பல பேர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இன்டர்நெட் இணைப்பு வைத்திருக்கலாம் . நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை இணைப்பதற்காக ஒயர்லெஸ் மோடம் பயன்படுத்தலாம் . அப்படி பயன்படுத்துகிற போது ஒரு சின்ன சந்தேகம் வரும், நம்ம ஒயர்லெஸ் இண்டர்நெட்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்று ?
அதை கண்டுபிடிக்க, இதோ எளிய வழி ஒன்று இருக்கிறது,
முதலில் நீங்கள் ஒயர்லெஸ் இண்டர்நெட் பயன்படுத்தும் கணினியில் CMD க்கு செல்லுங்கள்
window key+ R —> டைப் CMD —-> இப்போது உங்களுக்கு கருப்பு நிற CMD திரை காண்பிக்கபடும்
அதில் ipconfig என்று டைப் செய்யுங்கள்
இப்போது Wireless LAN adapter Wifi என்ற தலைப்பின் கீழ் Default Gateway என்று இருக்கும், அதற்கு நேரே உள்ள நம்பரை பார்த்து உங்கள் Browser ளில் அப்படியே டைப் செய்யுங்கள்.
இப்போது உங்கள் ஒயர்லெஸ் மோடதின் கண்ட்ரோல் பனேல் திறந்து காண்பிக்கப்படும்.
அதில் Status என்ற தலைப்பின் கீழ், “Current Connected Wireless Clients number is” என்று காட்டும் .அதற்கு நேரே எதாவது நம்பரும் காட்டும். (கீழே படம் பார்க்க)
அதாவது
தற்சமயம் உங்கள் ஒயர்லெஸ் மோடத்தில் எத்தனை கணினிகள் இன்டர்நெட் இணைப்பை
பயன்படுத்துகின்றன என்ற எண்ணிக்கையின் குறியீடுதான் அந்த நம்பர் .
இதை வைத்து கொண்டு எத்தனை கணினிகள் உங்கள் ஒயர்லெஸ் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு தெரியாத கணினிகள் உங்கள் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துகிறார்கள் என்று , தெரிந்தால் உடனடியாக கடவுசொல்லை மாற்றிவிடுங்கள்