Wednesday, October 8, 2014

நுகர்வோர் தீர்ப்புகள் :


III (2014) CPJ 533 (NC)
விளம்பரம் – வேலை வாங்கி கொடுப்போம் என்ற உத்தரவாதம் – ஒரு course முடித்தபிறகு, சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை, எனவே, தவறான வணிக நடைமுறையை பின்பற்றியதாக முடிவு.

III (2014) CPJ 658 (NC)
நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குக்கு சர்வீஸ் சார்ஜ் உண்டா ? அப்படி ஏதும் விதி இல்லாததால், வங்கியின் சேவை குறைபாடு உறுதி செய்யப்பட்டு, பிடித்த பணம் போக, இழப்பீடும் வழங்கப்பட்டது.
III (2014) CPJ 256
நாம் வங்கியில் புதிய ATM கார்டு வாங்கி விட்டு, பழைய கார்டு ஐ, தூக்கி போடுகிறோம் அல்லது மறந்து விடுகிறோம். அப்போது, உங்கள் பழைய ATM கார்டை வைத்து, யாரும் உங்கள் கணக்கில் பணம் எடுத்தால், அதற்கு யார் பொறுப்பு ? உங்கள் பழைய ATM கார்டு மூலம், பண பரிவர்த்தனை செய்வதை தடுக்க, வங்கிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். அதனால், தவறு வங்கி மேல்தான். தவறாக எடுக்கப்பட்ட பணம் திருப்பி கொடுக்க சொல்லி உத்தரவிடப்பட்டது.

III (2014) CPJ 584 (NC)
நீங்கள் ஒரு பில்டர் வசம் ஒரு ப்ளாட்டை புக் செய்ய, முன்தொகை கொடுக்கிறீர்கள். அவரும் அதை வாங்கி கொள்கிறார். அதன் பிறகு, சில நாள் கழித்து, அவர், உங்கள் booking ஐ, ரத்து செய்கிறார். அப்படியானால், அவர், நுகர்வோர் சட்டப்படி செய்தது தவறு, அது தவிர, நுகர்வோருக்கு, பில்டர் Rs. 2,00,000 தர வேண்டும் என உத்தரவானது.

III (2014) CPJ 582 (NC)
உங்கள் அப்பா ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார், agent மூலமாக. ஆனால், agent, கம்பெனிக்கு, அவர் எடுத்த பழைய பாலிசி பற்றிய விவரம் சொல்லாமல் விட்டு விட்டார். அது, agent தவறு, உங்கள் அப்பா உண்மையை மறைத்ததாக ஆகாது. agent செய்த தவறுக்கு, நீங்கள் பொறுப்பு இல்லை. நீங்கள் இழப்பீட்டு பணம் பெற தகுதி உடையவரே.

III (2014) CPJ 546 (NC)
வண்டி விபத்துக்குள்ளாகி விட்டது – ஆனால், வண்டி, பொது உபயோகத்துக்கு டாக்ஸி ஆக பயன்படுத்தப்பட்டதாக, சுர்வேயோர் தனது ரிப்போர்ட்இல் குறித்துள்ளார், ஆனால், இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது, ஓரிரண்டு, செவி வழி செய்தி தவிர. இன்சூரன்ஸ் கம்பெனி, பணம் கொடுத்துதான் ஆக வேண்டும் என தீர்ப்பு.

III (2014) CPJ 628 (NC)
மருத்துவ சேவை குறைபாட்டிற்காக, Rs. 6,30,60,000 இழப்பீடு கேட்கப்பட்டதால், அவ்வளவு பெரிய தொகையை, நுகர்வோர் நீதிமன்றத்தில் கேட்க முடியாது என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

III (2014) CPJ 528 (NC)
மருத்துவ சேவை குறைபாடு – அறுவை சிகிச்சை சரியாக செய்யப்படவில்லை. மருத்துவமனையில் அதிக காலம் நோயாளி, வேண்டுமென்றே இருக்க வைக்கப்பட்டார். மன உளைச்சல், அதிக பட்ச செலவு, நோயாளிக்கு. அதனால், மருத்துவ சேவையில் குறைபாடு என தீர்ப்பளிக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டது.

III (2014) CPJ 598 (NC)
— Tubectomy சிகிச்சை – மயக்க மருந்து அதிகம் கொடுக்கப்பட்டதால், மயக்க நிலைக்கு நோயாளி சென்று விட்டார். என்ன விதமான சிகிச்சை கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்யும் முன்பே, முதலிலேயே, நோயாளியின் உறவினர்களிடம், மருத்துவ சிகிச்சைக்கு சம்மதம் என்று கையெழுத்து வாங்கியது செல்லாது – இழப்பீட்டு தொகை, கூடுதலாக வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.

III (2014) CPJ 203

போன் அவுட் of ஆர்டர்இல் இருந்தும், உங்கள் தொலைபேசிக்கு, மாதா மாதம், டெலிபோன் மாத வாடகை கட்டணம் மாறி, மாறி வருகிறது. நீங்கள் கட்ட மறுக்கிறீர்கள். பில்லில், போன் அவுட் of ஆர்டர் என்பதால், நீங்கள் பேச வில்லை என்பதால், வெறும் மாத வாடகை மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்பதை வைத்தே, டெலிபோன் நிறுவனம், தனது சேவையில் குறைபட்டோடு வழங்கி உள்ளது, நிரூபணம் ஆகிறது.

நன்றி:

FOR FULL TEXT OF JUDGMENTS YOU CAN SUBSCRIBE TO ONLINE DATABASE @ www.onlinejudgments.com