ‘சோலார் பேனல்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:–

ரூ.20 ஆயிரம் மாநில அரசு மானியம்
சூரிய மேற்கூரை ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் மின்கட்டமைப்புடன் கூடிய சூரிய மேற்கூரை அமைப்புகளை நிறுவும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ‘சோலார் பேனல்’ அமைக்கும் முறையில் 5 ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்வது மற்றும் வீட்டு கட்டிடங்களுக்கு 1 கிலோ வாட் முதல் 100 கிலோ வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது ஆகிய 2 முறைகளில் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. வீடுகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. மாறாக ஏக்கர் கணக்கில் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் ‘சோலார் பேனல்’ அமைக்க ஆகும் மொத்த செலவில் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வீட்டு உரிமையாளர்கள் செலவிட வேண்டிவரும். அதற்கு மேல் ஆகும் தொகைக்கு மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்குகிறது.
மீதம் உள்ள தொகைக்கு மத்திய அரசிடமிருந்து 30 சதவீத மானியம் பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது வீட்டுக்கு ‘சோலார் பேனல்’ அமைத்து அதன்மூலம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஒரு வாரத்தில் விண்ணப்பங்கள் பரிசீலித்து அனுப்பப்படுகிறது.

ஆன்–லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ–பார்ம்ஸை ‘கிளிக்’ செய்ய வேண்டும். அதில் ‘டொமஸ்டிக் கிளிக்’ செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்–லைனிலேயே அனுப்பப்படும்.
இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள 17 கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.

தினமும் 4 யூனிட் மின்சாரம்

ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க நூறு சதுர அடி இடமே போதுமானது. இதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தை கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும்

முறைகேட்டை தடுக்க ஆன்–லைனில் விண்ணப்பம்

வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு மின்கட்டணம் மூலம் கணிசமான பணம் மிச்சமாகும். முறைகேட்டை தடுப்பதற்காகவே ஆன்–லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்துவிட்டால் மொட்டை மாடியை வேறு பயன்பாட்டிற்கு (துணி காயப்போடுதல், அப்பளம் காய வைத்தல்) பயன்படுத்துவது சிரமம். சூரிய சக்தி மின்சாரம் குறித்து போதிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

கோவையை அடுத்து சென்னை

மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு நாடு முழுவதும் 60 சூரிய மின்சார உற்பத்தி நகரங்களை அமைக்க முடிவு செய்தது. இதில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியை தேர்வு செய்தது. இதற்காக ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் சென்னை மாநகரையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தை சேமிப்பதற்காக வேலூர், திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு 10 ஆயிரம் சி.எப்.எல். மற்றும் எல்.ஈ.டி. பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நடப்பாண்டு அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் எல்.ஈ.டி. பல்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் பாடத்திலும் சோலார் பேனல் குறித்து சேர்ப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

=======================================================================
இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.

தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் 959 777 1037 என்ற என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உரிய விவரம் கிடைக்கும்!


==================================================================

நண்பரின் பதிவு!


-------------------------------------------------
மறைக்கப்படும்..மர்மங்கள்...(1)
------------------------------------------------
வணக்கம்.. நண்பா்களே... என் வாழ்க்கையின் பாதி நாட்கள் சுற்றுப் பயணங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.. சிறு வயது முதல் தனிப் பயணங்கள்தான் பெரும்பாலும்.. தனிமைதான் சிந்திப்பதற்கும்.. சுதந்திரத்திற்கும்.. ஏதுவாக அமைகிறது.. மேலும் பலவிசயங்களை முழுமையாக புரிந்து கொள்வதற்க்கும் வாய்பபாகிறது.. அதுவே பழகியும்விட்டது... நமது நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும்.. பதினைந்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் பல வருடங்களாக சென்று.. பார்த்து.. தங்கி..பழகி...பயிற்சி எடுத்து.. கற்றுக் கொண்டதையும்.அதில் புரிந்து கொண்டதையும்.. அதனால் ஏற்பட்ட அனுபவங்களிலும் .. பல முரண்பாடான விசயங்கள் மனதை நெருடுகிறது.. நம் பேச்சு வழக்கில் கூறுவோமே..“ சொல்வது ஒன்று.. செய்வது ஒன்று.. ஆனால் நடப்பது.. வேறு..“ என்பது போல அனைவருக்கும் உபயோகமான சில விசயங்களை மட்டும் இலை மறை ..காய் மறையாக.. அந்த மறைக்கப்படும்.. மர்மங்களை .. உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளவே.. இந்த பதிவு... நன்றி.. நண்பா்களே.. தொடர்ந்து பேசுவோம்.. சென்ற வருடம் ஜனவரி கடைசி வாரம்.. மூன்று நாடுகளுக்கு பத்து நாட்கள் சுற்றுப் பயணம்.. என் பெரிய மகளும்.. சில நண்பா்களும்..உடன்.. இங்கே வெய்யில் சுள்ளென்று.. அடிக்கிறது.. துபாயில் குளிர் சுருக்கென குத்துகிறது....பயணத்தின் இடையில் ஒரு நாள்.. என்னுடைய துபாய் கிளை அலுவலகத்தின் (என்னுடைய டிராவல் ஏஜென்சிக்கும் அந்தந்த நாடுகளில் உள்ள டிராவல் கம்பெனிகளுக்குமான டை-அப்..) அவா்களுடைய சொந்த உபயோகத்திற்கான வேனை அந்த கம்பெனி மேலாளரே எடுத்து வந்தார்.. (அவா் சென்னையைச் சோ்ந்த தமிழா்.. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரும்கூட..)... இன்று அபுதாபி சென்று வரலாம் என கூறி அவரே வண்டியைச் செலுத்தினார்.. எனது நண்பா்களை விளையாட்டு தீம் பார்க்கில் இறக்கிவிட்டு .. நானும் மகளும்.. ஒரு நண்பரும் அருகில் உள்ள கிராமப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னதும் நண்பா் அழைத்துச் சென்றார்.. கண்ணுக்கெட்டிய துாரம் மணல்திட்டுக்கள்.. ஆனால் வழி நெடுக.. பச்சை பசேலென்று பேரிச்சை மற்றும் வேறு மரங்களும்..செடிகளும்.. புல்தரைகளுமாக.. காட்சி அளித்தது.... நண்பா்களே கொழு கொழுவென வேப்பமரங்களை பார்க்க வேண்டுமெனில் அபுதாகிக்கு செல்லுங்கள்.. அப்படி பசுமையாய் வறண்ட பாலைவனத்தில் சொட்டு நீா் பாசனத்தில் வளா்த்து வருகிறார்கள்... இங்கு நாம்....! ஒரு பெரிய வேப்பமரத்தடியில் நாற்காலி போடப்பட்டு நான்கைந்து நபா்கள் அமா்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.. அவா்களைப் பார்த்ததும் நண்பா் வண்டியை நிறுத்தி இறங்கி வணக்கம் தெரிவித்தார்.. அங்கிருந்தவா் நண்பரை பெயா் சொல்லி அழைத்துவிட்டு எங்களையும் வரவேற்றார்.. மரியாதை நிமித்தம் வணக்கம் சொல்லி அமா்ந்தோம்.. அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியதும் பேச்சுக்கள் தொடா்ந்தன.. நிறைய விசங்களை தெளிவாக அறிந்து வைத்திருந்தார்.. விவசாயம் பற்றிய அறிவும் ஆா்வமும் அவரிடம் அதிகம் காணப்பட்டது..என்னைப் பற்றிய விசாரிப்புகளுக்கு இடையில் சூடாக பாதாம் பிஸ்தா போட்ட ஒட்டகப் பால் கொடுத்தார்கள்.. இந்தியாவின் மின்தடங்கல் பிரச்சனை பற்றி பேச்சு எழுந்த போது அவா்கள் நாட்டின் மின்சாரப் பிரச்சனை பற்றி வெகுவாக மிகவும் கவலைப்பட்டார்... எனக்கு ஆச்சரியம்..! நாம்தான் அழுகிறோம் என்றால் அழுகுவண்ணான் குருவியும் எதற்கு சோ்ந்து அழுகிறது..? என்ற சந்தேகத்தில் பார்த்ததும்.. அதை புரிந்து கொண்ட அவா் அருமையான விளக்கம் அளித்தார்... அவா்கள் நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோல் 25 சதவிகிதம் மின்சாரம் எடுப்பதற்க்கே செலவாகி விடுகிறதாம்..இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதை புள்ளி விபரமாக எடுத்துச் சொன்னார்.. இன்னும் 50 வருடங்களில் பெட்ரோலிய வளம் தீர்ந்தபின்னா் அவா்களும் சந்ததியினரும் எந்த நாட்டுக்கு செல்வது என வினவியபோது.. ஙே..என விழிக்கத்தான் முடிந்தது.. மேலும் தொடா்ந்த அவா் அதனால்தான் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னரே சூரியசக்தி மின் பலகைகளை முழுவீச்சில் பொருத்த ஆரம்பித்துவிட்டோம் இன்னும் 5 வருடத்திற்க்குள் முழுமையாக மின்உற்பத்தி சூரியசக்தியில்தான்.. என்றபோது..பிரமிப்பாக இருந்தது.. நம்மவா்களை நினைத்துக் கொண்டேன்.. இரண்டு வார அவகாசத்தில் இரண்டு நிமிட நேரத்தில் கட்டிமுடிக்க வேண்டிய கரண்டு பில்லை கடைசி தேதியில் கால்கடுக்க இரண்டு மணிநேரம் வரிசையில் நின்று கட்டுவதுதானே நம் பழக்கம்.. அவ்வளவு முன் யோசனை... ஆனால் 50 வருடத்திற்கு பின் வரும் சந்ததியினருக்காக இன்னும் ஐந்து வருடத்திற்க்குள் மாற்று ஏற்பாட்டை வேகமாக செய்து முடிக்கும் அவா்களுடைய அவசரம்.. அவா்களுடைய பொறுப்பையும் தீர்க்கதரிசனத்தையும் உணா்த்தியது.. மலைத்துப் போனேன்... ஒருவழியாக புறப்படும் நேரம் ...அவரைப்பாா்த்து.. நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.. என நான் கேட்டபோது.. எனது நண்பா் என் கரங்களைப் பிடித்து ஏதோ சொல்ல வந்தார்.. அதற்க்குள் அவா் என் நண்பரிடம் சைகை காண்பித்துவிட்டு வாருங்கள் சொல்கிறேன் ..என்று அருகில் உள்ள பேரீச்சை தோப்பிற்க்கு அருகே சென்றோம் ..அங்கு நன்கு பழுத்த பழங்களை ஒரு பெட்டியில் போட்டு எங்களுக்கு கொடுத்துவிட்டு ..அவா் துாரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டினார்... பல ஏக்கா் கணக்கில் பரந்துவிரிந்து கிடக்கும் மிகப் பிரமாணடமான மாடமாளிகை அது.. சுற்றிலும் பல்வேறு வகையான மரங்கள்.. சாலை ஓரங்களில் மஞசள் வண்ண சாமந்திப் பூச்செடிகள் கண்ணுக்கு அவ்வளவு ரம்மியமாய் காட்சி அளித்தது.. மனது பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறந்தது.. எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான் நீடித்தது.. அவா் தொடா்ந்தார். “அந்த மாளிகையில் தான் நான் வசித்து வருகிறேன் .எனது தந்தையார் அபுதாபியின் மன்னராக உள்ளார்கள்”.. என்று சொன்னதுதான் தாமதம்.. அதிர்ச்சியில் சிலையாய் உறைந்து போனோம் புன்கையுடன் விடை கொடுத்தார்.. அதிலிருந்து மீள வெகு நேரம் ஆயிற்று..ஒரு நாட்டின் இளவரசரா.. இவ்வளவு சகஜமாக.. எளிமையாய்.. அதுவும் சாலை ஓரத்தில் நம்பமுடியவில்லை..! நம்ம ஊா் வட்டச் செயளாலா் வண்டு முருகனின் ஞாபகமும் மனதிற்குள் வந்து போனது.. பின்னா் பிப்ரவரி மாதம் முதல்வாரம் ஊா் வந்து சோ்ந்தபோதும்.. ஆச்சரியம் விலகவில்லை.. நண்பா்களே.. அதன் பிறகு தமிழ் நாட்டில் மின்வெட்டு மிகக் கடுமையாக இருந்தது.. மழையும் சுத்தமாக இல்லை.. நிலத்தடி நீா்மட்டம் குறைந்து கொண்டே வந்தது .. இருக்கும் கொஞ்ச நீரையாவது பயன்படுத்தி வாடும் பயிரை காப்பாற்ற விவசாயி போராடும் போது மின்சாரம் இல்லை.. வாழ்வாதாரமே பாதிப்படைந்தது.. மீண்டும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை வந்தால் தானியங்களை இறக்குமதி செய்ய பல நாடுகள் கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருந்தன.. என்ன செய்வது.. ஏதாவது சிறு துரும்பையாவது கிள்ளிப் போடலாமே என்ற சிந்தனையில் சோலார் பலகை ஞாபகத்தில் வந்தது.. இதன் விலை இந்தியாவில் மிகமிக குறைவாக சொன்னார்கள்.. அரை ஏக்கா் நிலம் உள்ள விவசாயிக்கு கூட கட்டுப்படியாகும் விலைதான் நண்பா்களே.. ஆனை விலை குதிரை விலை கூட இல்லை அஞ்சு ஏக்கா் நிலத்தை விற்றால்கூட 10 கே வி வாங்க முடியாது.. ராக்கெட் விலை.. இதில் மானியம் வேறு 30 சதவீதம்.. ஒரு மண்ணும் புரியவில்லை.. நிறைய இடங்களில் பேசிப் பார்த்தேன் ...ஒன்றும் மசியவில்லை.. அனல் மின்சாரம்.. அணுமின்சாரம் தயாரிப்பதால் சுற்றுச் சூழல் கேடு அதனால் மழை குறைவு.. ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு சூரிய விசைப் பலகை மாட்டிவிட்டால் விவசாயிக்கு மின்சாரப் பிரச்சனை தீா்ந்துவிடும்.. அது போல சிறு தொழில் செய்வோர்களுக்கு பெரும் சுமையாக இருப்பது ஷாக் அடிக்கும் மின்சார பில்தான்.. எனவே அவா்களுக்கும் இது ஒரு தீா்வாக இருக்கும் ..என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சோலார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சென்று பார்த்தேன்.. அனைவரும் முக்கியமான பாகம் ஒன்றை மட்டும் இறக்குமதி செய்து இங்கு ஒட்டு வேலை மட்டும் செய்து வந்தார்கள்.. அது என்ன பொருள் என்றால் மிக முக்கியமான நீல நிறத்தில் சதுரம் சதுரமாக இருக்கும் சோலார் செல்.. இது தான் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றி கொடுப்பது .. இது தவிர மீதி இருப்பதெல்லாம்.. பொள்ளாச்சி சந்தையில் கிடைக்கும் பொருட்கள் தான் அது ரேடியோ ஸ்பீக்கருக்கு போடும் ஒயா் பாத்ரும் வெண்டிலேட்டருக்கு போடும் கண்ணாடி ..பனியன் பெட்டிக்கு ஒட்டுகிற பிளாஸ்டிக் டேப் ..குளியல் அறை கதவுக்குப் போடும் அதே அலுமினிய பீடிங்.. சைக்கிளுக்கு மாட்டும் நெட்டு போல்ட்.. மர மேசைக்கு போடும் ஸ்குரு.. கொஞ்கம் பீஸ் கம்பி.. போக டி வி க்கு கனெக்சன் கொடுக்கும் கேபிள் ஒயா்.. அவ்வளவு தான் நண்பா்களே.. வட இந்தியாவில் ஒரு இடத்தில் சோலார் செல் தயாரிக்கிறார்கள் என்று அங்கே சென்றால் எவ்வளவு போராடிப் பார்த்தும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.. இதற்கு தலைநகரத்தில் அனுமதி வாங்கிச் சென்றும் கூட.. சாி இதை விடக்கூடாது.. எங்காவது வெளிநாட்டிற்கு சென்று இதன் தயாரிப்பு முறைகளை பயிற்சி பெற்று கற்றுக் கொண்டு வந்து இதை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து இதன் ரகசியத்தை ஊருக்கு நாலு பேருக்கு கட்டணமில்லாமல் சொல்லிக் கொடுத்து விட்டால் ஒவ்வொரு ஊரிலும் தேவைப் படுகிறவா்கள் குடிசைத் தொழில் மாதிரி செய்து கொள்ளட்டும் .. அந்தந்த கிராமங்கள் சுயசார்பு அடையட்டும் என புறப்பட்டேன்.. ஒரு மாத காலம் 5 நாடுகள் (மலேசியா,சிங்கப்பூா், தாய்லாந்து, சைனா, ஹாங்காங்) மொத்தம் 20 நபா்கள் நான்கு குழுக்களாக.. நண்பா்களுடன்..நான் என் மனைவி மட்டும் தனியாக மற்றவா்கள் நான்கு குழுக்கள் ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுலா முடித்துவிட்டு அவா்களை ஊருக்கு அனுப்பிவிட்டு நண்பா்கள் சிலா் சைனாவில் வேலைகள் முடித்துவிட்டு புறப்பட ஒரு நண்பரும்..நானும் என் மனைவி மட்டும் பயிற்சிக்காக சோலார் தயாரிப்பு நிறுவத்துக்கு சென்றோம்.. என்னுடைய சுற்றுலா நிறுவனத்தின் சைனா டை அப் கிளை அலுவலகத்தில் பணிபுரியும் மொழி பெயா்ப்பாளரையும் உடன் அழைத்துச் கென்றிருந்தேன்.. நண்பா்களே.. எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்லுவாங்க.. “ பசி பசின்னு பூசாரி கோலுயிலுக்கு போனாராமாம்.“ “வரம் கொடுக்கற சாமி ஈச்சம் பாய கட்டிட்டு எதிர்த்தாப்புல வந்துச்சாம்“.. அது போல அங்கே நடந்த சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை... எதற்காக இதை சொன்னேன் என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்.. இப்போது முக்கியமான விசயத்திற்கு வருவோம்.. இதில் “மறைக்கப்படும் மா்மம்“ என்னவென்றால்.. எத்தனை போ் வந்து ஆயிரம் கதை சொன்னாலும்.. எனக்கு என்ன தெரியும் என்று கிண்டல் செய்தாலும்.. சூரிய விசைப் பலகை விற்பனை விலையில் இருந்து.. ஐந்தில் ஒரு பாகம்தான் அதன் தயாரிப்பு அடக்க விலை... இன்னும் கொஞ்சம் எளிதில் புரியும்படி சொல்வது என்றால்.. 5 லட்சம் விலை கொண்ட அந்த மொத்த செட்டின் அடக்கவிலை 1 லட்சம் மட்டும் தான்..அது எந்த நாட்டுத் தயாரிப்பாக இருந்தாலும்.. இதில் 30 சதவீதம் 50 சதவீதம் 70 சதவீதம் என்று விவசாயிகளுக்கு எத்தனை மானியம் கொடுக்கிறார்கள்.. எததனை பேருக்கு கிடைக்கிறது எனக்கு இந்திய கணக்கு ஒன்றும் புரியவில்லை.. இன்னும் நாமே சொந்தமாக சோலார் செல் தயாரிக்கும் போது 5 லட்சம் விலை கொண்டது வெறும் 50 ஆயிரத்திற்கு தயாரிக்க முடியும்.. அதற்கு ஓரிரு வருடம் ஆகும்... ஏனென்றால் அந்த தயாரிப்பு தொழில் நுட்பத்தை முதலில் இங்கு கொண்டு வரவேண்டும்.. நண்பா்களே.. அதை விட பல முக்கியமான சில பணிகள் சில ஆராய்ச்சிகள் எனக்கு கொடுக்கப் பட்டு இருப்பதால் சில காலம் கழித்து சோலார் பக்கம் செல்வோம்.. எங்கள் குழுவினரின் பணிகள் ஒவ்வொன்றாய் முடியும் போது அது பற்றிய செய்தி உங்களுக்கு வந்து சேரும்...

 “மறைக்கப்படும் மா்மங்கள்“ தொடரும்... நன்றி... நண்பா்களே... வெ.சந்துரு..