Wednesday, October 29, 2014

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள்

தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள்

அ. ஒருவரை கைது செய்ததற்கான காரணத்தை முடிந்தவரை விரைவாக அவருக்குப் புரியும் மொழியில் தெரிவிக்க வேண்டும். வழக்குரைஞரை அவர் விருப்பப்படி வைத்துக் கொள்ளவும் அவரின் சட்ட உதவியைப் பெறவும் உரிமை உடையவர்.
ஆ. கைது செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் கைது செய்யப்பட்ட உடன் 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள நீதித்துறை நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
இ. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவரை 3 மாத காலத்திற்கு அறிவுரைக் குழுமம் அமைத்து தடுப்புக் காவல் ஆணையை உறுதி செய்ய வேண்டும். எனவே அறிவுறைக்குழுமம் ஆணையில்லாமல் யாரையும் 3 மாதத்திற்கு மேல் தடுப்புக் காவலில் வைக்க முடியாது.
ஈ. தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டவரிடம் சிறை வழியாக எழுத்து மூலம் தனது முறையீட்டை முறையிட கைதி உரிமை படைத்தவர்.
உ. தடுப்புக் காவல் ஆணையை அறிவுரைக் குழுமம் உறுதிப்படுத்தினால் உயர் நீதிமன்றத்தை அணுகி தடுப்புக் காவலில் வைத்தது தவறு எனக் கூறி ஆட்கொணர் மனு தாக்கல் செய்ய கைதி உரிமை உடையவர்.

 நன்றி - கீற்று

சட்டம் சம்மந்தமான (டெக்னிக்கலான ) வார்த்தைகள்!
Will உயில் -- (விருப்ப ஆவணம்)
Testator -- உயில் எழுதியவர்
Executor -- உயில் அமல்படுத்துனர்
Codicil --இணைப்புத் தாள்கள்
Attested -- சரிபார்க்கப்பட்டது.
Probate -- நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி,
உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary / Legatee -- வாரிசு
Intestate -- உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate -- வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act -- இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act -- முஸ்லிம் தனிநபர் சட்டம்
Witness -- சாட்சி
thanks- hello advocate sir